9. பாராட்டு விழா- 2015.

திருவாளர் நடிக விநோதன் T. யோகராஜாவின்

வாழ்த்துக் கவிதை.

இக்கவிக்காய் இந்தக் கவியொரு கவி காவிவந்தேன்
கம்பனல்ல, நான் காசி ஆனந்தனல்ல,
தெம்பு தரும் குறள் தந்த திருவள்ளுவன் அல்ல,
கண்ணதாசனும் அல்ல நானொரு வம்பன்.
கருவாட்டுக் கறிக்குள்ளே கத்தரிக்காயிடுவது போல்
தெருவோரம் படுத்த என்னைத் திடீரென இழுத்து வந்தார்
நடக்கும் போது என் நினைவில் நடிப்பு
கவிதைகளில் எனக்கு நல் விருப்பு
அதனால் தான் எனக்கின்று அழைப்பு
பூக்கூடையாய் மணம் வீசும் புத்தியுள்ளோர் சபைதனிலே
சாக்கடைக்கு ஏனளித்தார் சந்தர்ப்பம்!
சாக்கடை நீரையும் இச் சமுத்திரம் சேர்க்கும்.

வெள்ளை மயிர்கள் வேர்வையெனும் பெயரில்
கண்ணீர் வடிக்கின்றன
கள்வர் தங்களைக் கறுப்பால் மறைக்கிறார்களே என்று
உடல் வெள்ளையானால் விருப்பு
மயிர் வெள்ளையானால் வெறுப்பு
எனக்கும் கறுப்பைப் பிடிக்கும் அதனால் தான்
காதலித்தேன் கரம் பிடித்தேன்
கலைஞன் என்றெண்ணிக் காதலித்தாள்
கயவன் எனைக் கண்டாள் கலங்குகிறாள்
முகத்தையும் மூக்கையும் தான் பார்த்தாள்
அகத்தைப் பார்க்காமலே அகப்பட்டுக் கொண்டாள்
கலை கலையென்று செல்வத்தைக் கரைத்து விட்டாயே
வாழ்க்கையில் உயர வழியென்னவென்று கேட்டாள்
பிரிந்திரு இல்லையேல் பென்சனெடு, பிள்ளைக் காசு
டபிள் என்றேன். நோயின்றிப் பென்சன் கேட்க
நோகாதா மனம் என்றாள் வாயோடு சேர்ந்த
வலுவான நடிப்பும் போதும் என்றேன்.
நாடறிந்த நடிகனுக்கு முடியாதா என்றாள்.
பாத்திரங்கள் பல சுமந்தும், பென்சன் எடுக்கும்
சூத்திரத்தை மட்டுமெவனும் சொல்லவில்லை என்றேன்.
வேலையே நன்றென்றாள் விட்டு விட்டேன்.
பேதை பிழைக்கத் தெரியாதவள்.
உழைத்துத் திளைப்பது நடக்கும் காரியமா!
இத்தனையும் சிரிப்புக்காய், இனிச் சகோதரியின் சிந்தைக்காய்.

அவையோரின் வாழத்;தோடு அமர்ந்திருக்கும் கவியே
அளப்பரிய மகிழ்ச்சி அடியேனுக்கு
அடுப்பூதும் மங்கையர்க்கு அவையேன் என்றெண்ணித்
தடுத்தோரின் சொல்லைத் தகர்த்தெறிந்தாய்
ஊருறங்கும் நோத்திலிலுன் பேனா எழுந்து நின்று
சீர் கவிதை தந்ததனால் உன்கின்று சிம்மாசனம்!
கழுத்துக்கணி சேர்க்கும் காரிகைகள் மத்தியில் நீ
எழுத்துக்கு அணி சேர்த்து ஏற்றம் பெற்றாய்!
திலகம் உன் நெற்றியில் இட்டது
திலகம்! ஆதனால் கலகம் இல்லாத வாழ்க்கை!
எதுகை போல் கணவன் இருப்பதால் தானே
பதுமையே நீயும் மோனை பெறுகிறாய்!
சீர் கொண்ட வாழ்வாலே சிறப்புப் பெறுகிறாய்!
அடி வைத்தாய் மக்கள் மேல் அன்பு வைத்தாய் -உன்தமிழின்
பிடிப்பால் அவரும் பின் தொடர்ந்தார்.
ஆண்களிற்கு வராத கற்பனைகள் அணங்குகளிற்கு வருவதனால்
பெண்களைத் தான் பொன்னுக்கும் பிடிக்குமோ!
கார் ஓட்டும் போதும் சமூகத்தின் காரோட்டும் சிந்தனை
தான் உனக்கு அதனால் தான்
”தலை நிமிர்ந்திடு தமிழ்ப் பெண்ணே1” என்றாய்
தாங்க முடியாத பாரத்தில் தாலிக்கொடி போட்டுத்
தலை குனிவதற்கு நாங்களா பொறுப்பு!
முன்பு தாலியே பெண்களிற்கு வேலி என்றார்
இன்று உயிர் காலியாவதற்கும் தாலியே காரணம்!

வேலை, வீடு, குழந்தைகள், குட்டிகள்
சாலையில் நெரிசல் எத்தனை சங்கடம்!
குடிகாரக் கணவனென்றால் கும்பிடு போட வேண்டும்!
பேய் போல மனைவி வாய்த்தால் வீட்டிலே
அடி வாங்கி, வெளியிலே நடிக்க வேண்டும்!
இத்தனைக்கும் மத்தியிலும் ஏனோ தானோவென்று
எழுதாமல் பேனை பிடிக்க வேண்டும்!
எத்தனை சிரமம் எழுத்தாளருக்கு!

அன்புச் சகோதரியே!
பாவை உன் பாவைப் படித்தேன்! உன்
நோவையும் எழுதினாய் சிலதுக்கு ” நோ வே” என்றும் எழுதினாய்!
கற்ற தமிழே கவியாக வந்தது.
கொற்றவனும் பணிவது கற்றவனைத் தானென்று
மற்றோர்க்குச் சொல்ல மனதால் நினைத்தாய்!
வெறும் கதைகள் பேசாதே வேதாவே! – மேலும்
அருங் கவிகள் தந்து இன்பத்தில் ஆழ்த்து!
நினைத்ததை முடிக்கும் நெஞ்சம் கொண்டவளே! –உன் கைகள்
இனித்திடும் கவிகளை எழுதிக் குவிக்கட்டும்!
கதியில்லாத் தமிழர்க்கு உன் கரங்கள்
கவிகளால் விதி எழுதட்டும்! நீ வாழ்க!

நடிக விநோதன் திரு. T. யோகராஜா.-
டென்மார்க்.
2-5-2015

Sparkle_up_your_life_with_happiness_have_a_Mastiful_Dhamakedar_Diwali_pp-ll
.

13 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Killergee
  மே 19, 2015 @ 09:25:49

  வாழ்த்துப்பா வரிகள் பிரமிப்பூட்டின வாழ்த்துகள்.

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  மே 20, 2015 @ 02:44:16

  இனிய சகோதரியின் சிந்தனைக்கு வாழ்த்துகள்…

  மறுமொழி

 3. கவியாழி கண்ணதாசன்
  மே 20, 2015 @ 05:26:30

  அன்புச் சகோதரியே!
  பாவை உன் பாவைப் படித்தேன்! மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்

  மறுமொழி

 4. yarlpavanan
  மே 20, 2015 @ 06:52:39

  நன்றாக அலசி உள்ளீர்கள்
  சிறந்த பாவரிகள்
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  மறுமொழி

 5. கோவை கவி
  மே 21, 2015 @ 19:04:32

  மறுமொழி

 6. கோவை கவி
  மே 21, 2017 @ 08:34:20

  Illango Yogarajah
  21 May 2015 at 18:36 ·
  தந்தையின் கவிதை.
  என் மனதையும் கொள்ளை கொண்டது.
  மதிப்புக்குரிய கவிஞர் திருமதி வேதா இலங்காதிலகத்திக்கு மிகவும் பொருத்தமான வரிகள்.
  ( கழுத்துக்கணி சேர்க்கும் காரிகைகள் மத்தியில் நீ
  எழுத்துக்கு அணி சேர்த்து ஏற்றம் பெற்றாய்! )
  Vetha Langathilakam Yoga Thambirajah
  தந்தையின் புகழ் பாடுவதற்காக அல்ல. நல்ல சிந்தையை பகிர்வதற்காக.

  மறுமொழி

 7. கோவை கவி
  மே 21, 2017 @ 08:37:07

  Anpumyl Thangavadivelu :- கவிதை என்றால் அப்பா
  அப்பா என்றால் கவிதை
  21 May 2015 at 19:50

  Illango Yogarajah:- அப்பப்பப்பா சூப்பரப்பா .-) avt Avt Dtsf
  · 21 May 2015 at 20:09

  Sivarajan Sarasananthan:- பாராட்டுகள் இவ் அருமைக்கவிக்கு:கருவாட்டுக் கறிக்குள்ளே கத்தரிக்காயிடுவது போல்
  தெருவோரம் படுத்த என்னைத் திடீரென இழுத்து வந்தார்
  நடக்கும் போது என் நினைவில் நடிப்பு
  கவிதைகளில் எனக்கு நல் விருப்பு
  அதனால் தான் எனக்கின்று அழைப்பு,அது தான் இயற்க்கையின் படைப்பு,கலைஞ்ன் படைக்கப்பட்டவன்.
  21 May 2015 at 20:26.

  Nagalingham Gajendiran :- பண்டைத் தமிழ் காப்பியத்தில் பாவலர்கள் பல்லாயிரமாம்- ஐயம் அற கண்டதில்லை எந்தன் விழி – அன்று அகம் மகிழ கண்டு கொண்டேன் – என்றென்றும் நீயே கவி !!!
  21 May 2015 at 20:44

  Vk Selvam :- மிக மிக அருமை வாழ்த்துக்கள்
  · 21 May 2015 at 20:52

  Vetha Langathilakam:- மிக்க நன்றி இளங்கோ….and all of you…
  · 21 May 2015 at 21:01

  மறுமொழி

 8. கோவை கவி
  மே 21, 2017 @ 08:39:18

  Ruba Sothilingam :- அருமையான கவி வரிகள் . இக் கவியின் நாயகனே Yoga அண்ணா வாழ்க பலநூறாண்டு
  No automatic alt text available.
  22 May 2015 at 07:02

  Pragashthan SP :- அருமை; அருமை..,வாழ்த்துக்கள்..
  · 22 May 2015 at 07:35

  Ikumaran Kumaran:- Congratulations Bro nadippile nee thillakam thilakaththin kavijil nee or sikatam
  22 May 2015 at 08:43

  Sundareyarkai Isaimazhai :- உலக கவிஞர்
  12 July 2015 at 03:32

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: