63. பூகம்பம்

south-asia

பூகம்பம்

ஆதி மௌரிய குப்த

இராச்சியத்தின் கீழாக இருந்த

இமாலய இராச்சியம் என்ற

நேபாளம் இன்று கிலியுள்!

ஏழை புத்த நாடன்று!

முப்பத்தெட்டு விகித வறுமை

காட்மண்டு தலைநகர் கொண்டு

காத்திரமான பாதிப்பு பூகம்பம்!

பூமிக்கடி அழுத்தம் அதிகரித்துப்

பூமிப் பாளங்கள் அசைவால் (அதிர்வால்)

புவி நடுங்கப் பூகம்பமென்கிறோம்!

மூவித நில நடுக்கம்

சாதாரண முறை, மேற்தள்ளல்

முறை, சமாந்தர அசைவென

மானுட வாழ்வைப் பாதித்து

பல்லுயிர் அழிவுச் சேதமாகிறது.

சாதாரணமாகக் கூறும் பூகம்பம்

பல்லுயிர் காவு கொண்டது

பாரிய சேதம் சோகம்!

பன்னாட்டு உதவிகள் விரைகின்றன

ஓன்பது மாடித் தரஹரா

கோபுரம் ஒன்றுமில்லாது சரிந்தது

சோதனைகள், சோகம் விலகட்டும்

சோதிக்கும்  இயற்கை அமைதியாகட்டும்!

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
24-5-2015

Center-Divider

9 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. yarlpavanan
  மே 24, 2015 @ 23:46:50

  சோதனைகள், சோகம் விலகட்டும்
  சோதிக்கும் இயற்கை அமைதியாகட்டும்!
  அதற்காய்
  இறைவனை வேண்டி நிற்போம்!

  மறுமொழி

 2. karanthaijayakumar
  மே 25, 2015 @ 01:21:21

  இயற்கை அமைதியாகட்டும்

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  மே 25, 2015 @ 02:44:34

  பிரார்த்தனைகள்…

  மறுமொழி

 4. கில்லர்ஜி
  மே 25, 2015 @ 03:39:30

  விரைவில் அமைதி நிலவ எமது பிரார்த்தனைகளும்….. சகோ.

  மறுமொழி

 5. கோவை கவி
  ஆக 08, 2015 @ 17:38:45

  You, Alvit Vasantharany Vincent, Rathy Mohan, சி வா and 2 others like this.

  சி வா :-
  வருந்துகிறேன்.. ரிப்..
  April 30 -2015

  Puducherry Devamaindhan :-
  அரிய பிரார்த்தனை!
  May 7

  Vetha Langathilakam :-
  Siva,, and Puducherry sir makilvu.. mikka nanry..
  May 7

  Naren Nadarajah :-
  ஏழை புத்த நாடு!!!!!!, நேபாளம் ஓர் இந்து நாடு என்றுதான் நான் நினைத்துக்கொண்டிருக்கின்றேன், தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
  May 7

  Vetha Langathilakam :-
  @ Naren Nadarajah தேடலில் வாசித்ததை எழுதினேன்.
  அது எங்கே என்பதை மறுபடி தேடிப் பிடிக்கிறேன்
  அல்லது பின்னர் மாற்றுவேன். கவனிப்பிற்கு மிக்க நன்றி
  May 8 -2015

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: