41. இணையத் தமிழே இனி..

surfing-the-internet

இணையத் தமிழே இனி..

*

சுணையற்று உறைந்தவர்மணை விட்டெழுகிறார்!

அணைகிறார் தமிழ் ஆய்வு செய்கிறார்!

புணையாக்கி இணையத் தமிழுள் நீந்துகிறார்!

இணைந்து ஆர்வமாய்ப் பின்னுகிறார்! விதைக்கிறார்!

இணையற்ற ஏணியிது தமிழ் வானிற்கு

பணையுடை பாட்டரும் காணாத சுரபி

பிணையும் எழுத்துப் பிழைகள் பாசி

கணைச் சூடாகாது வெல்லல் வாசி

*

தூசி நிறை இதயக்கமலத்தைப் பலர்

பாசி படர்ந்த கிணறாக ஆக்குகிறார்

ஆசியுடைத் தமிழடிகள் ஒளி ஈர்த்து

வாசிக்கிறாராதித் தமிழ்ச் சங்க நூல்களை

பூசித்துக் கூடித் தமிழ் எழுதுகிறார்

கூசித் தம் மொழிக்கு உயிரூட்டுகிறார்

நேசித்துப் புனிதமாய் இலக்கணம் படிக்கிறார்.

யாசிக்காத இணையத் தமிழே! அற்புதம்!

*

கட்டுரை, சரித்திரம், ஆராய்வு, புவியியல்,

கொட்டிய கலைகள், சமயம், அரசியல்

எட்டாதது எதுவுமில்லை, யோகா, விளையாட்டென

சொட்டும் நல்லறிவு, நல்லுணர்வு பெறுமதியாய்

தொட்டிட்டால் வித்தகங்கள் அள்ளலாம் வெள்ளமாய்!

தட்டும் விரல்நுனி வியப்பு நூலகம்!

எட்டும் இணையத் தமிழே இனி

கொட்டும் முரசு வெள்ளிடை மலை!

*

(மணை – அமரும் பலகை, சிறு பீடம்.   புணை – தெப்பம்.

பணை – பெருமை.  கணைச் சூடு – நோய் வகை   சுணை – சுரணை, அறிவு, கூர்மை)

*

பா ஆக்கம்

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

12-5-2015.

computer or connection

9 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  ஜூலை 09, 2015 @ 11:13:45

  // யாசிக்காத இணையத் தமிழே… // ஆகா… அற்புதமே…!

  மறுமொழி

 2. Yarlpavanan “Jeevalingam” Kasirajalingam
  ஜூலை 09, 2015 @ 12:09:38

  “தட்டும் விரல்நுனி வியப்பு நூலகம்!
  எட்டும் இணையத் தமிழே இனி!” என்றே
  இணைய வழிப் பயன்கள் அதிகம்
  பாராட்டுகள்!

  மறுமொழி

 3. Murali Dharan
  ஜூலை 10, 2015 @ 02:13:33

  அருமை.

  மறுமொழி

 4. karanthaijayakumar
  ஜூலை 10, 2015 @ 14:40:55

  அருமை
  அருமை
  சகோதரியாரே

  மறுமொழி

 5. கோவை கவி
  அக் 29, 2015 @ 17:11:33

  You, Janani Sivananthavadivel, Rathy Mohan, Shanmugam Subramaniam and 15 others like this.
  1 share
  Comments

  Maraiyoor Maniyin Paakkal :- மீ நன்று
  July 6 at 8:04am · Like

  Vetha Langathilakam :- வாழ்த்த நேரமற்ற உலகில் உமது
  அன்பு வார்த்தைகளை ரசித்தேன் மணி.
  மகிழ்ந்தேன். மிக்க நன்றி சகோரா
  July 6 at 8:31am · Like

  Kiruba Pillai :- அழகுப்பா
  July 6 at 7:18pm · Unlike · 1

  Vetha Langathilakam :- மகிழ்ந்தேன். மிக்க நன்றி சகோ..dear K.P
  July 6 at 10:16pm · Like

  Subajini Sriranjan :- அருமையான பாடல்
  நல்வற்றை தேடு
  தீயவற்றை விலக்கு…See More
  July 6 at 10:24pm · Like

  Sujatha Anton:- பணையுடை பாட்டரும் காணாத சுரபி

  பிணையும் எழுத்தப் பிழைகள் பாசி…See More
  July 8 at 9:15pm · Unlike · 1

  Sivakumary Jeyasimman:- puthiya sorkalai ariya koodiyathaaka irukku nanri akka.
  July 12 at 10:15pm · Unlike · 1

  Vetha Langathilakam :- Subajini Sriranjan //இன்று ஒரு இடத்தில்இருந்து கொண்டே
  உலகத்தை படிக்கின்ற
  வசதி…….// மகிழ்ந்தேன். மிக்க நன்றி SUba.
  July 13 at 8:44am · Like

  Vetha Langathilakam:- Dear Sujatha – Siva.Jeya மகிழ்ந்தேன். மிக்க நன்றி
  July 13 at 8:44am · Like

  Rathy Mohan :- இணையத்தில் தமிழ்
  இணைந்தோம் நாம்
  இனியத்தமிழை எம்

  கைப்பேசிக்குள் வைத்து

  சுவைக்கின்றோம் இங்கு
  தொழிற்நுட்ப பரிணாம வளர்ச்சி
  அவசர உலகில் எமக்கோர் எழுச்சி..

  வாழ்க தமிழ் !!!!
  July 14 at 5:16am · Like

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: