380. புரட்சி முழக்கம்.

11291794_487523911412809_1230798324_n

அமீரகம் ” தமிழ்த் தேர் ”  க்கு எழுதியது.

புரட்சி முழக்கம்.

புரட்டும் பொய்மைத் திரட்சியின் கொடுமை

விரட்டும் வன்முறை, மிரட்டும் அச்சுறுத்தலின்

அரட்சியிலும் எழும். முரட்டுத்தனமா யெழும்.

வரட்சியாம் நியாயத்திலும் புரட்சி முழக்கமெழும்!

புரட்டுதல் திருப்பம் கொண்டு வரும்.

மிரட்டும் மாற்றம் திருத்தம் பெருக்கும்.

அடிமை விலங்கு உடைத் தெறியும்

முடிவுரை அமைக்கும் சர்வாதிகார ஆட்சிக்கு.

 

வன்முறை அகிம்சைப் பாதையிலும் புரட்சி.

உண்ணா விரதமும் ஒருவகைப் புரட்சி.

மழையின் தாராளமுமொரு பசுமைப் பரட்சி

சமூக அக்கறைப் போராட்டம் புரட்சி.

லெனினுக்கு வெற்றி ஆயுதப் புரட்சியால்.

அரசுக்கு எதிரான பிரெஞ்சுப் புரட்சி

மன்னராட்சி வீழ்த்திய பிரெஞ்சுப் புரட்சி

நவீன வரலாற்று யுகம் வளர்த்தது.

பா ஆக்கம்

 பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

27-4-2015

vector_146.cdr

25. மழையே….. மழையே

a0613308

மழையே மழையே

மழையே மழையே வருவாய்

 குழைகள் நனைக்க வருவாய்

 குழிகள் தோண்டி நாமும்

 குசும்பாய் விளையாட வருவாய்! (மழையே..)

 

 

மண்ணை நனைத்துக் கூழாக்கி

 சின்ன விரல்களில் அப்பிட

 குழைத்து மண்ணைப் பிசைந்திட

 மழையே மழையே வருவாய்! (மழையே..)

 

 

 மழைநீர் குழியுள் நிறைய

 மகிழ்வோம் எமது கிணறென்று

 கவட்டைக் கம்புகள் இரண்டு

கிணறு அருகில் ஊன்றுவோம். (மழையே..)

 

 

அச்சுலக்கையோடு சிலுவையாக்கும் தடி

அமரும் துலாவாகக் கவட்டையில்

கயிறு வாளி தேடியிணைத்து

கிணறு இறைப்போம் மகிழ்வாய் (மழையே..)

 

 

பா ஆக்கம் 

பா வானதி வேதா.இலங்காதிலகம்.

டென்மார்க்.

6-5-2015.

malai..malai..

 

Next Newer Entries