371. வயல்

k18

வயல்

பாடசாலை செல்லும் வழி

பாதையோர வயலில் புல்லு

பாலர்கள் விளையாடுமொரு காலம்.

பார்த்தால் ஏர் பூட்டுவார்

மழை வந்து சேறாகும்

நெல் விதை தூவுவார்.

குருவிகளிற்கும் தாராள உணவு.

நல் முளையாக வளரும்.

வளர்ந்து பயிராகப் பெண்கள்

களை பிடுங்குவார்கள் காலத்தில்

கதிர் வெளியாகும், அப்பா

கதிர் நெல்லு வெட்டுவார்.

 

இறப்பில் கட்டுவார், காயும்.

கதிரறுத்துச் சூடு மிதித்து

நெல் வீடு வரும்.

விதை நெல் பெட்டகத்துள்.

 

பாதுகாக்கப் படும் நெல்மூட்டைகள்

வருடம் முழுக்க உணவாகும்.

இறப்பில் காய்ந்த கதிர்நெல்

தைப் பொங்கலிற்கு அரிசியாகும்.

தைப்பொங்கல் சூரியனிற்கு நன்றி

கைமேற் பலனான என்

பாலவயதுக் காட்சியிது அப்பா

வயற்காணிகளால் தன்னைக் கமக்காரனென்பார்.

பா ஆக்கம் 

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

7-4-2015.

(இறப்பு – வீட்டுக்கூரையின் சிலாகை.    இறப்பும் சிலாகையும் அகராதியில் தேடினேன் ஒரு வேளை இது நாட்டுப்புறச் சொல்லாகவும் இருக்கலாம்)

Nyt billede

370. மன்மத புத்தாண்டு 2015

101-b

மன்மத  புத்தாண்டு 2015

மணிக்கூடு ஓட நாட்கள் நகருகிறது.
மாதங்கள் உருள வருடம் வளர்கிறது.
வருத்தம் இன்பம் வண்ணம் போல
வருடம் வட்டமாகப் புதிதாகப் பிறக்கிறது.
சுற்றி வந்த புது ஆண்டை
பற்றி ஏறுவோம் வெற்றிக்காய் உயர.
இற்றிசை(இல்லறம்) இன்பமாய் நகர துன்பம்
இற்று வீழட்டும் இனிமை நிறையட்டும்.

அழகிய இதயக் கிண்ணம் நிறையவும்
அதிகார எண்ணம் ஆணவக் கருத்தை
அலசிக் கவிழ்த்து அன்பு நிறைப்போம்.
அகிலம் நமக்கு அணைக்கட்டும் வெற்றியை.
ஆளும் மனதின் மலங்கள் அழித்து
ஆழ் குழிகள் தவிர்த்து நடந்து
சூழும் அன்பை வெறும் அலங்காரமாக்காது
வாழும் நாளை வளமாக்க இணைப்போம்.

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
13-4-2015

****

மன்மத வருடம்  (Anthi maalaikku)

*

மன்மத வருடம் மன்னுயிர் மகிழ்வை
இன்னலின்றித் தரட்டும் இதமாகத் தரட்டும்.
புன்னகை முற்றுப் புள்ளியின்றித் தொடரட்டும்
கன்னலாக சமாதான நதி ஓடட்டும்.
நேசப் பார்வைகள் நெருங்கி அணைக்க
பாசப் பரிவுகள் தலை நிமிர்த்தட்டும்.
வாசத் தமிழின் வசீகரம் உயரட்டும்.
தேச மக்கள் தலைநிமிர்ந்து வாழட்டும்.
வீசிடும் அன்புத் தென்றலில் சகல
நாச மனங்களும் நலிந்தே போகட்டும்
கூசிக் கனியட்டும் தம் செயலால்
ஆசி தரட்டும் இட்ட தெய்வங்கள்.
வருடா வருடம் வேண்டும் பலன்கள்
வஞ்சக மின்றித் தரட்டும் இறைவன்.
வளமும் நலமும் பல்கிப் பெருகி
வாழட்டும் உலக மக்கள் செழிப்பாக.
பா ஆக்கம் 
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
14-4-2015
*
*

thiri

1. நூல் முன்னுரை.

munnu - ajg

sitharal - addai

சுவிற்சலாந்தில் வாழ்ந்த சமீபத்தில் இலண்டனிற்கு இடம் பெயர்ந்த அன்பு நண்பர் – எழுத்தாளர்- செய்தியாளர் – தமிழ் ஆறு இணையவாளர் – கவிஞர் என்று பல உருக் கொண்ட ஏ.ஜே.ஞானேந்திரனின் ” சிதறல்கள் ” நூலின் முன்னுரை.

div138

வாழ்த்தும் அன்பு வார்த்தைகளுடன்

” நிறைநீர் நீரவர் கேண்மை பிறைமதி ”
– அறிவுடையார் நட்பு பிறை நிறைந்து வருதல் போன்றது” என்கிறார் கடுகைத் துளைத்து எழுகடலான கருத்தை குறுகத் தறித்த குறளில் புகுத்தியவர் திருவள்ளுவர்;.
நட்பிற்குரியவர், நாம் ஏஜேஜி என்று அழைக்கும் அருளானந்தம் ஜேம்ஸ் ஞானேந்திரன், அதுவும் அறிவுடையார் நட்பு.
பாசல் சுவிஸ்ல் வாழும் இலங்கைத்தமிழர் இவர் அங்கு தமிழ் ஆசிரியர். இன்னும், எழுத்தாளர், செய்தியாளர், கவிஞர் எனும் பல பாத்திரங்களுக்கு உரியவர்
பல வருடங்களின் முன்பு இலண்டன் ரைம்ஸ் வானொலியில் உருளும் உலகு தலைப்பில் அருளானந்தம் ஜேம்ஸ் ஞானேந்திரன் செய்திகள், தகவல்கள் தொகுத்துத் தந்தார். சிந்தனைக் கருத்துகள், கருத்துத் தொகுப்புகள், நேயர் கடிதம் என்று கலந்து கொண்ட போது குரல் வழியாகவும் அறிமுகமானார்.
ஒரு தடவை டென்மார்க்கிற்கு வருகை தந்த போது இவரை நேரில் எங்கள் வீட்டில் சந்திக்கும் வசதியும் கிடைத்தது.
நான் பாமினி எழுத்துருவில் தமிழை எழுதி வந்தேன். நான் கேட்ட போது யூனிக்கோட்டில் அதை மாற்றக் காட்டித் தந்தவர். மெதுவாகச் சென்ற என் எழுத்துப் பயணம் அன்றிலிருந்து தங:கு தடையின்றிப் பாய்கிறது.
ஆகையால் இவர் மறக்க முடியாதவர், என் தமிழோடு பிணைந்தவர் என்பதை நன்றியுடன் நினைக்கிறேன்.
இன்று இவர் ” சிதறல்கள்” நூல் உருவாக்குவது மிக மகிழ்வு தருகிறது. வேறு இணையம் வைத்திருந்தாலும் தமிழ்6 இணையம் மூலம் கடந்த இரு வருடங்களாக பலரை மகிழ்வித்து வருபவர்.
முத்துக்களாகத் தகவல் சிதறல்கள் தமிழ் ஆற்றில் (ஆறில்) உருளும் உலகில் தெரிந்ததும் தெரியாததும் என்று உண்டா? தமிழ் ஆறில் நீந்தி தீர்வு காணக் கூடியதாக இருந்தது.
கவலையே படாமல் சிரி சிரியென்று சிரிக்கவும் கட்டுரைக் குறிப்புகள் தந்தார். உதாரணமாகப் பாழாகிவிட்ட முகம் என்பதை சமீபத்தில் படித்துச் சிரித்தேன். வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் அல்லவா!
பணச் செலவு, உடற் சிரமமின்றிப் பயணங்களின் கதைகளையும் தொகுத்துத் தந்தார். பயணம் பயணிப்பது போன்ற உணர்வைத் தந்தது.
போர்த்துக்கல், இலங்கைப் பயணங்களையும் படித்துள்ளேன். ஆர்வம் தருவதாகவும் இது எனக்கும் மிகவும் பிடித்திருந்தது.
மரக்கறிகள் தானியங்கள், நோய்கள் என்பவை பற்றியும் ஆர்வமாக வாசித்துள்ளேன்.
இவர் தொடாத தலைப்புகள் இல்லையெனலாம்.
பொருளாதாரம், விஞ்ஞானம், அரசியல், ஆன்மீகம், அதிசயத் தகவல்கள், சினிமா, இயற்கை போன்ற பல தலைப்புகளில் எழுதித் தன் திறமையை வெளிக் கொண்டு வருகிறார். இவைகளிற்கு ஏற்ற படங்களையும் தேர்ந்தெடுக்கிறார்! அருமை! இது மக்களை மிகவும் ஈர்க்கிறது.
உதாரணமாக நிறங்கள் பற்றி ஆச்சரியம் நிறைந்து இவர் எழுதிய தகவலில் நான் குறிப்புகள் எடுத்து வைத்திருந்து, சிவப்பு தலைப்பில் கவிதை எழுதும் போது அதையும் சிறிது பாவித்தேன்.
ஓடிவிளையாடு பாப்பாவிலிருந்து பெரியவர்கள் வரை பயன் பெறும் தளமாக தமிழ்6 ஓடியதை சிதறல்களாகத் தொகுப்பது அருமையான சிந்தனை விரிவு தான்.
இந்த நூல் மக்களிடம் பரவிப் பெருமை பெறட்டும். தங்கள் முயற்சி இனிது நிறைவேற என் மனமார்ந்த வாழ்த்தையும் கூறுகிறேன்.
இது போன்று பல நூல்கள் விரியட்டும் என்று வாழ்த்துகிறேன்.

அன்புடன்
வேதா. இலங்காதிலகம்
(ஓய்வு பெற்ற பெட்டகோ)
டென்மார்க்
4.6.2014.
இணையம்:- வேதாவின் வலை.

54. படகு வீடு.

padaku-10-a

படகு வீடு.

பனியில்லாக் கூடு படகு வீடு
இடம் சிறிது அடடா! அற்புதம்!
வித்தியாச இருப்பிடம் விந்தை அனுபவம்.
நீரில் மிதக்கும் மீன்களாக நாங்கள்.

சேலாட்டம் நீரினுள் நீராட்டம் தென்றலால்.
தாலாட்டும் நீரலைகள் எமதாட்டம் படகினுள்.
தேசுடை இயற்கை தேனடையான கூடு.
தேனூறும் நிலவு தேனான அனுபவம்.

தண்ணீர் படை சூழ்ந்து தரையாக
தாரகைகள் வெள்ளி முறுவல் விரிக்க
அம்புலி இல்லாத வானில் அம்சமாய்
நம் அன்பு ஒளி நிலவானது.

மெல்லிசை அலை தவழ்ந்து படகு
இல்லம் நிறைந்தது. புனிதம் பின்னி
மெல்ல மெல்லக் கவிதை நெய்தது.
சொல்லவியலா உணர்வுகள் உள்ளம் நிறைத்தது.

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
10-4-2015

(தேசுடை – ஒளியுடை. தேனடை- தேன கூடு)

imagesCAX5K52V

369. நயம் விரும்பும் மனம்.

1624120_837066546319679_553006463_n

நயம் விரும்பும் மனம்.

நயம் ஒன்றே விரும்பும் மனம்

யெயம் காணத் துடிக்கும் தினம்.

பயமற்ற தன்னம்பிக்கைத் தூணெனும் மனம்

சுயமழியாது காக்கும் தனம்.

இன்ப மேகங்கள் சுகமான சுமையாய்

அன்பின் இராகமாய்  புது அனுராகமாய்

இன்னிதழ்களின் எழில் மிகு நடனத்தில்

மென்னகைப்பது கண்களில் நிதரிசனம்.

வினைமனத் தினப் போரின் வில்லங்கப்

பினைதலில் விதி யென்று கூறிடும்

புனையால் மனம் இறுகிடும். இளகிய

நினைவு இன்பம் சேர்ப்பதியல்பு.

 

பா ஆக்கம் 

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

30-3-2015

9gwqyfjpg3

368. stsstudio.com 3 வருட வாழ்த்து.

3aa87b7d_o

stsstudio.com 3 வருட வாழ்த்து.

ஊடகப் பணி உன் பணி

ஆடல் இடம் உயரட்டும்!

பாடல்களும் அணியாக வளரட்டும்!

தேடல்களும் ஊடலின்றிச் சிறக்கட்டும்!

மூன்று வருட அகவை

முன்னூறாக சிகரம் தொடட்டும்!

சிறுப்பிட்டியாய் என்னுள் நீ 

சிறுகச் சிறுகப் புகுந்தாய்!

இணையச் சேவை எஸ்ரிஎஸ்.கொம்

இணையின்றி வளர்க! வாழ்க!

சோபிதமாய் சமுதாய சேவை

சோர்வு இன்றித் தொடர்ந்து

கவிஞர் கலைஞர் களமாகி

கதிரொளி பரப்பிடும் ஞாலத்தில்.

கஞ்சமற்ற சேவை மா

கடலாகப் பெருகி வாழும்!

உனை வாழ்த்துபவள்

 

 

பா வானதி

வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

5-4-2015

16483711086_5e9d5432f1_z1

எத்தனை வயதானாலும் நீயென்
பத்தரை மாற்றுச் செல்லமே.
இத்தனை காலம் வாழவைத்த
அத்தன் அவனுக்கு நன்றி.
சொத்தாம் பேரக் குழந்தைகள்
சூழ ”..ஆ..” வென்னடா என்
அன்புச் செல்லமே! நீ!.
ஆரோக்கியமாய் நீடு வாழ்க!  ( In vallamai…)

Vetha.Langathilakam

Sparkle_up_your_life_with_happiness_have_a_Mastiful_Dhamakedar_Diwali_pp-ll

17. துள்ளுங்கள் துள்ளுங்கள்

mine3 179

துள்ளுங்கள் துள்ளுங்கள்

(உங்கள் குழந்தைகளின் பெயரை மாற்றிப் பாடுங்கள்)

துள்ளுங்கள் துள்ளுங்கள் வெற்றி
துணிந்து நீங்கள் துள்ளுங்கள்
துன்பம் போகும் துள்ளுங்கள்
துடிப்பாய் நீங்கள் துள்ளுங்கள்.

ர(ற)ம்பொலினில் துள்ளுங்கள்
ரம்மியமாகத் துள்ளுங்கள்
கால்களில் பலம் பெருகும்
களிப்பாய் நீங்கள் துள்ளுங்கள்.

இரத்தம் நன்றாய் ஓடும்
இலகுவாகும் சுவாசம் உடல்
சுறுசுறுப்பு சுகத்திற்காய் தினம்
துள்ளுங்கள் துள்ளுங்கள் துள்ளுங்கள்.

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
5-4-2015
(இப்படிப் பாடுவதால் அவரும் ஏதும் செய்யும் போது பாடியபடி செய்கிறார்)

1424422_773891019303899_1021719375_n99

Previous Older Entries Next Newer Entries