65. இரட்டைவால் குருவி

bird drango1

இரட்டைவால் குருவி

கரிக்குருவி, வலியன் குருவி,கரிச்சான்,

கருவாட்டு வாலி, ஆனைச்சாத்தன்,காரியெனும்

கறுப்பான பல பெயருடைய இரட்டைவால் குருவி

கண்டம் ஆசியா தாயகமான சிறுகுருவி

கீச்சுக் கீச்சு ராகமாய் உற்சாகச் சுரத்தில்               

கீதமிசைக்கும் அடர்த்தியற்ற காட்டில் வாழும்

வால் இரண்டாய்ப் பிளந்து ஆங்கில

’வி’  எழுத்துருவில் இருபத்தெட்டு செ.மீ. நீளம்

பயமற்றது, துணிச்சல், உரமுடை மனம்

பசுக்களின் மீதேறிச் சவாரி செய்யும்

பருந்து, காகம், கழுகுகளை ஓடஓட

பராக்கிரமமாய் விரட்டிக் கொத்தி எதிர்க்கும்!

எறும்புப் புற்றின் மீது அமருமாம்

எண்ணற்ற தன்னுடலின் உண்ணிப் பூச்சிகளையழிக்க!

எறும்புகள் வெளியாக்கும் பாஃமிக் அமிலத்தில்

எல்லாப் பூச்சிகளும் அழியுமாம்! வியப்பு!

(தொலைக்காட்சித் தொடராக ” இரட்டைவால் குருவி ” பார்த்த போதுஅதில் விவாகரத்துப் பெற்று 3 வருடத்தின் பின் சந்திக்கும் மாஜி தம்பதியினரிடை நடக்கும் மனப் போராட்டம் பற்றியதாக இருக்கும் போது கதாசிரியர் என்ன சிந்தையில் இரட்டைவால் குருவி என்று தலைப்பு வைத்திருப்பார் என்று ஆராய எண்ணி அது பற்றித் தேடினேன் என்னைப் போல் வேறும் பலருக்கு சிந்தை வந்திருக்குமோ  என்று எழுதியது.(தன் கூட்டு எல்லைக்குள் வரும் யாராயிருந்தாலும் எதிர்க்கும் குணமுடைய குருவி))

பா வானதி  வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

14-6-2015

stock-vector-cute-fun-and-colorful-simple-birds-with-lines-leaves-and-flourishes-perfect-wallpaper-or-border-79893292-oo

16 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Murali Dharan
  ஜூன் 28, 2015 @ 00:58:21

  ரெட்டைவால் குருவி பற்றய தகவல் நிறைந்த அழகான கவிதை. சூப்பர்

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  ஜூன் 28, 2015 @ 01:54:47

  அருமை சகோதரி…

  மறுமொழி

 3. karanthaijayakumar
  ஜூன் 28, 2015 @ 02:04:47

  கவி
  அருமை சகோதரியாரே
  நன்றி

  மறுமொழி

 4. இராமாநுசம்
  ஜூன் 28, 2015 @ 02:51:44

  இதுவரை அறியாத செய்தி! அறிந்தேன்! நன்றி!

  மறுமொழி

 5. முனைவர் ஜம்புலிங்கம்
  ஜூன் 28, 2015 @ 14:25:27

  ரசித்தேன். நன்றி.

  மறுமொழி

 6. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  ஜூன் 28, 2015 @ 16:43:39

  வணக்கம்
  ரசித்தேன். நன்றி.
  .

  மறுமொழி

 7. raveendran sinnathamby
  ஜூன் 29, 2015 @ 12:22:08

  ரெட்டைவால் குருவியில் எனது பெறாமகள் தர்சிகாவும் கயல் பாத்திரத்தில் நடிக்கிறார்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 29, 2015 @ 16:09:14

   இலங்கைப் பெண் தர்சிகா என்று இருந்தது. யாராயிருக்கும் என்று யோசித்தோம்
   மிக்க நன்றி தெரியத்தந்ததற்கு.
   அதற்கும் இனிய வாழ்த்துகள் சகோதரா.

   மறுமொழி

 8. தி.த்மிழ் இளங்கோ
  ஜூன் 30, 2015 @ 08:52:18

  அன்புள்ள சகோதரி கோவைக் கவி – திருமதி. வேதா. இலங்காதிலகம் அவர்களுக்கு வணக்கம்! WORDPRESS இல் நீங்கள் படைக்கும் ஆக்கங்களை தமிழ்மணத்தில் தொடர்ந்து படிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன்.

  நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.

  தங்களின் வலைத்தளத்தினை இன்று (30.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

  இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

  அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:
  நினைவில் நிற்போர் – 30ம் திருநாள்
  http://gopu1949.blogspot.in/2015/06/30.html

  மறுமொழி

 9. கோவை கவி
  ஆக 28, 2015 @ 07:46:24

  மிக்க நன்றி ஐயா கருத்திடலிற்கு.
  மகிழ்ந்தேன்.
  இவரது முழு இடுகைகளும் பார்த்து உடனுக்குடன் கருத்தகள் இட்டேன்
  இந்தத் தடவை.
  மறுபடியும் நன்றி இளங்கோ சார்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: