385. காட்சிக்கு நான்கு குருவி + மந்த தோற்றம்

11356062_847745791946288_1022635255_n

படவரி   17
1. காட்சிக்கு நான்கு குருவி

ஏழு நிறப் பிரிகை எனலாம்
ஏன் இன்னும் அதிகமும் எனலாம்
குச்சிலாம்பிலொரு பிரபஞ்ச நீர்த் தொட்டிலோ!
உச்சி வேளையல்ல ஊருறங்கப் போகிறது.

ஆரம்ப ஓவிய வகுப்பில் நான்
ஆறுதலாக வண்ணம் பூசியது முப்பிரிவு
நிலம், நீர்; வானம் – இங்கு
நிறைவாக நான்கு குருவி வரையலாம்!

வரிகளாக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
20-6-2015

2. மந்த தோற்றம்

வெண் சீருடை கழுவ
கண்ணன் மாயனின் வண்ணமாம்
கண் பறிக்கும் நீலப்பொடியை
எண்ணிக் கலக்கியது யாராகும்!
           –அன்றி –
விண்முகில் இங்கு சடுதியாய்
மண்ணில் தெரியும் மாயை!
திண்ணமோ இது நானறியேன்! 
கண்ணின் எண்ண மயக்கமோ!
            – ஒன்று –
இந்தப் பூனையும் பாலருந்துமோவென
மந்த தோற்றத்திலுறங்கும் கடலே!
மொத்த உலகுயிர்களைச் சுருட்டி
கத்தி ஆக்ரோசமான சுனாமியாவதும்
               – நீ தானே! – 

https://www.vallamai.com/?p=58919

வரிகளாக்கம்  வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
19-6-2015

chainborder

10 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. முனைவர் ஜம்புலிங்கம்
  ஜூலை 04, 2015 @ 11:34:34

  கவிதை வரிகள் படத்தின் அழகை விஞ்சிவிட்டன.
  புத்தரைத் தேடும் எனது பேட்டியைக் காண அழைக்கிறேன்.
  http://ponnibuddha.blogspot.com/2015/07/blog-post.html

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 01, 2015 @ 16:45:54

   ஐயா மன்னியுங்கள் புத்தர் பற்றிய தேடல் ஆக்கம் இன்று தான் பார்த்தேன்.
   கருத்திட்டுள்ளேன்.
   தங்களது கருத்திற்கும் மிக்க நன்றி.

   மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  ஜூலை 04, 2015 @ 11:41:00

  ரசித்தேன் சகோதரி…

  மறுமொழி

 3. umayalgayathri
  ஜூலை 04, 2015 @ 12:57:12

  அருமையான வரிகள் சகோ நன்றி

  மறுமொழி

 4. karanthaijayakumar
  ஜூலை 04, 2015 @ 14:56:11

  படித்தேன்
  ரசித்தேன்
  நன்றிசகோதரியாரே

  மறுமொழி

 5. Bagawanjee KA
  ஜூலை 04, 2015 @ 16:25:19

  நீங்கள் வரையாமலே ,நான்கு குருவிகள் பறப்பது மனக் கண்ணில் விரிகிறதே 🙂

  மறுமொழி

 6. கோவை கவி
  அக் 01, 2015 @ 16:51:33

  அது தான் ரசனை என்பது சகோதரா.
  தங்களது கருத்திற்கும் மிக்க நன்றியும் மகிழ்வும்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: