18. 63வது பிறந்த நாள் அமரர் கமலாம்பாள்

63th kamal..

இலங்கை கொழும்பில் அமரரான என் தங்கையின் பிறந்த நாள் பிரார்த்தனையில்  இங்கிருந்து நானும்…29-6-2015 ல்….

63வது பிறந்த நாள் அமரர் கமலாம்பாள்

முகில் பூக்கள் படைசூழ்ந்த
அகில் புகையும் ஆர்மோனியங்களின்
திகிலற்ற இசையுள் நனைந்து
சுகித்திருப்பாய் மென் காற்றாக.
இன்றுன் அ,றுபத்தி மூன்றாமகவை
என்ன ஆச்சரியமொரு முறைNனும்
உன்னை நான்கு மாதங்களுள்
சின்னக் கனவாகவும் காணவில்லை.

அன்பெனும் கிரீடம் சூட்டி
இன்ப விருந்தோம்பல் செங்கோலெடுத்து
நன்மையான அறுபத்திரண்டு வருடங்கள்
மின்னலாய் ஒளிர்ந்து மறைந்தாய்
வாழ்வின் புரிதல், நியமங்களில்
ஆழ்ந்து உழலும் துன்பமில்லை.
பவள மல்லிகையாய், மயிலிறகாய்
பவளமாய் ஒளிர்கிறாய் சாந்தி!

இரவும் பகலும் உன்
தரமான அன்பு பச்சையமாகி
வரம் தரட்டும் எமக்கு
சரங்களாய் இறங்கட்டுமுன் ஆசிகள்!
எட்டிச் சிறகடித்துப் பறந்தாலும்
விட்டுப் பிரியாது நாளும்
தொட்டு விளையாடுகிறதுன் நேசம்.
பட்டொளியானவுன் அனுபவங்களிற்கு நன்றி.

வேதா. இலங்காதிலகம்.

131030473_1xjavil_1435400021

10 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. முனைவர் ஜம்புலிங்கம்
  ஜூன் 29, 2015 @ 12:37:03

  நல்ல புகழஞ்சலி

  மறுமொழி

 2. karanthaijayakumar
  ஜூன் 29, 2015 @ 14:29:21

  தங்கைக்க புகழஞ்சலி

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  ஜூன் 30, 2015 @ 04:43:47

  என்றும் ஆசிகள் உண்டு சகோதரி…

  மறுமொழி

 4. yarlpavanan
  ஜூன் 30, 2015 @ 11:12:12

  “அன்பெனும் கிரீடம் சூட்டி
  இன்ப விருந்தோம்பல் செங்கோலெடுத்து
  நன்மையான அறுபத்திரண்டு வருடங்கள்
  மின்னலாய் ஒளிர்ந்து மறைந்தாய்
  வாழ்வின் புரிதல், நியமங்களில்
  ஆழ்ந்து உழலும் துன்பமில்லை.
  பவள மல்லிகையாய், மயிலிறகாய்
  பவளமாய் ஒளிர்கிறாய் சாந்தி!” என
  அன்பு உள்ளங்கள் என்றும்
  எங்கள் உள்ளங்களில்
  வாழ்ந்துகொண்டே இருப்பர்!

  மறுமொழி

 5. முனைவர் ஜம்புலிங்கம்
  ஜூலை 01, 2015 @ 02:25:18

  திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் தங்களை அவருடைய தளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார். வாழ்த்துக்கள்.
  http://drbjambulingam.blogspot.com/
  http://ponnibuddha.blogspot.com/

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 28, 2015 @ 08:02:54

   கருத்திடலிற்கு மிகுந்த நன்றி.
   ஆம் சகோதரா அவரது பதிவு முழுவதற்கும் இந்தத் தடவை
   சென்று கருத்திட்டேன்.
   தகவலிற்கு மிகுந்த நன்றி.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: