383. சிந்தனைக்குரிய – கூடிணைக்குமிடம் நிரந்தரம்.

10609031_716498245161097_1832540875_n

படக்கவிதை 15

சிந்தனைக்குரிய…..

ஒரு பட்டுச் சேலை நெசவிற்கு
ஒரு 4000 – 5000 பட்டுக் கூடு
ஒரு புறம் கொலை, அழிவு, கொடுமை!
மறுபுறம் அழகிய ஆடை புதுமை!
பலர் சீவனம், வருவாய் பிழைப்பு!
எவர் பட்டை வேண்டாம் என்பார்!
சிலர் பட்டு அணிவதே இல்லை!
சிந்தனைக்குரிய சிறு கைத்தொழிலே!

https://www.vallamai.com/?p=58177

பா ஆக்கம் 
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
30-5-2015.

Yellow-Roses-Frame-2zxDa-1W14z-print

11216346_840352649352269_429205382_n

படக்கவிதை 15
கூடிணைக்குமிடம் நிரந்தரம்.

திருவுடை பெருமை கொண்டது
ஒரு துணையோடு வாழ்வது.
ஆவலாய் ஆண்  குச்சிகளோடிறங்க
காவலர் மாறும் கட்டுதிட்டமாய்
கடமையேற்றுப் பெண் கூடிணைக்கும்.
இலகுவாக நீரில் நடக்க
இறகுகளற்ற நீண்ட கால்கள்.
கழுத்தை வளைத்துப் பறக்கும் நாரை.

அகண்ட உலகில் அரசாட்சி
விதண்டா வாதமில்லை விசாவின்றி
பனிக் காலத்தில் கர்மசிரத்தையாய்
தனிச் சுதந்திரமாய் திசையறிகருவியின்றிப்
புலம் பெயரும் மாபெரும்
புதிர் நிறை புள்ளினம்! ஐரோப்பாவில்
செவிவழிச் செய்தியாய் பிள்ளைச் 
செல்வம் காவி வரும் நாரை.

 

https://www.vallamai.com/?p=58133

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
6-6-2015.

nest

18 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  ஜூன் 22, 2015 @ 09:26:45

  கவிதைகள் அருமை சகோ.
  முதல் கவிதை மனதை வருத்தியது.

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  ஜூன் 22, 2015 @ 13:53:49

  சிந்திக்க வேண்டியது தான் சகோதரி…

  மறுமொழி

 3. karanthaijayakumar
  ஜூன் 22, 2015 @ 14:25:33

  அருமை சகோதரியாரே

  மறுமொழி

 4. முனைவர் ஜம்புலிங்கம்
  ஜூன் 22, 2015 @ 15:00:10

  பட்டு மனதில் பட்டுவிட்டது.

  மறுமொழி

 5. Bagawanjee KA
  ஜூன் 22, 2015 @ 17:14:27

  # ஐரோப்பாவில்
  செவிவழிச் செய்தியாய் பிள்ளைச்
  செல்வம் காவி வரும் நாரை.#
  இதென்ன புதுக் கதை சொல்லலாமே !

  மறுமொழி

 6. yarlpavanan
  ஜூன் 23, 2015 @ 00:28:08

  பட்டுப் பற்றித் தொட்டுக்காட்டியது அருமை
  செல்வம் காவி வரும் நாரை கதை நன்று
  சிறந்த பாவரிகள்
  தொடருங்கள்

  மறுமொழி

 7. பிரபுவின்
  ஜூன் 25, 2015 @ 07:15:28

  “ஒரு பட்டுச் சேலை நெசவிற்கு
  ஒரு 4000 – 5000 பட்டுக் கூடு
  ஒரு புறம் கொலை, அழிவு, கொடுமை!
  மறுபுறம் அழகிய ஆடை புதுமை!”

  யோசிக்க வைக்கின்றது பதிவு(வரிகள்).அருமை சகோதரி.

  மறுமொழி

 8. Arrow Sankar
  ஜூன் 25, 2015 @ 14:09:09

  சூப்ப்ப்பப்ப்ப்பர்

  மறுமொழி

 9. கோவை கவி
  ஆக 11, 2017 @ 14:57:48

  padduchelai comments:-

  Vetha Langathilakam :- வல்லமை படக் கவிதை 14…
  11 August 2015 at 12:12 ·

  Subajini Sriranjan:- இந்த தொழிலாளர்களின் வியர்வையில் சாயம் போட்டு காய்ந்த பட்டுச் சேலை….!
  11 August 2015 at 14:19 ·

  Malini Mala :- ஒரு புறம் கொலை, அழிவு, கொடுமை!
  மறுபுறம் அழகிய ஆடை புதுமை!
  11 August 2015 at 14:20 ·

  Gomathy Arasu :- நான் பட்டு அணிவது இல்லை ,
  11 August 2015 at 14:53 ·

  Gomathy Arasu :- கவிதை நன்றாக இருக்கிறது.
  11 August 2015 at 14:53

  Subbu Subbu :- வைர வரிகள் நைஸ்
  11 August 2015 at 17:10 ·
  Vetha Langathilakam:- @ Gomathy Arasu நன்று சகோதரி. எமது மகள் மே 2015/ 2ல் எனது பாராட்டு விழாவிற்கு
  இந்தியாவிலிருந்து ஒரு பருத்திச் சேலை பார்சலில் எடுத்து உடுத்தார்.

  11 August 2015 at 17:23 ·
  Alvit Vasantharany Vincent :- பட்டும் படும் பாடும். சிந்தனை நல்லது சகோதரி. வாழ்த்துக்கள்.
  11 August 2015 at 18:05 ·

  Ratha Mariyaratnam ஒரு அழிவில் இன்னொருவருக்கு ஆடம்பரம்
  12 August 2015 at 01:27 ·

  James Gnanenthiran :- அழிவின்றி ஆக்கம் இல்லையே…….
  12 August 2015 at 09:50 ·

  Maniyin Paakkal:- செருப்பு , ஆடை உணவு இவையெல்லாம் உயிர்களின் அழிவிலே கிடைக்கிறது .பா நன்று
  12 August 2015 at 13:50 ·

  Gandhi Bala :- நன்றாக உள்ளது
  12 August 2015 at 23:15 ·

  மறுமொழி

 10. கோவை கவி
  ஆக 11, 2017 @ 14:59:26

  Vetha Langathilakam :- Thank you sts…..http://www.stsstudio.com/?p=10109

  சிந்தனைக்குரிய… | stsstudio.com
  ஈழவர்கள் புலத்திலும் கலைவளர்ப்பது மிக மகிழ்ச்சி. அதுவும் சுவிஸ் நாட்டில் இடம் …
  STSSTUDIO.COM
  13 August 2015 at 23:29 ·

  Sujatha Anton :- சமுதாய சிந்தனையின் ஒரு சீர்திருத்தம்..
  18 August 2015 at 10:27 ·

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: