374. கலைப்பித்து – துருவங்கள் இரண்டு உள்ளங்கள் ஒன்று

11212317_828493147204886_734930307_n

வல்லமை படக்கவிதை 11 ன் வரிகள். 

1.   கலைப்பித்து

நேர்த்தியாயொரு மாளிகை நான்

வார்த்து முடியும் வரை

பார்க்காது இந்தப் புறம்

சேர்த்திடு காதல் வரிகள்.

காதல் பித்தம் ஏறியும்

கலைப் பித்து முற்றிட

காவற்காரனாய் நீ மாற

ஆவல் தீர்க்கிறேன் நான்.

பா ஆக்கம் 

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

8-5-2015.

வல்லமை படக்கவிதை 11 ன் வரிகள். இந்தத் தடவை பாராட்டுப் பெற்ற வரிகள் கீழே குறிப்பிட்டுள்ளேன்:-

http://www.vallamai.com/?p=57380

புவியிலே நான் மணல்மாளிகை கட்டுகிறேன், நீ அப்புறம் திரும்பி (அலைபேசியில்) ஓர் கவிமாளிகை கட்டேன்!” என்று காதலனுக்கு யோசனை சொல்லும் காதலியைக் காண்பிக்கும் திருமிகு. வேதா. இலங்காதிலகத்தின் வரிகள்

வார்த்து முடியும் வரை

 பார்க்காது இந்தப் புறம்

 சேர்த்திடு காதல் வரிகள்.

 காதல் பித்தம் ஏறியும்

 கலைப் பித்து முற்றிட

 காவற்காரனாய் நீ மாற

 ஆவல் தீர்க்கிறேன் நான்.

*****

2.  துருவங்கள் இரண்டு உள்ளங்கள் ஒன்று

மணற் சிற்பமொரு புறம் இங்கே

அணங்கயர்தல் அழகு காண்! அங்கே

உணர்வுடன் நீ வரையும் பா

கணக்காயுலகக் கார் விரட்டட்டும்.

உன் ஆதரவு எனக்கு என்றும்

என் ஆதரவு உனக்கு! இனி

நம் கலைகள் வளர எது

எம்மைத் தடுக்கும் சொல்!

(அணங்கயர்தல் – விழாக் கொண்டாடுதல்)

பா ஆக்கம் 

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

8-5-2015

vector_146.cdr

9 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. yarlpavanan
  மே 13, 2015 @ 22:46:07

  படங்களும் பாவரிகளும் நன்று
  தொடருங்கள்

  மறுமொழி

 2. முனைவர் ஜம்புலிங்கம்
  மே 14, 2015 @ 01:26:32

  நல்ல ரசனை. அதற்கேற்ற வரிகள். நன்று.

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  மே 14, 2015 @ 01:58:11

  ரசித்தேன்…

  மறுமொழி

 4. Killergee
  மே 14, 2015 @ 03:42:42

  வரிகள் அருமை சகோ வாழ்த்துகள்.

  மறுமொழி

 5. கோவை கவி
  ஆக 08, 2015 @ 15:57:42

  You, Loganathan Ratnam, Arunthathy Loganathan, வசந்தா சந்திரன் and 12 others like this.

  Subajini Sriranjan அழகான வரிகள்..
  காதலும் கலையும் உங்கள் கவிதையிலே ….
  May 13 – 2015.

  சி வா தங்கள் எழுத்துக்களால் தமிழ்
  அணங்கயர்கிறது..

  அருமை வேதாம்மா..
  May 13

  Vetha Langathilakam Suba – Siva மிக மகிழ்வும் நன்றியும் தங்கள் வரிகளையிட்டு.. God bless you all.
  May 13

  Alvit Vasantharany Vincent வாழ்த்துக்கள் சகோதரி. கவிதைகள் அழகு.
  May 13

  Vetha Langathilakam Dear Alvit .V மிக மகிழ்வும் நன்றியும் தங்கள் வரிகளையிட்டு.. God bless you all.
  May 13

  Ratha Mariyaratnam அருமை சகோதரி
  May 14

  Vetha Langathilakam மகிழ்வும் நன்றியும் Ratha…
  May 14

  மறையூர் மு.பொ.மணியின் பாக்கள் வார்த்து முடியும் வரை
  பார்க்காது இந்தப் புறம்
  சேர்த்திடு காதல் வரிகள்.
  காதல் பித்தம் ஏறியும்
  கலைப் பித்து முற்றிட
  காவற்காரனாய் நீ மாற
  ஆவல் தீர்க்கிறேன் நான்.மீயழகான பா
  May 14

  Rathy Mohan அழகோ அழகு வரிகளில் கலையும் காதலும்…
  May 14

  Kannan Sadhasivam காவற்காரணாய் இரு….வாழ்த்துக்கள்.
  May 14

  Sujatha Anton தலைப்பில் புரிதலை வெளிப்படுத்தி, புகைப்படத்தில் எடுத்துக்காட்டி,
  அற்பத வரிகளால் கட்டிய மணற்கவிநயம். அருமை… வாழ்க தமிழ்.!!!!
  May 18 -2015

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: