374. கலைப்பித்து – துருவங்கள் இரண்டு உள்ளங்கள் ஒன்று

11212317_828493147204886_734930307_n

வல்லமை படக்கவிதை 11 ன் வரிகள். 

1.   கலைப்பித்து

நேர்த்தியாயொரு மாளிகை நான்

வார்த்து முடியும் வரை

பார்க்காது இந்தப் புறம்

சேர்த்திடு காதல் வரிகள்.

காதல் பித்தம் ஏறியும்

கலைப் பித்து முற்றிட

காவற்காரனாய் நீ மாற

ஆவல் தீர்க்கிறேன் நான்.

பா ஆக்கம் 

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

8-5-2015.

வல்லமை படக்கவிதை 11 ன் வரிகள். இந்தத் தடவை பாராட்டுப் பெற்ற வரிகள் கீழே குறிப்பிட்டுள்ளேன்:-

http://www.vallamai.com/?p=57380

புவியிலே நான் மணல்மாளிகை கட்டுகிறேன், நீ அப்புறம் திரும்பி (அலைபேசியில்) ஓர் கவிமாளிகை கட்டேன்!” என்று காதலனுக்கு யோசனை சொல்லும் காதலியைக் காண்பிக்கும் திருமிகு. வேதா. இலங்காதிலகத்தின் வரிகள்

வார்த்து முடியும் வரை

 பார்க்காது இந்தப் புறம்

 சேர்த்திடு காதல் வரிகள்.

 காதல் பித்தம் ஏறியும்

 கலைப் பித்து முற்றிட

 காவற்காரனாய் நீ மாற

 ஆவல் தீர்க்கிறேன் நான்.

*****

https://www.vallamai.com/?p=57380

 

2.  துருவங்கள் இரண்டு உள்ளங்கள் ஒன்று

மணற் சிற்பமொரு புறம் இங்கே

அணங்கயர்தல் அழகு காண்! அங்கே

உணர்வுடன் நீ வரையும் பா

கணக்காயுலகக் கார் விரட்டட்டும்.

உன் ஆதரவு எனக்கு என்றும்

என் ஆதரவு உனக்கு! இனி

நம் கலைகள் வளர எது

எம்மைத் தடுக்கும் சொல்!

(அணங்கயர்தல் – விழாக் கொண்டாடுதல்)

பா ஆக்கம் 

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

8-5-2015

vector_146.cdr

8. பாராட்டு விழா- 2015.

11038927_10204300568889732_4145562627728076659_n

யெர்மனி மண் சஞ்சிகை ஆசிரியர் V. சிவராஜா அவர்களின் வாழ்த்து மடல்.
இதே நாள் மண் சஞ்சிகையும் தனது 25வதுஆணடு நிறைவை வெகு விமரிசையாக யெர்மனியில் கொண்டாடினார்கள்.
அவர்களிற்கும் எமது வாழ்த்துகள் உரித்தாகுக.

mann

மனமார்ந்த நன்றி உரித்தாகுக.

கவிச்சுடர் அம்பலவன் புவனேந்திரன் யெர்மன் எழுத்தாளர் சங்கப் பொருளாளர் – யெர்மனி கல்விச்சேவை உறுப்பினர் – பிரபல கவிஞர் எனது நண்பரின் வாழ்த்துப்பா. மனமார்ந்த நன்றி உரித்தாகுக.

ampalavan

my.vila.15.v 173

என் தோழியும், தமிழில் சிறப்புக் கலைமாமணியும், கவிஞரும், யெர்மனி கல்விச் சேவை உறுப்பினரும், கதாசிரியருமான யெர்மன் சோலிங்கன் நகரில் வாழும் கௌரி சிவபாலன் என்ற கௌசியின் வாழ்த்து மடல்.இவை மூன்றையும் எமது மகள் மேடையில் வாசித்தார்.

*

                                                                                 Image may contain: flower

*

 கௌசியின் வரிகள்

 

 

kowshy

மனமார்ந்த நன்றி உரித்தாகுக.

 

தமிழ்எழுத்தாளர் இணைய அகம் யெர்மனியின் வாழ்த்து மடல்.
இவர்களிற்கும் மனமார்ந்த நன்றியையும் மகிழ்வையும் தெரிவிக்கிறேன்.

Mrugathas vaalththu.

முதலாவது படத்தில் நாவலர் விருது தருபவர் டென்மார்க் பிரபல மனநலவியலாளர் திரு.சிறீ. கதிர்காமநாதன் கோசன்ஸ் நகர்வாசியும் என் மதிப்பிற்குமுரியவருமாவார்.

my.vila.15.gray 319-a

*

chainborder

7. பாராட்டு விழா- 2015.

my.vila.15.gray 289-a

எனது பாராட்டுவிழாவில் பிரபலமான டென்மார்க் கவிஞர், மூத்தவர் பொன்னண்ணா சால்வை போர்த்தி கௌரவிக்க தலைவர் துஷ்யந்தன் கணேசமூர்த்தியின் அம்மா தங்கமணி கணேசமூர்த்தி வாழ்த்துப்பாவை வாசித்தார். வாழ்த்துப்பா வரிகளை கீழே வாசிக்க முடியும்

my.vila.15.gray 290-a

வேதாவின் தமிழ்ப் பணிக்கு
எமது நிறைவான வாழ்த்துப்பா மாலை..!
(காலம். 02.05-2015 வாழ்த்து..! நேரம் ..டென்மார்க்

கோப்பாய் மண்ணை நீர்பிறந்த மண்ணாக்கி
கும்பிட்ட கோயில் விட்டு, குடியிருந்த வீடுவிட்டு
படித்த பள்ளிவிட்டு பக்கமிருந்த உறவுவிட்டு
நாடுவிட்டு புலம்பெயர்ந்து. நாம,;அகதியானாலும்
பெற்றதாயைப்போல் பேணிவளர்க்கின்றீர் எம்தாய் தமிழை!
வாழிய! வாழிய! நின்பணி நீடூழி, நீடூழி!வாழியவே!

இன்பத் தமிழின் இறவாப் புகழோங்க
அன்பு மனம்தோய அறிஞராக்கிய இலக்கியத்தை!
கண்ணின் மணியாய் கருத்தின் திருவுருவாய்
எண்ணி மகிழ்ந்து எம்மினத்தின் துயர்போக்க
அள்ளி இறைத்தீர் அறிவுநூல் மூன்று
அத்தனையும் உங்கள் அறிவுக்கு சன்று..!

இலங்கையிலே அண்று தாத்தாவின் பள்ளியிலே
தங்கத்தமிழை பிள்ளைகளுக்கு சொல்லி பசிதீர்த்து..!
புலம்பெயர்ந்து வந்தும் பொதுப்பணியாய்த் தாணுணர்ந்து
பிள்ளைகள் காப்பகத்தில் பணி முடித்தீர்..!
அப்பணியின் உள்கொண்ட அனுபவத்தை புலம்பெயர்
தமிழ் சந்ததிக்கு நூலாக்கித் தான்கொடுத்தீர்
வாழிய வாழிய நின்பணி, புகழ் நீடூழிவாழியவே..!

நாடுநலம்பெறவும் நம்மக்கள் நல்லுறவு பேணிடவும்
வீடுகள் தோறெரியும் ஒளிவிளக்காய் பணிமுடித்து
காதலினால் பெற்ற கணவனின் துணைகோர்த்து
மக்கள் உள்ளமதைக் கொள்ளை கொண்டீர்
நெஞ்சமதை சீராக்கி தீந்தமிழுக்கு பணிமுடித்தீர்!
இதற்காக விழாவெடுத்து தமிழ்பாவால் மாலையிட்டு
வாழ்த்துகின்றார் நீர்வாழும் ஓகூஸ் ஊர்மக்கள்
வாழிய வாழிய நடூழி நின்பணிவாழியவே!

அழுத்தமும் கருவில் நல்லாழமும் நயமும்கொண்ட
கவிதைகள் அளிக்கவல்ல இனிய வேதநாயகாம்பாள்
பழந்தமிழ் இலக்கியங்கள் படித்தநல் கற்றோர்நெஞ்சை
இழுப்பவர் கவிதைமூலம் இவர்பணி நதியைப்போல..!
வர்ணங்கள் நேசிக்கும் இரசனை இவர்நெஞ்சம்
கலைநுணுக்கங்கள் கொண்டபல கைவண்ணங்கள் இவரின்சொந்தம்
வாசமலர் தான்கொண்ட தேனைப்போல கவிதாயினிவேதா
பல்லாண்டு பல்லாண்டு வாழிய நீடூழி வாழியவே!
நன்றி வணக்கம்

நன்றி உணர்வோடு வாழ்த்;துவோர்கள்
அன்புள்ளம் ஓகூஸ் தமிழர் ஒன்றியம்
ஓகூஸ் டென்மார்க்

my.vila.15.gray 291-ab

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
8-5-2015

line3

6. பாராட்டு விழா- 2015.

P1090783

மே மாதம் 2ம் திகதியின் பாராட்டு விழாத் தொடர்- 6

ஏன் நாவலர் விருது?-  என் முதல் நூல் முன்னுரை.
இதை வாசியுங்கள் அப்பப்பாவின் சேவையால்…
தெரிவு செய்தார்கள் இது பொருந்துமாம்…

munnutai..

my.vila.15.gray 283

ஓகுஸ் தமிழ் மன்றத் தலைவர்.  துஷ்யந்தன் கணேசமூர்த்தி.

my.vila.15.gray 328

அவர்கள் சீருடை வாசகம்.
காரணம் தாயகத்திற்கும் உதவுபவர்கள்.

unnamed (2)

வந்திருந்த கலைஞர் கொளரவிப்பில்
ஒன்றிய இளைஞர்கள் சீருடையில்
காப்பாளர்களாக.

விழாவில் மிகவும் மனதைத் தொட்டு கன்னத்தில் கண்ணீர் உருண்டோட வைத்த ஒரு நிகழ்வு எதுவானால் ஆச்சரியமாக எனது தம்பி இலங்கை கொழும்பிலிருந்து ஸ்கைப்பில் வந்தது வாழ்த்துக் கூறியது.
80 விகிதமான நிகழ்வை அவர் பார்த்துள்ளார். அக்கா மிக அருமையாக ஓகனைஸ் பண்ணியுள்ளனர் என்று வியந்தார்.
மிக்க நன்றி சதா. God bless you all

1522837_10205643683228571_870158586288266493_o

இப்பொதெல்லாம் நாங்கள் எல்லா விழாக்களிற்கும் செல்வது குறைவு.
(எமது வசதி- முதுமை என்பவைகளை மனதில் கொண்டு)
ஆயினும் பல நடன ஆசிரியர்களிற்கு அழைப்பை தெரிவித்தும் பெருமனது கொண்டு
வந்த நடன ஆசிரியை சுமித்திரா சுகேந்திரா அவர்களின் நடன மாணவிகளின் நடனம்.நாங்கள் போவதில்லையென வராதவர்கள் பலர்.
ஆனால் இது வியாபாரமல்ல.

11215220_826232240747558_79266819_o

வாசலில் எம்மைச் சீருடையுடன் வரவேற்றனர் மன்ற இளைஞர் குழாம்.

வாசல் அலங்காரம்.

my.vila.15.gray 329

ஓகுஸ் மக்களிற்கு மனமார்ந்த நன்றி.
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
6-5-2015

stock-vector-set-of-ornamental-floral-rule-lines-underlines-31318351-a

5. பாராட்டு விழா- 2015.

    11182110_796047097176369_396434622178052148_n
May 2 ·  வாழ்த்துக்கள் …..
*********************
வார்த்தைகள் வசப்படும்
அழகு கண்டு வாசகி ஆகினேன்
தமிழ் வேதாவின் பாவினிலே….
வார்த்தைக்கு பஞ்சமில்லா
வித்தகியை வாழ்த்துகிறேன்
மனம் நிறைந்து…………..
வானைப் போல கருத்துக்களை
மழையாய் சொரிந்து நிறைத்திடுவாய்
நன்றாய் நீதிக் கருத்துக்களை
சிந்தை புரிய வைத்திடுவாய்……
வாழ்த்துகிறேன் வித்தகியை மனம்
நிறைந்து…………..சுணங்கிப் புரியும் சில கவிதை
சுலபமாய் புரியும் பல கவிதை
செழுமை தமிழாய் நின் கவிகள்
சேர்த்திடும் செவிகளுக்கு இன்பமாய்…எழுத்தை மூச்சாய் கொண்டாயே
கருத்தை உரைப்பாய் காலத்திலே
புதிதாய் கவிதை தந்தாலும்
பழைய இலக்கியம் புகுத்திடுவாய்……அள்ளக் குறையாத அறிவுச் சுரங்கமே
தமிழ் பா கடைந்தாய் கடலிலே
நெய்யாய் மணக்கும் நினைவிலே
மகிழ்ந்தே மனம் நிறைந்து வாழ்த்துகிறேன்……..
வாழ்க.

சுபாரஞ்சன்.

தங்கள் அழைப்பிதழ் கிடைக்கப்பெற்று மகிழ்ந்தேன். உங்கள் விழா சிறப்பாக இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் பணி நிமித்தம் பங்குகொள்ள முடியாமல் போய்விட்டது. என் மனம் நிறைந்த வாழ்த்துப்பூக்கள் உங்களுக்காக Århus நகரம் நோக்கி பயணிக்கிறது…..

Vetha.Langathilakam:- அன்பின் ரதி பிற சங்கங்களிற்கு உதாரணமான ஒரு சிறப்பான விழா..
அருமையான நிர்வகிப்பில திருப்தியாக நடந்தது.
உங்கள் வாழ்த்திற்கு என் அன்பான நன்றி உரித்தாகுக ரதி.
 • Vetha Langathilakam வாழ்த்திற்கு மிக்க நன்றி.
  அருமையான ஒரு அழகிய விழாவை மிஸ் பண்ணி விட்டீர்:கள்.
  இப்படியாரும் கொண்டாடியிருக்கமாட்டினம் அப்படி ஓகனைஸ் பண்ணியிருந்தனர்.
  நம் இளைஞர் குழாம்..
   Ratnam kavimahan.:- அக்கா வணக்கம்…. உங்களுக்கான பாராட்டு விழா சிறக்கட்டும் உங்கள் இலக்கிய பணி என்றும் முன்னோக்கி வெளிச்சம் கொண்டு நகரட்டும் இலக்கடையும் வரை தொடருங்கள் இலக்கிய பணியை வாழ்ததுறதுக்கு எனக்கு தகுதி இருக்கோ இல்லையோ தெரியாது ஆனால் தம்பியாக வாழ்த்த மனது இருக்கு வாழ்ததுக்கள்
  Yesterday -2-5-2015.

  ·

  ஓயாது செய்த தமிழ்ப் பணிக்கு

  ஓகூஸ் தமிழர் ஒன்றிணயத்தில் விழா _நீவீர்
  பாயாத இடமுமில்லை தமிழ் அருவி போல்
  சேயாகி நாம் நிற்க தாயாகி தமிழ் அன்னை
  வடிவாகி அன்று முதல் இன்றுவரை பணிசெய்தீர்

  தொடாத கருவில்லை கையாளாத வார்த்தையில்லை
  விடா முயற்சியோடு சிறாருக்கும் கவி தொடுத்தீர்
  கடாரம் தாண்டி டென்மார்க்கிலும் தமிழை வளர்த்தீர்
  அடாத தடை வரினும் விடாமல் தமிழ்த் தொண்டு செய்தீர்

  அனுபவம் தந்த முதிர்ச்சியாய்ப் பழுத்த கவிதைகள்
  ஆழ்ந்த கருத்துக்கள் அசைபோடும் நினைவுகள்
  இலக்கணச் சுத்தமாய் இலக்கிய வடிவாய்
  அனைவரும் பயன்பெறும் விதத்தில்

  வாழ்த்த எந்தத் தகுதியுமில்லை
  வாழ்த்தி வணங்குகின்றேன்
  வாழ்க நின் புகழ்
  வாழ்க நின் தமிழ்த் தொண்டு

  ராதா மரியரத்தினம்
  04.05.15

  Vetha Langathilakam உங்கள் வாழ்த்திற்கு என் அன்பான நன்றி உரித்தாகுக ராதா.மிக்க மகிழ்ச்சி ராதா..
  Balloon Border-b
  Ratha’s photo:-
  11113267_848054528597954_9017180999372318428_n
 

4. வாழ்த்தும் விழா

பதிவுகள்

 Pathivukal.com

ஓகூஸ் நகரில் எழுத்தாளர் வேதா இலங்காதிலகம் அவர்களுக்குப் பாராட்டு விழா!

Sunday, 26 April 2015 00:12 தகவல்: வேதா இலங்காதிலகம் நிகழ்வுகள்

pathivukaaaal

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=2666:2015-04-26-05-18-25&catid=15:2011-03-03-19-55-48&Itemid=29

பதிவுகள் இணையத்திற்கு என் மனமார்ந்த நன்றி உரித்தாகட்டும்.

¨muthu-l

முத்துக் கமலம் இணையத்திற்கு என் மனமார்ந்த நன்றி உரித்தாகட்டும்.

http://www.stsstudio.com/?p=8119

2zxDa-1muzO-1-300x300

நாளைய தினம்(02-05.2015) பிற்பகல் 14.00 மணிக்கு நான் வசிக்கும் டென்மார்க் நாட்டில் உள்ள ‘ஓகூஸ்’(Aarhus) நகரத்தில் இயங்கிவரும் ‘ஓகூஸ் தமிழர் ஒன்றியத்தினர்’ அதே நகரத்தில் கடந்த 25 வருடங்களுக்கு மேலாகத் தமிழ்ப் பணியும், கவிப் பணியும் ஆற்றி வரும் கவிதாயினி, எழுத்தாளர் எனப் பன்முக ஆளுமை கொண்ட, ‘கோவைக்கவி’ என்னும் புனை பெயரில் எழுதி வரும் திருமதி.வேதா இலங்காதிலகம் அவர்களின் எழுத்துப் பணியை விழா எடுத்துப் பாராட்டிக் கௌரவிக்க உள்ளனர் என்னும் மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் அடைகிறேன்.

மேற்படி விழாவில் கலந்து கொண்டு கவிதாயினியை வாழ்த்தும் வாய்ப்பு ‘அந்திமாலை’ இணையத்தின் ‘ஆசிரியர்’ என்ற வகையில் அடியேனுக்கும் கிடைத்துள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன். கவிதாயினி வேதா இலங்காதிலகம் அவர்கள் கடந்த 25 வருடங்களாக ஓய்வு ஒழிச்சல் இன்றிக் கவிதைப்பணி செய்து வருகிறார். அவரது கவிதைகளைப் பல இணையத் தளங்களும், வானொலிகளும், வலைப் பூக்களும் நூற்றுக்கு மேற்பட்ட தடவைகள் வெளியிட்டுக் கெளரவித்துள்ளன.

அது மட்டுமன்றி அவர் டென்மார்க்கில் ‘உணர்வுப் பூக்கள்’ ‘வேதாவின் கவிதைகள்’ ஆகிய கவிதைத் தொகுப்புகளையும், “குழந்தைகள் இளையோர் சிறக்க” என்ற தலைப்பில் ஒரு உளவியற் சிந்தனை நூலையும் வெளியிட்டுள்ளார். இவை மாத்திரமன்றி டென்மார்க்கில் முதல் முதலாக ‘கவிதை நூல்’ வெளியிட்ட தமிழ்க் ‘கவிதாயினியும்’, டென்மார்க்கிற்கு 80 களில் குடிபெயர்ந்த தமிழர்களில் முதன் முதலாக ‘குழந்தைகள் ஆசிரியப் பட்டம்’(Degree of Kindergarten Professional) பெற்ற தமிழ்ப் பெண்மணியும் இவரே என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

இத்தகைய பெருமைகள் கொண்ட பெண்மணியைக் கௌரவிப்பது என்பது தமிழுக்குப் பெருமை சேர்க்கும் ஒரு செயல் மட்டுமன்றி, பொருத்தமும் நீதியும், தகுதியும் ஆன ஒரு செயலே ஆகும். மேற்படி நிகழ்வை ஒழுங்கு செய்திருக்கும் ஓகூஸ் தமிழர் ஒன்றியத்தினர் புதியதொரு கொள்கையைக் கையில் எடுத்துள்ளனர். “திறமையாளர்களைத் தேடிப் பாராட்டுவதே புதிய திறமையாளர்களை உருவாக்கும் சிறந்த வழி” என்பதே அந்தத் தாரக மந்திரமாகும். இது நல்லதொரு நேர்மறையான முயற்சி என்பது அடியேனின் அபிப்பிராயம். இது நிச்சயம் வெற்றி பெறும் என்பதுடன் இவை தமிழ்ச் சமூகத்தையும், கலைஞர்களையும் வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

இத்தகைய விழாக்கள் எமது புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தில் மட்டுமன்றி, உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் பேசும் மக்கள் மத்தியில் அடிக்கடி, பரவலாக இடம்பெற வேண்டும் என்பதே என் போன்றவர்களின் பேராவல். ஒவ்வொரு கலைஞரும் அவர் வாழும்போதே கௌரவிக்கப் படல் வேண்டும் என்பதில் உங்களுக்கும் மாற்றுக் கருத்து இருக்காது என்று உறுதிபட நம்புகிறேன்.

என்று அந்திமாலை ஆசிரியர் லிங்கதாசன் முகநூலில் கொடுத்த அறிவித்தலை இங்கு வாழ்த்தாக எஸ்ரிஎஸ் இணையம் தந்துள்ளது.
இவர்களிற்கும் மிகுந்த நன்றி உரித்தாகுக.

 

http://www.stsstudio.com/?p=8149

 

திருமதி.வேதா இலங்காதிலகம் அர்களுக்கு பாராட்டுவிழாவுக்கான வாழ்த்துக்கள் எஸ்.ரி.எஸ்.இணையம்

Posted By Admin On 2nd May, 2015. Under Uncategorizedஈழத்து கலைஞர்கள்வாழ்த்து  

ddb2e17a-c673-478e-ac81-c468ea8bba29

 

டென்மார்கில் இன்றய விழா நாயகி திருமதி.வேதா இலங்காதிலகம் அர்களுக்கு பாராட்டுவிழாவுக்கான வாழ்த்து
தாதனை படைத்த பெண் அவர் .

சாதித்த சாதனைக்கு இந்தப்பாராட்டு அவருக்கான கௌரவத்தை கொடுத்து நிற்கின்றது உகந்த நேரத்தில் இதற்குரியவர்கள் இவருக்கு பாராட்டு வழங்குவதையிட்டு மகிழ்சியும்.இந்த பாராட்டுக்குழுவுக்கு வாழ்த்துக்களுடன் விழா நாயகி திருமதி.வேதா இலங்காதிலகம் அவர்களுக்கு பாராட்டுவிழாவுக்கான வாழ்த்துக்கவிதையை இணைக்கிறோம்:

வண்ணத்தமிழதனில் வடிவாகக் கவிவடிக்கும்
எண்ணமது வானமதில் சிறகடித்து 
கற்பனையாய் உயர்ந்து நிற்கும்

வஞ்சி உன் எழுத்தாற்றல் 
வளமுள்ள சேதிசொல்லும்
வந்து தினம் இணையத்தில்
கவியாக பதிவேறும்

சிந்தை தனில் சிறப்பாற்றல்
சேதிசொன்னால் கருத்தாற்றல்
அஞ்சி நிற்கா வரியாற்றல்
ஆற்றல் உள்ள சிறப்பாற்றல்

பாராட்டால் உனக்கில்லை பெருமை 
பயிந்தமிழுக்கே நீ தந்த பெருமை
ஊர் சொல்லித் தந்ததில்லை எழுத்தாற்றல் கடமை
ஊர்வாழ்த்த ஏற்றுகொள்வாய் அது உன் கடமை

பார்போற்றும் இன்று உன்னைஅதற்கு
பணிசெய்தாய் நீ பெருமை
நாம்வாழ்த்தல் அது உன் திறமை
நல்லோர்கள் வாழ்த்த இன்னும் பணிசெய் உன் கடமை

வாழ்த்திநிற்கும் எஸ்.ரி.எஸ்.இணையம், இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல்

6bb4b6c7-1357-44c1-a319-385e98179e90

சிறுப்பிட்டி எஸ்.‌தேவராசா திருமதி:சுதந்தினி.தேவராசா

 

 

Sparkle_up_your_life_with_happiness_have_a_Mastiful_Dhamakedar_Diwali_pp-ll

Next Newer Entries