377 . ஊடகவியலாளர் நடுநிலைவாதிகளா!

Untitled59

ஊடகவியலாளர் நடுநிலைவாதிகளா!

***

ஊடுருவி சமூகத்தின் ஊத்தை

ஊழல் இன்பம் அனைத்தும்

ஊதும் ஒரு பொதுநலவாதி

ஊடகவியலாளன் ஒரு நடுநிலைவாதி.

ஊதுகுழலன்ன அவன் ஊடகத்தால்

ஊதுதலே  அவன் தொழில்

ஊடல் கொள்ளான், விலகான்

ஊழியமே அவன் முத்திரை.

***

 

பென்னம் பெரிய பொதுநலம்

அன்னவமன்ன மன நிலையும்

அன்னக்காவடி அற்ற சிந்தையும்

அன்பு, காதல், நேசமாம்

இன்ன பல பொதுமையாளர்

சின்னத்தன நினைவால் தடைப்படார்.

ஒன்னார் நிலை வளர்க்கார்.

இன்னணம் எல்லோரும் இருப்பாரா!

***

தயாள நோக்கு அழித்து

வியாபார சிந்தை பெருத்து

மயான மனம் வளர்த்து

சுயாதிபதியாய் நியாயம் இழப்பதற்கு

வியாக்கியானம் தேவையன்று எங்கும்

வியாபிக்கும் நோய் இது.

தியாகம், நற்குணம் தேவையா!

தீரனாய் வாழ்தல் போதுமா!

***

(அன்னவம் – கடல்.  அன்னக்காவடி – வறுமை. ஓன்னார் – பகைவர்.  இன்னணம். இவ்விதம். சுயாதிபதி – தனியாட்சி செலுத்துபவன்.) 

 பா ஆக்கம் 

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

9-5-2015.

 

vector_146.cdr

Advertisements

13 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. கில்லர்ஜி
    மே 21, 2015 @ 15:18:49

    அருமையான கருத்துக்கள் வாழ்த்துகள் சகோ

    மறுமொழி

  2. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
    மே 21, 2015 @ 16:46:30

    வணக்கம்

    சொல்லிச் சென்ற விதமும் முடித்த விதமும் வெகு சிறப்பு பகிர்வுக்கு நன்றி.சகோதரி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    மறுமொழி

  3. திண்டுக்கல் தனபாலன்
    மே 22, 2015 @ 02:19:17

    இந்த நோய் வேண்டாம்…

    மறுமொழி

  4. karanthaijayakumar
    மே 23, 2015 @ 02:06:11

    சில நாட்களாக ஊரில் இல்லாததால் தங்களது சில பதிவுகளைப் படிக்காமல் இருந்திருப்பேன் சகோதரியாரே
    தற்போது வீடு திரும்பிவிட்டேன்
    இனி தொடர்வேன்
    ந்ன்றி சகோதரியாரே

    மறுமொழி

  5. முனைவர் ஜம்புலிங்கம்
    மே 23, 2015 @ 04:42:20

    நல்ல அலசல், நன்றி.

    மறுமொழி

  6. yarlpavanan
    மே 24, 2015 @ 02:46:03

    ஊடகவியலாளர் பற்றிய
    உண்மை நிலை தெரிய
    உங்கள் கவிதை படிக்கலாம்!

    மறுமொழி

  7. கோவை கவி
    ஆக 08, 2015 @ 16:23:50

    You, Sahana Sahana, Puducherry Devamaindhan, Loganathan Ratnam and 16 others like this.
    1 share

    சிறீ சிறீஸ்கந்தராஜா:-
    ஊடகவியலாளன் ஒரு நடுநிலைவாதி.
    May 12
    James Gnanenthiran :-
    ஊத்தை என்ற சொல்லைத் தவிர்த்திருக்கலாம் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்
    May 12
    Vetha Langathilakam :-
    அகராதியில் தமிழ் சொல்லாக இது உள்ளதே யேம்ஸ்
    பிறகெதற்கு தயங்க வேண்டும்!
    ஓ.கே உங்கள் கருத்தைக் கூறிவிட்டீர்கள் நன்றி.
    May 12

    Subajini Sriranjan:-
    வியாபாரத்தில் ஆர்வம் கொள்ளும் சிலர் நடு நிலமையை காப்பாற்ற முடியாது.
    பெரும் பாலும் ஊடகவியலாளர் நடுநிலையாக இருப்பதையே எல்லோரும்
    விரும்புவது ……!!!!!
    May 12

    Alvit Vasantharany Vincent :—நடுநிலை. ம்ம்ம்..
    May 12 -15

    Vetha Langathilakam :—–அதெல்லாம் சும்மா…
    பொய்!…..
    May 12 -15

    Nagalingham Gajendiran :-
    ஊடகவியலாளர்கள் என்றும் நடு நிலை கொண்டவர்களாக இருக்க முடியாது. இருக்கவும் கூடாது. நடுநிலை என்பது பாம்புக்கு தலையாகவும் மீனுக்கு வாலாகவும் இருப்பதைக் குறிக்கும். ஆதலினால், அவர்கள் நக்கீரனைப் போன்று நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என இயங்குதலே வாய்மையை வெல்லும் !
    May 12 – 2015
    Vetha Langathilakam You, Anand Raj, Nadaraj Maiyan and 2 others like this.

    Vetha Langathilakam:-
    You, Kannadasan Subbiah and 13 others(Kamaraj Mariyappan, Ananad Vetriyalangul…., Hakeem Hanin, Erode Manickam, Pisupati Subramanyam, Velu Sadanantham, Viswa Breeze, Delft Aravinth, விசிக வீரை சிறுத்தை சிவா, Uthamaraj Ramasamy, Murugesan Natesan, Vivaha Canteenandcatering, Pandiraju Shamugam)
    Kannadasan Subbiah :– அருமை சகோதரியார் அவர்களே
    அன்பான வாழ்த்துகள்
    Kannadasan Subbiah’s photo.

    Uthamaraj Ramasamy:– வாழ்த்துகள்.வாழ்க வளமுடன் .அருமை
    Uthamaraj Ramasamy’s photo.

    Pisupati Subramanyam:-
    மனதிலாடும் வண்ண மயிலே என்
    மார்பில் சாய்ந்தாட வந்தனையோ நீ
    ஆட வனத்தினில் அத்தனை உயிரினம் இரூக்க
    தேடி வந்தென்னைச் சேந்தது மேனோ ?

    உன் மனம் என்னை நாடியதாலோ
    என் மனம் உன்னைத் தேடியதாலோ
    இருமனம் கலந்துறவாட எண்ணியதாலோ
    இன்பக் நினைவு நீடிக்கத்தானோ!
    …>>>…P.S.

    Vetha Langathilakam :-
    Mikka nanry dear Kannadhasan.S – Uthamaraj.R and Pisupati.S
    15-5-15

    சி வா
    எண்ணுவோம் சற்றே பொறு நட்சத்திரங்களை….
    *******

    அய்யோ பாவம்.. இளசு ரெண்டும் பெருசு ஆன பிறகு தான் அப்ப லவ்வே ஸ்டாட் ஆகும் போல.. என்னக்கி எண்றது.. என்னக்கி பண்றது.. ஹா ஹா ஹா..

    மம்மி.. உங்களுக்கு இவ்ளோ கெட்ட எண்ணமா.. பாவம் மம்மி ப்ளீஸ் சின்னஞ் சிருசுக சேந்துட்டு போகட்டும்..

    நிலா வை எண்ண சொல்லுங்க..

    Vetha Langathilakam:-
    சி வா மிக அருமை வேதாம்மா..

    Vetha Langathilakam:- Makilchy..nanry Siva.
    16-5-2015

    Vetha Langathilakam You, Kosalya Sornalingam, சி வா and Piremiza Senthuran like this.

    சி வா:-
    தயாள நோக்கு அழித்து
    வியாபார சிந்தை பெருத்து..

    அது தான் நடக்கிறது..
    அருமையாக சொன்னீர்கள்..

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: