4. வாழ்த்தும் விழா

பதிவுகள்

 Pathivukal.com

ஓகூஸ் நகரில் எழுத்தாளர் வேதா இலங்காதிலகம் அவர்களுக்குப் பாராட்டு விழா!

Sunday, 26 April 2015 00:12 தகவல்: வேதா இலங்காதிலகம் நிகழ்வுகள்

pathivukaaaal

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=2666:2015-04-26-05-18-25&catid=15:2011-03-03-19-55-48&Itemid=29

பதிவுகள் இணையத்திற்கு என் மனமார்ந்த நன்றி உரித்தாகட்டும்.

¨muthu-l

முத்துக் கமலம் இணையத்திற்கு என் மனமார்ந்த நன்றி உரித்தாகட்டும்.

http://www.stsstudio.com/?p=8119

2zxDa-1muzO-1-300x300

நாளைய தினம்(02-05.2015) பிற்பகல் 14.00 மணிக்கு நான் வசிக்கும் டென்மார்க் நாட்டில் உள்ள ‘ஓகூஸ்’(Aarhus) நகரத்தில் இயங்கிவரும் ‘ஓகூஸ் தமிழர் ஒன்றியத்தினர்’ அதே நகரத்தில் கடந்த 25 வருடங்களுக்கு மேலாகத் தமிழ்ப் பணியும், கவிப் பணியும் ஆற்றி வரும் கவிதாயினி, எழுத்தாளர் எனப் பன்முக ஆளுமை கொண்ட, ‘கோவைக்கவி’ என்னும் புனை பெயரில் எழுதி வரும் திருமதி.வேதா இலங்காதிலகம் அவர்களின் எழுத்துப் பணியை விழா எடுத்துப் பாராட்டிக் கௌரவிக்க உள்ளனர் என்னும் மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் அடைகிறேன்.

மேற்படி விழாவில் கலந்து கொண்டு கவிதாயினியை வாழ்த்தும் வாய்ப்பு ‘அந்திமாலை’ இணையத்தின் ‘ஆசிரியர்’ என்ற வகையில் அடியேனுக்கும் கிடைத்துள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன். கவிதாயினி வேதா இலங்காதிலகம் அவர்கள் கடந்த 25 வருடங்களாக ஓய்வு ஒழிச்சல் இன்றிக் கவிதைப்பணி செய்து வருகிறார். அவரது கவிதைகளைப் பல இணையத் தளங்களும், வானொலிகளும், வலைப் பூக்களும் நூற்றுக்கு மேற்பட்ட தடவைகள் வெளியிட்டுக் கெளரவித்துள்ளன.

அது மட்டுமன்றி அவர் டென்மார்க்கில் ‘உணர்வுப் பூக்கள்’ ‘வேதாவின் கவிதைகள்’ ஆகிய கவிதைத் தொகுப்புகளையும், “குழந்தைகள் இளையோர் சிறக்க” என்ற தலைப்பில் ஒரு உளவியற் சிந்தனை நூலையும் வெளியிட்டுள்ளார். இவை மாத்திரமன்றி டென்மார்க்கில் முதல் முதலாக ‘கவிதை நூல்’ வெளியிட்ட தமிழ்க் ‘கவிதாயினியும்’, டென்மார்க்கிற்கு 80 களில் குடிபெயர்ந்த தமிழர்களில் முதன் முதலாக ‘குழந்தைகள் ஆசிரியப் பட்டம்’(Degree of Kindergarten Professional) பெற்ற தமிழ்ப் பெண்மணியும் இவரே என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

இத்தகைய பெருமைகள் கொண்ட பெண்மணியைக் கௌரவிப்பது என்பது தமிழுக்குப் பெருமை சேர்க்கும் ஒரு செயல் மட்டுமன்றி, பொருத்தமும் நீதியும், தகுதியும் ஆன ஒரு செயலே ஆகும். மேற்படி நிகழ்வை ஒழுங்கு செய்திருக்கும் ஓகூஸ் தமிழர் ஒன்றியத்தினர் புதியதொரு கொள்கையைக் கையில் எடுத்துள்ளனர். “திறமையாளர்களைத் தேடிப் பாராட்டுவதே புதிய திறமையாளர்களை உருவாக்கும் சிறந்த வழி” என்பதே அந்தத் தாரக மந்திரமாகும். இது நல்லதொரு நேர்மறையான முயற்சி என்பது அடியேனின் அபிப்பிராயம். இது நிச்சயம் வெற்றி பெறும் என்பதுடன் இவை தமிழ்ச் சமூகத்தையும், கலைஞர்களையும் வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

இத்தகைய விழாக்கள் எமது புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தில் மட்டுமன்றி, உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் பேசும் மக்கள் மத்தியில் அடிக்கடி, பரவலாக இடம்பெற வேண்டும் என்பதே என் போன்றவர்களின் பேராவல். ஒவ்வொரு கலைஞரும் அவர் வாழும்போதே கௌரவிக்கப் படல் வேண்டும் என்பதில் உங்களுக்கும் மாற்றுக் கருத்து இருக்காது என்று உறுதிபட நம்புகிறேன்.

என்று அந்திமாலை ஆசிரியர் லிங்கதாசன் முகநூலில் கொடுத்த அறிவித்தலை இங்கு வாழ்த்தாக எஸ்ரிஎஸ் இணையம் தந்துள்ளது.
இவர்களிற்கும் மிகுந்த நன்றி உரித்தாகுக.

 

http://www.stsstudio.com/?p=8149

 

திருமதி.வேதா இலங்காதிலகம் அர்களுக்கு பாராட்டுவிழாவுக்கான வாழ்த்துக்கள் எஸ்.ரி.எஸ்.இணையம்

Posted By Admin On 2nd May, 2015. Under Uncategorizedஈழத்து கலைஞர்கள்வாழ்த்து  

ddb2e17a-c673-478e-ac81-c468ea8bba29

 

டென்மார்கில் இன்றய விழா நாயகி திருமதி.வேதா இலங்காதிலகம் அர்களுக்கு பாராட்டுவிழாவுக்கான வாழ்த்து
தாதனை படைத்த பெண் அவர் .

சாதித்த சாதனைக்கு இந்தப்பாராட்டு அவருக்கான கௌரவத்தை கொடுத்து நிற்கின்றது உகந்த நேரத்தில் இதற்குரியவர்கள் இவருக்கு பாராட்டு வழங்குவதையிட்டு மகிழ்சியும்.இந்த பாராட்டுக்குழுவுக்கு வாழ்த்துக்களுடன் விழா நாயகி திருமதி.வேதா இலங்காதிலகம் அவர்களுக்கு பாராட்டுவிழாவுக்கான வாழ்த்துக்கவிதையை இணைக்கிறோம்:

வண்ணத்தமிழதனில் வடிவாகக் கவிவடிக்கும்
எண்ணமது வானமதில் சிறகடித்து 
கற்பனையாய் உயர்ந்து நிற்கும்

வஞ்சி உன் எழுத்தாற்றல் 
வளமுள்ள சேதிசொல்லும்
வந்து தினம் இணையத்தில்
கவியாக பதிவேறும்

சிந்தை தனில் சிறப்பாற்றல்
சேதிசொன்னால் கருத்தாற்றல்
அஞ்சி நிற்கா வரியாற்றல்
ஆற்றல் உள்ள சிறப்பாற்றல்

பாராட்டால் உனக்கில்லை பெருமை 
பயிந்தமிழுக்கே நீ தந்த பெருமை
ஊர் சொல்லித் தந்ததில்லை எழுத்தாற்றல் கடமை
ஊர்வாழ்த்த ஏற்றுகொள்வாய் அது உன் கடமை

பார்போற்றும் இன்று உன்னைஅதற்கு
பணிசெய்தாய் நீ பெருமை
நாம்வாழ்த்தல் அது உன் திறமை
நல்லோர்கள் வாழ்த்த இன்னும் பணிசெய் உன் கடமை

வாழ்த்திநிற்கும் எஸ்.ரி.எஸ்.இணையம், இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல்

6bb4b6c7-1357-44c1-a319-385e98179e90

சிறுப்பிட்டி எஸ்.‌தேவராசா திருமதி:சுதந்தினி.தேவராசா

 

 

Sparkle_up_your_life_with_happiness_have_a_Mastiful_Dhamakedar_Diwali_pp-ll

8 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. T.N.MURALIDHARAN
  மே 02, 2015 @ 08:21:49

  வாழ்த்துகள் மேடம் உங்கள் தமிழ்ப்பணி சிறக்கட்டும்

  மறுமொழி

 2. thanimaram
  மே 02, 2015 @ 11:11:37

  வாழ்த்துக்கள் வேதா அக்காச்சி! மேலும் தமிழ்ச்ச்சேவை தொடரட்டும்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 12, 2015 @ 12:50:48

   வாழ்த்தும் உங்கள் நல்ல மனதிற்கு நன்றி.
   மிக மகிழ்ச்சி தங்கள் பகிர்விற்கு..
   அதோடு உங்கள் வலையிலும் வந்து கருத்து இட்டு விட்டேன்.
   அப்பாடா!……….
   நிம்மதி!….

   மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  மே 03, 2015 @ 02:03:16

  மிக்க மகிழ்ச்சி… வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 4. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  மே 04, 2015 @ 15:17:20

  வணக்கம்
  மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்..
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: