384. 13 படக்கவிதை

11267274_902111079853417_686643902_n

13 படக்கவிதை
1.   சாகசம் பண்ணிய பரவசம்!…

என்ன பண்ணுவாய்! என்ன பண்ணுவாய்!….
உன்னால் என்னைப் பிடிக்க முடியாதே!
முன்னும் பின்னும் தேடித் தேடி
என்னே ஒரு இடம் கண்டேன்!
தொட்டுப் பிடிக்கும் விளையாட்டில் என்னைக்
கிட்டே யாரும் நெருங்க முடியாதே!
சட்டென்று சொல்லுங்கள் வெற்றி எனக்கென்று
கிட்ட வருவேன்! அதுவரையிங்கு தான்!

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
23-5-2015.

2.  ஏகாடம் பண்ணாதீர்கள்!

நிகாசம் இல்லாத ஆனந்தம்!
மகாராசா போலவோ ஒரு
மகாவீரன் போல இங்கு
விகாசமான ஒரு சிம்மாசனம்!
ஆகா! சொன்னீர்களே எல்லோரும்
ஏறாதே முடியாது என்று!
ஏகாடம் பண்ணாதீர்கள் யாரையும்!
சகாயம் எமக்குத் துணிவொன்றே!

(ஏகாடம் – ஏளனம். விகாசம் – மலர்ச்சி.  நிகாசம் – உவமை.)

https://www.vallamai.com/?p=57906

பா ஆக்கம்.
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
23-5-2015.

3.  தகுதியைத் தக்க வைப்போம்!

எப்படியோ மேலே ஏறிவிட்டேன்
எப்படிக் கீழிறங்குவது இனி!
மேலே ஏறினால் நிலையக் 
கீழிறங்காமல் காப்பது எப்படி!
இலஞ்சம், ஊழல், சாதி,
மதபேதம், உயர்வு தாழ்வெனும்
சகதிக்குள் மீண்டும் குதிப்பதா!
தகுதியைத் தகவு ஆக்குவோம்!

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
23-5-2015

10275602_10205085709176197_8091329699660233275_o

12 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. karanthaijayakumar
  ஜூன் 27, 2015 @ 01:23:35

  அருமை சகோதரியாரே

  மறுமொழி

 2. ramanii
  ஜூன் 27, 2015 @ 02:51:16

  ஒரு புகைப்படம் தந்த
  முத்தான மூன்று கவிதைகளும்
  அதி அற்புதம்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  ஜூன் 27, 2015 @ 03:00:04

  அனைத்தும் அருமை சகோதரி…

  மறுமொழி

 4. s Kumar
  ஜூன் 27, 2015 @ 06:15:59

  அருமை

  மறுமொழி

 5. முனைவர் ஜம்புலிங்கம்
  ஜூன் 27, 2015 @ 11:39:28

  படமும் கவிதைகளும் அருமை.

  மறுமொழி

 6. kowsy2010
  ஜூன் 27, 2015 @ 14:14:29

  எட்டு எட்டு எட்டும் மட்டும் எட்டு
  எட்டி விட்டால் கீழே எட்டும் தூரம் இல்லை .

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: