376. வணங்கி வாழலாம்!

வணங்கி வாழலாம்!

***

பூவினை ஒன்றொன்றாய் மாலையில் தொடுத்துப்

பாவினைப் பண்ணாகப் பாடித் தொழுது

என்வினை தீர இறையை வணங்கி

வாழ்வினையொரு சுப வினையாக்குதல் நோக்கு!

***

 

அன்பினைப் பெற அருகினில் நெருங்கி

அறிவினை வளர்க்க ஆய்வினை நகர்த்தி

உயர்வினைத் தாருமெனப் பாவினை ஆக்கத்

தேய்வினை எண்ணாது அறிவினைத் தீட்டலாம்!

***

 

தீங்கினைப் பாங்காக விலக்கி நம்முள்

தேங்கிட நல்லவை நிறைத்துத் திருப்தியாய்

ஓங்காரனை, காங்கேயனை ஓயாது துதித்துப்

பூங்காவென வாழ்வைப் பயமின்றித் தேடலாம்!

***

 

குயவனைக் குவலயம் அமைத்த குருபரனின்

தயவினைத் வேண்டித் தலைவணங்கி

அருளினைத் தாருமென அன்பினைக் கொட்டி

ஊழ்வினை, பாவவினை உதறிட வணங்கலாம்!

***

 

பா வானதி வேதா. இலங்காதிலகம்

டென்மார்க்.
17-5-2015

2683852taf9ikr3qe

8 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  மே 18, 2015 @ 02:51:04

  // நல்லவை நிறைத்துத் திருப்தியாய் // அருமை…

  மறுமொழி

 2. Killergee
  மே 18, 2015 @ 04:52:25

  நல்லதை நினை நன்மை நடக்கும் அருமை சகோ.

  மறுமொழி

 3. முனைவர் ஜம்புலிங்கம்
  மே 18, 2015 @ 15:06:15

  ரசித்தேன். நன்றி.

  மறுமொழி

 4. கோவை கவி
  ஆக 08, 2015 @ 15:48:58

  You, Sujatha Anton, Loganathan Ratnam, Ratha Mariyaratnam and 9 others like this.

  Sujatha Anton :-
  அன்பினைப் பெற அருகினில் நெருங்கி

  அறிவினை வளர்க்க ஆய்வினை நகர்த்தி

  உயர்வினைத் தாருமெனப் பாவினை ஆக்கத்

  தேய்வினை எண்ணாது அறிவினைத் தீட்டலாம்!
  அருமை…. வணங்கி வாழலாம். வாழ்க தமிழ்.!!
  May 9 .2015

  Vetha Langathilakam:-
  மனம் மகிழ்ந்தேன் Sujatha Anton
  என் இனிய நன்றி உரித்தாகுக.

  மறுமொழி

 5. கோவை கவி
  மே 08, 2021 @ 06:42:12

  Ratha Mariyaratnam
  அனைத்து வரிகளும் மிக அர்த்தம் கொண்டவை

  2015

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: