387. கரகாட்டம்.

draft_lens5290312module152668042photo_13-1

1. கரகாட்டம்.

வரமிகு மாரியம்மன் வழிபாட்டுக் கலையாம்
உரமான தமிழர் பாரம்பரிய ஆட்டம்
கரகாட்டம் பெண்கள் ஆடும் கலை.
கரகம் பூக்குடம், செம்பு, கும்பம்,
கமண்டலம், நீர்க்குடமெனப் பல பெயர்கள்.
கரகம் தலையில் வைத்து ஆடல்.
கரங்களால் குடம் பிடிக்காமல் ஆடல்.
கரகம் குடக்கூத்து சங்க இலக்கியத்தில்.

தொழில்முறைக் கரகம், ஆட்டக் கரகம்,
தெய்வவழிபாட்டுக்கரகம், சக்திக் கரகம்.
மண்ணால் செய்வது தோண்டிக் கரகம்
பித்தளையால் செய்வது செம்புக் கரகமாம்.
ஆடும் கலையிது சமநிலை (balance) பேணல்.
ஆடலின் இசை நையாண்டி மேளம்.
ஆடுகிறார் பெரிய சிறு உடுக்கிசைக்கும்
கூடும் செண்டை, சத்துக் குழல் பறையிசைக்கும்.

ஆட்டக் கரகம் அமைப்பு அலங்காரத்தால்
தோண்டிக் கரகம், செப்புக் கரகம்
அடுக்குக் கரகம் என்ற பிரிவுகளாகியது.
சிலப்பதிகாரம் இளங்கோவடிகள் குவக்கூத்து ஆட்டமென்கிறார்.
சிந்தை கவரும் ஆடை அணிகளால்
மொந்தைக் கள்ளுண்டதாய் மக்கள் மயங்கும்
முந்தைக் கரகாட்டம் மறைவது துயரம்.
விந்தையல்ல ஆண்களும் பெண்ணாடையோடு ஆடுகிறார்கள்.

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
11-7-2015

2- கரகாட்டம்.

கரகாட்டம் எனும் புனிதக்கலை
கரகரக்கும் ஆட்டமாய் கவிதையலை.
நரகமென முகம் சுழிக்க
விரக ஆட்டமாய் விவரிப்பு.
இரவாட்டம் போல ஓருவித
சிரகம் (வண்டு) ஊர்கின்ற நிலை.
நரகல் வாழ்விற்குச் சமம்.
பிரகாசம் இல்லா நிலை

மரகதமாய் மின்னும் கலையை
மரங்கொத்தியாய் காமம் கொத்த
விரகனாக (திறமையாளனாக) விரசமாக விவரிக்கிறான்.
விலகட்டம் மாயை! உண்மை
விசாலமாகட்டும்! பக்தி பெருகட்டும்!
தரகாட்டம் பண ஆட்டம்
முரவு கெட்ட மறையட்டும்!
மரபாட்டம் சக்தியோடு உயரட்டும்!

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
12-7-2015.

 

கரகாட்டம்

தொழில்முறைக் கரகம் ஆட்டக் கரகமடி
தெய்வவழிபாட்டுக் கரகம் சக்திக் கரகமடி
மண்ணால் செய்வது தோண்டிக் கரகமடி
பித்தளையால் செய்வது செம்புக் கரகமடி
ஆடும் கலையிது சமநிலை பேணலடி
ஆடலின் இசை நையாண்டி மேளமடி.
ஆடுகிறார் பெரிய சிறு உடுக்கிசைக்கும்
கூடும் செண்டை சத்துக் குழல் பறையிசைக்கும்.

***

கரகாட்டம் பண ஆட்டம் பக்தியாட்டமடி
கரகாட்டம் ஒரு புனிதக் கலையடி
மரகதமாய் மின்னும் கலையைச் சிலர்
மரங்கொத்தியாய் காமம் கொத்தச் செய்கிறாரடி.
சிந்தை கவரும் ஆடை அணிகளால்
மொந்தைக் கள்ளுண்டதாய் மக்கள் மயங்கும்
முந்தைக் கரகாட்டம் மறைவது துயரமடி.
விந்தையல்ல ஆண்களும் பெண்ணாடையோடு ஆடுகிறாரே.

***
31-10-2016.

2 majil

16 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. thanimaram
  ஜூலை 20, 2015 @ 11:06:26

  அருமையான கவிதை கரகாட்டாம் பற்றி!

  மறுமொழி

 2. கோமதி அரசு
  ஜூலை 20, 2015 @ 11:16:28

  கரகாட்ட கவிதை அருமை.
  கரகாட்டம் எப்படி இருக்க வேண்டும் என்று சொன்னது மிக அருமை.

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  ஜூலை 20, 2015 @ 11:55:19

  அருமை… ரசித்தேன் சகோதரி…

  மறுமொழி

 4. yarlpavanan
  ஜூலை 21, 2015 @ 10:03:19

  அருமையான
  கரகாட்டம் பற்றிய செய்தியை
  படிக்க முடிந்தது…
  சிறந்த பதிவு
  தொடருங்கள்

  மறுமொழி

 5. முனைவர் ஜம்புலிங்கம்
  ஜூலை 22, 2015 @ 02:13:29

  கரகாட்டக் கலை பற்றிய கவிதை, ரசனையுடன். நன்றி.

  மறுமொழி

 6. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  ஜூலை 22, 2015 @ 08:49:29

  வணக்கம்
  சகோதரி

  கிராமிய கலை வடிவம் பற்றி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 7. கோவை கவி
  அக் 29, 2015 @ 17:20:29

  You, கவின் மகள், Nandavanam Chandrasekaran, கார்த்திக் சரவணன் and 15 others like this.
  Comments

  Vetha Langathilakam:- கரகாட்டம்.- 2 on the way ( after reading all poems about கரகாட்டம்.)
  July 12 at 12:31pm · Like

  Subajini Sriranjan :- பாரம்பரிய கலைகளில் கரகாட்டமும் ஒன்றே.
  இக் கலையை சிறப்பித்து கவிதையாக்கிய விதம் அழகு.
  //ஆண்களும் பெண்ணாடை உடுத்தி ஆடிகின்றார்கள்//
  நடனக் கலைக்கு
  ஆடை மிக முக்கியம் என்பதை சுட்டி நிற்கின்றது …..
  அருமை.
  July 12 at 3:15pm · Edited · Unlike · 1

  Rathy Mohan:- ஆகா அருமை… விந்தையல்ல ஆண்களும் பெண்கள். உடையில்…. ரசித்து ருசித்து எழுதிய வரிகள் அழகாய் காட்சிப்படுத்தப்படுகிறது….அசத்தல்..
  July 12 at 3:14pm · Unlike · 1

  Velavan Athavan:- வேதாக்கா நீங்கள் சொல்வது உண்மை இது வெறும் கலையல்ல, அன்னை சக்தியின் அனுக்கிரகம் வேண்டி அவள் சந்நிதியில் தீ,,, மிதி நடை செய்து தன்னை தானே தூய்மையாக்கி என் தாயே நீயே என்னை ஆட்கொண்டருள் புரிவாயென ஆண்டுக்கொருமுறை எங்களூரிலும் அதாவது வல்வெட்டித்துறையிலும் பாரம்பரிய இக் கரகாட்டாம் இன்றும் திருவிழாக் காலங்களை அலங்கரித்து அன்னயின் திருப்பாதம் பணிகின்றனர் பக்த அடியார்கள்….. கரகாட்டத்தின் பக்க மேளங்கள் உடுக்கை இசை பறை முழக்கமுடன் இன்றும் தன் ஆதிகால முத்திரையுடன் இறையடி தொழுகின்றதை காணும் போதில் தமிழரின் பாரம் பரியம் மங்கா புகழுடன் வாழ்வதை கண்டு மகிழ்கிறேன்…
  July 12 at 7:00pm · Edited · Like · 1

  மறுமொழி

 8. கோவை கவி
  அக் 29, 2015 @ 17:22:12

  இரா. கி இராஜேந்திரன்.கிருஷ்ணசாமி :- தமிழர் மறந்த கலைகள் நினைவும், தமிழின் வளமையும்
  தூய்மையான இறையாண்மையும், தமிழ் நாட்டில்
  இல்லை. அயல் நாட்டில் செழிக்கிறது, வணங்குகிறேன்
  ——————————————
  மாங்குயிலே பூங்குயிலே சேதியொன்னு கேளு
  மங்கிப்போன ஆட்டத்திற்கு பாடுகிறாய் பள்ளு
  சங்கத்தமிழ் பேசுகின்ற சிங்கத்தமிழர் மேடையில்
  பொங்கியே வழிந்திடுது குத்தாட்டப் போட்டி
  சுற்றிசுற்றி பார்க்கின்றேன் கரகாட்டம் இல்லை
  பற்றியே ஆடுகிறார் மானாட்டம் மயிலாட்டம்
  காசுக்குக் கலைகளெல்லாம் வித்து முதலாச்சு
  கமபனையும் வள்ளுவனையும் மறந்து நாளாச்சு
  சிலம்பெடுத்து கண்ணகி சீறினாள் கடற்கரையில்
  சீறுவது பொருக்காமல் வாசலிலே வைத்தார்
  என்னத்தெ சோல்வேன் எப்படி சொல்வேன்
  கன்னத்தில் நீர்வழியயுன் கவிதையைப் படித்தேன்
  July 12 at 4:01pm · Unlike · 3

  Sankar Neethimanickam :- சிறிது சிறிதாக இது போன்ற கலைகள் அழித்து வருவது மனதுக்கு கடினமாக இருக்கிறது
  July 12 at 4:52pm · Unlike · 2

  Vetha Langathilakam :- sure sakothara..dear சங்கர் நீதிமாணிக்கம். Mikka nanry pakirvukku.. Makilchchy.
  July 12 at 6:07pm · Like

  Vetha Langathilakam:- @ dear sir இரா. கி இராஜேந்திரன்.கிருஷ்ணசாமி தங்கள் கருத்திடலிற்கு மிக்க நன்றியடன் மகிழ்வும்.
  July 12 at 6:09pm · Like · 1

  Vetha Langathilakam :- anpudan Velavan Athavan கலையல்ல, அன்னை சக்தியின் அனுக்கிரகம் வேண்டுவது. காமமானது தான் கவலை.
  மிக நன்றியுடன் மனமகிழ்வு தங்கள் கருத்தையிட்டு.
  July 12 at 6:11pm · Like

  மறுமொழி

 9. கோவை கவி
  அக் 29, 2015 @ 17:25:23

  Malini Mala :- கரக விளக்கம் கவிதையாக அருமை. எப்போதும் வியக்கவைப்பது தலையில் இருக்கும் குடம் எந்த அசைவின் போதும் சரியாமலே இருப்பது. நாம் வளரும் காலங்களில் போர் விழுங்கி மறைத்த களைவடிவங்களில் ஒன்று.
  July 12 at 6:12pm · Like

  Vetha Langathilakam :- dear Suba – rathy…மிக நன்றியுடன் மனமகிழ்வு தங்கள் கருத்தையிட்டு.
  July 12 at 6:12pm · Like

  இரா. கி இராஜேந்திரன்.கிருஷ்ணசாமி :- Myself shall thank you for an elegant review of the Pot Dance. There are many skills and varieties. Who do care all these. Thanks . In satyajit Ray film a dance with about 20 pots on head one ovet othet.Akasa Santhuma Raath Aaya. Wonderful.
  July 12 at 6:44pm · Edited · Unlike · 1

  Vetha Langathilakam:- Thank you sir for the good info..
  July 12 at 6:33pm · Like · 1

  சிறீ சிறீஸ்கந்தராஜா :- கரகாட்டம் பெண்கள் ஆடும் கலை.
  கரகம் பூக்குடம், செம்பு, கும்பம்,
  கமண்டலம், நீர்க்குடமெனப் பல பெயர்கள்.
  கரகம் தலையில் வைத்து ஆடல்.
  கரங்களால் குடம் பிடிக்காமல் ஆடல்.
  கரகம் குடக்கூத்து சங்க இலக்கியத்தில்.
  ********************************************************************************* அருமை அம்மா!! வாழ்த்துக்கள்!!
  July 12 at 7:16pm · Like · 1

  சிறீ சிறீஸ்கந்தராஜா:- https://youtu.be/MKs84_DxFBg

  மாங்குயிலே பூங்குயிலே (Male Solo) – Karakattakkaran (DVD-Q)
  YOUTUBE.COM
  July 12 at 7:19pm · Like · 1 · Remove Preview

  சிறீ சிறீஸ்கந்தராஜா:- https://youtu.be/_F-Xd2robkI

  மாங்குயிலே பூங்குயிலே – Karakattakaran (DVD-Q)
  YOUTUBE.COM
  July 12 at 7:20pm · Like · 1 · Remove Preview

  Vetha Langathilakam :- ஆகா!…. சிறீ..ஊரில் இல்லையா?..
  கருத்திற்கு நன்றியும் மகிழ்ச்சியும்.
  July 12 at 7:38pm · Like

  சி வா :- சிந்தை கவரும் ஆடை அணிகளால்
  மொந்தைக் கள்ளுண்டதாய் மக்கள்மயங்கும்
  முந்தைக் கரகாட்டம் மறைவது துயரம்….விந்தையல்ல ஆண்களும் பெண்ணாடையோடு ஆடுகிறார்கள்.

  Vegu sirappaana vimarsanam amma.. ithu oru paarambariyak kalai endrum..

  Ithu innaalil yeppadi seeraligirathu endru vaazhayil oosi yetruvathu pola vanmayaana karuthai menmayaagach cholli.. sangath thamilil then kulaithu eluthiya “narp pa” Vetha Langathilakam amma..
  July 12 at 10:24pm · Like

  மறுமொழி

 10. கோவை கவி
  ஜூலை 12, 2018 @ 07:27:48

  2- கரகாட்டம்.*s comment:-

  Jeyam RamaChandran:- This folk dance had been really an artistic display of our culture in olden days. But due to paucity of money the artists are compelled to make it a sexual output. They should be given proper attention in order that the magnanimity of that artistry is maintained. Your poem describes the realty as is.
  Manage
  3y · Like – 2015

  Pisupati Subramanyam :- கலைஞர்களென்றாலே குறைவாக மதிப்பிடும் காலம் மாறுவதென்னேரம்? …>>>…P.S.
  2015
  Vetha Langathilakam :Dear sir Pisupati Subramanyam மிக நன்றி தங்கள் இனிய பகிர்தலிற்கு

  Kannadasan Subbiah:- அருமை கவிஞரே
  நல்வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
  கரகாட்டத் திருவிழா கண்ட மகிழ்வு
  Vetha Langathilakam Kannadasan Subbiah மிக நன்றி தங்கள் இனிய பகிர்தலிற்கு.

  Solai Malai :- அருமை. கலாசாரம் மாறிவிட்டது

  Vavuniya Vijeyaletchumy :- போற்றுதற்குரியது.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: