33. அந்த மாமரம்

sathas-first-0071

அந்த மாமரம்

அந்த மாமரம் அன்று
சொந்த மாமரம் எமக்கு.
தந்த நிழற் குடையில்
குந்தப் பாய் விரித்த
முந்தை அனுபவம் இது
சந்தமாய் நெஞ்சில் பாயுது.
வாழ்வூக்கிய பால பருவ
வான் நோக்கிய மாமரம்.

புல் வெட்டிப் பசுந்தாக
கல் பொறுக்கிச் சுத்தமாக
சருகுகள் கூட்டி அள்ளி
ஒருமையாய் ஒரு மைதானமாக்கி
அருமையாய் அப்பா சகோதரங்களுடன்
ஒருத்து அனுபவித்த வசந்தம்
பெருமையான மாலைப் பொழுதுகள்
கருமையற்ற மனமினித்த காலங்கள்.

தேன் சுவையான மாம்பழம்
பென்னம் பெரிய மாம்பழம்
இன்று நினைத்தாலும் ஏக்கம்1
மாலைத் தென்றல் பெரும்
சாலையெனப் புகுந்து விளையாடி
வாலையாட்டிச் சாமரம் வீசியது
ஊஞ்சல் கட்டி ஆடி
உறவாடிய பசும் கொற்றக்குடை

பெரிய கல்லோ ஒரு
பெரிய வேரின் புடைப்பையோ
சிம்மாசனமாக்கிக் கூடி அமர்ந்து
சிரித்து ரசித்த ரசனை
சிந்தை நிறைந்து வழிகிறது
கூட்டுக் குடும்பமாய் மாமரத்தடியில்
குலவியவையை நெஞ்சம் மறக்காதது.
குறை! இன்றைய பிள்ளைகளறியாதது!

26-5-2015.

வேறு

அந்த நாள் ஞாபகம்.

எந்த நாளும் மறக்கவே மறக்காதது
அந்த நாள் இன்ப ஞாபகம்.
இந்த வாழ்விற்கு வளம் தரும்.
சந்தன அட்சய பாத்திரம் கிரியாவூக்கி

பெற்றோர் சகோதரர்களின் ஆசை அன்பு
பெருமையாய் நாம் வாழ்ந்த வீடு
அருமைத் தாய் நாடு அத்தனையும்
ஒரு புலம் பெயர்வு மறக்கடிக்குமா!

சிறு ஆணியடித்துக் கம்பு இணைத்து
சின்னத் தகரம் சில்லாகப் பொருத்தி
சிறு தள்ளு வண்டியாக உருட்டியது
சிற்றடி நடந்தது மறக்க முடியாதது.

அதிகாலை எழுந்து பின் வளவில்
அணில் கொறித்த மாங்காய்களை வெகு
ஆவலாய் அம்பலவி மாங்காய் மரத்தடியில்
ஆசையாய் பொறுக்கிக் கழுவி உண்டதினிமை.

பனைவளவில் அப்பாவுடன் ஆர்வமாய் சேர்ந்து
பனம் பாத்தியமைத்து பனங் கொட்டைகள்
பதித்துப் பல கதைகள் பேசியதும்
பசுமையானது மறக்காத அந்தநாள் ஞாபகம்.

19-7-2016

 

 

service_treespowerlines_transrightofway_med

15 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. karanthaijayakumar
  ஜூன் 09, 2015 @ 01:06:08

  கூட்டுக் குடும்பமாய் மாமரத்தடியில்
  குலவியவையை நெஞ்சம் மறக்காதது.
  குறை! இன்றைய பிள்ளைகளறியாதது!

  உண்மை உண்மை
  இன்றைய பிள்ளைகள் அறியாதது அதிகம் சகோதரியாரே
  நன்றி

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  ஜூன் 09, 2015 @ 01:18:31

  இன்றைய குழந்தைகள் பலவற்றை இழந்து விட்டார்கள் என்பது 100% உண்மை…

  மறுமொழி

 3. முனைவர் ஜம்புலிங்கம்
  ஜூன் 09, 2015 @ 01:44:58

  தற்போதைய உலகில் நாம் தொலைத்த ஒன்றைப் பற்றி ஆழமாக விவாதிக்கிறது கவிதை, மாமரத்தின் துணைகொண்டு. வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 4. கில்லர்ஜி
  ஜூன் 09, 2015 @ 03:41:23

  கூட்டுக் குடும்பமாய் மாமரத்தடியில்
  குலவியவையை நெஞ்சம் மறக்காதது.
  குறை! இன்றைய பிள்ளைகளறியாதது

  மனதில் தாக்கத்தை உண்டு பண்ணிய வரிகள் சகோ அருமை

  மறுமொழி

 5. umayalgayathri
  ஜூன் 09, 2015 @ 11:10:36

  தங்கள் கவிதையின் ஊடே நானும் அக்காலம் சென்று வந்தேன். நம் பிள்ளைகள் பல நல்ல தருணங்களை இழந்து கொண்டிருக்கிறார்கள்.
  வாஸ்தவமான ஒன்று சகோ. கவிதைக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

  மறுமொழி

 6. பிரபுவின்
  ஜூன் 10, 2015 @ 06:50:33

  புலம் பெயர் ஈழத் தமிழர்களின் வலியை பிரதிபலிக்கின்றது அந்த மாமரம். புலம் பெயர்வினால் இழந்தவை தான் எத்தனை எத்தனை. அந்த வகையில் நாங்கள் ஓரளவு கொடுத்து வைத்தவர்கள் என்று நினைக்கின்றேன்.

  நன்றி சகோதரி.

  மறுமொழி

 7. yarlpavanan
  ஜூன் 13, 2015 @ 05:17:58

  அன்று
  அந்த மாமரம் – எமக்கு
  சொந்த மாமரம் – அது
  தந்த நிழற் குடையில்
  குந்தப் பாய் விரித்து – அம்மா
  அமுது ஊட்டிய நினைவு – பாட்டி
  கதை சொன்ன நினைவு
  அப்படி
  எல்லாவற்றையும் நினைவூட்டிய
  தங்கள் கவிதை இது!

  மறுமொழி

 8. கோவை கவி
  ஜூன் 14, 2015 @ 21:17:34

  YYou, Angel Angel, Subajini Sriranjan, Sujatha Anton and 22 others like this.
  2 shares

  Malini Mala:-
  கூட்டுக் குடும்பமாய் மாமரத்தடியில்
  குலவியவையை நெஞ்சம் மறக்காதது.
  குறை! இன்றைய பிள்ளைகளறியாதது!
  June 8 -2015
  Dr.Muttiah Kathiravetpillai Muruganandan:-
  இயற்கையோடு இசைந்த
  இனிய காலங்கள் தொலைந்துவிட்டன
  மனதில் வசந்தமாய் மறையாது
  நிலைத்து நிற்கும்
  June 9

  Sivakumary Jeyasimman:- Iniya ninaivukal.oonjal kaddi poddikku aadiya kaalankal
  JJune 9

  Naguleswarar Satha :- Palaiya gnapakankal……………
  June 9
  Prema Rajaratnam :- பசுமையான நினைவுகள்,,,,
  June 9

  Vetha Langathilakam :- அன்பின் மாலா, சிவா, டொக்ரர், சதா, பிரேமா
  மிக மகிழ்வு அன்புடன் நன்றி.
  June 9

  Rathy Mohan:- அந்த மாமரம் நினைவுகளில் வந்து போதும்
  June 9

  Vetha Langathilakam :-
  Dear Rathy மிக மகிழ்வு அன்புடன் நன்றி.
  June 9

  Vetha Langathilakam You and மணியின் பாக்கள் like this.inPavalarkal theru.

  மணியின் பாக்கள் :- ஞாபகமூட்டும் வரிகள் மீச்சிறப்பு
  10-6-2015

  Vetha Langathilakam :- அன்புடன் மகிழ்வும் நன்றியும் கூறுகிறேன் சகோதரா.
  June 10 at 7:56am · Like · 1

  James Gnanenthiran :- நல்லதொரு கவிதை படைத்துள்ளீர்கள் . என் மனமுவந்த பாராட்டுக்கள்
  June 10

  Sujatha Anton:- அந்த மாமரம் அன்று

  சொந்த மாமரம் எமக்கு….தந்த நிழற் குடையில்

  குந்தப் பாய் விரித்த

  முந்தை அனுபவம் இது

  சந்தமாய் நெஞ்சில் பாயுது.

  வாழ்வூக்கிய பால பருவ

  வான் நோக்கிய மாமரம்.
  நினைவுகளின் தாலாட்டு எம்மையும் அங்கு அழைத்துச் செல்கின்றது.
  புகைப்படமும் இணைந்து அருமை. !!1 வாழ்க தமிழ்.!!!
  14-6-15
  Vetha Langathilakam :—-Sujatha makilchchyjum..nanrijum……

  Subajini Sriranjan :- தினைவுகளில் மட்டும்
  சுகம் காண முடிகிறது!!
  அது ஒரு வசந்த காலம்…

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: