25. டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம். (15-10-1931—27-7-2015)

1506516_340117702778936_7427974958756135061_n

டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம். (15-10-1931—27-7-2015)

இந்திய ஏவுகணை நாயகன், தமிழ்
இலக்கிய ஆர்வலன், பன்முக விஞ்ஞானி
இந்தியா வல்லரசாகக் கனவு கண்டார்.
இராமேஸ்வரத்தில் உதித்த முத்து கலாம்.
இந்திய அறிவியல் நட்சத்திரம், வீணையும்
இசைக்கும் இசை ஆர்வலர் மரணமற்றவர்.
மகத்துவர், மக்களின் ஜனாதிபதியானவருடல் மறைந்தது.
மனிதருள் மாணிக்கத்திற்கு ஆத்ம அஞ்சலி.

பத்மபூஷன், பாரதரத்னா, ஆர்யபட்டா இன்னும்
பத்விபூஷன் என்று எண்ணற்ற விருதாளர்.
படகு சொந்தக்காரன் மரைக்காயர் தந்தையார்.
ஜைனுலாப்தீன் – ஆஷியம்மாவின் திருப்புதல்வன்.
சைவ உணவுக்கார இசுலாமியர், உலகமறை
திருக்குறளின் அடியொற்றி நடந்த பிரம்மச்சாரி.
திருவே அறிவென உலகோரை ஊக்கியவர்.
நெருப்பின் சிறகுகளிவர் ஆங்கிலச் சுயசரிதை.

மாமேதை, கனவுகள் காணுங்களென்று நினைவாகினார்.
மார்க்கம் காட்டி இளையோர் சிந்தனைகள்
தீர்க்கமாக மாணவர் குழாமுடன் கலந்தவர்.
பார் போற்றும் விஞ்ஞானி கவிஞருமாவார்.
நாட்டுக்காகத் தனையீந்த நற் சிந்தனையாளர்.
அறிவியல் தொழில் நுட்பத்தை நல்ல
நெறியோடு காதலித்த இந்தியத் துருவநட்சத்திரம்.
அறிவால் அறிமுகம் அறிவுறுத்திய அறிஞன்.

சாந்தி சாந்தி

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
28-7-2015.

11817266_915548441817403_3094461405612453494_n

anjali-2

16 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  ஜூலை 28, 2015 @ 13:41:38

  ஆழ்ந்த இரங்கல்கள்… அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்…

  மறுமொழி

 2. B Jambulingam
  ஜூலை 29, 2015 @ 01:43:08

  ஆழ்ந்த இரங்கல்கள். உங்களோடு நானும் அஞ்சலி செலுத்துகிறேன்.

  மறுமொழி

 3. Karanthai Jayakumar
  ஜூலை 29, 2015 @ 02:09:35

  ஆழ்ந்த இரங்கல்கள்

  மறுமொழி

 4. கோவை கவி
  ஜூலை 29, 2015 @ 07:48:49

  James Gnanenthiran added in FB
  29-7-2015.
  ஒரு பேரிழப்பு..
  Avul Pakir Jainulabdeen Abdul Kalam- இதுதான் அவர் முழுப்பெயர் . நாட்டின் ஜனதிபதியாக , ஒரு பொறியியலாளராக, ஒரு விஞ்ஞானியாக , ஒரு பேராசிரியராக , ஒரு எழுத்தாளராக ஒருவர் இருக்க முடியமென்றால் அது அப்துல் கலாம் ஒருவரால்தான் முடியும் . . தமிழ்நாடு ஈன்ற இந்தமாமேதையால் இழப்பு பாரதத்திற்கு மாத்திரமல்ல முழு உலகுக்கும்தான் .

  மறுமொழி

 5. Vasantha Vivek
  ஜூலை 29, 2015 @ 10:52:32

  ஒரு ஆசிரியையாக என்னை மிகவும் பாதித்த மாமேதை …. எங்கள் நாடே கண்ணீரில் தவிகின்றது … என்றும் அவர் எம்முடன் வாழ்வார் ….

  மறுமொழி

 6. Sankar Lagood
  ஜூலை 29, 2015 @ 12:16:16

  திரு.APJ.அப்துல் கலாம் அவர்களது ஆன்மா சாந்தியடைய வான்மீகீ பிரார்த்தனை மன்ற சார்பாக எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்

  மறுமொழி

 7. Arrow Sankar
  ஜூலை 29, 2015 @ 12:16:55

  திரு.APJ.அப்துல் கலாம் அவர்களது ஆன்மா சாந்தியடைய வான்மீகீ பிரார்த்தனை மன்ற சார்பாக எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்

  மறுமொழி

 8. கோவை கவி
  அக் 29, 2015 @ 17:31:58

  Jeeva Kumaran:- ஒரு முதியோர் இல்லத்தில் அல்லது ஆஸ்பத்திரிக் கட்டிலில் கண்ணயர்ந்து மீளாத் தூக்கத்திற்கு செல்லாது தனது இலட்சியக் கனவான இளைஞர்கள் கூடியிருந்த பல்கலைக்கழக மேடையில்… தனது 83 வயதில் பிரியாவிடை சொல்லிச் சென்ற மாபெரும் ஆளுமைக்கு எனது அஞ்சலிகள்.
  July 28 at 11:01am · Unlike · 3

  Sankar Neethimanickam :- அய்யா அவர்களை பற்றி படிக்கும் போதும், செய்திகள் பார்க்கும் போதெல்லாம் கண்களில் நீர் சொரிகிறது.. மனம் கனக்கிறது..
  July 28 at 3:12pm · Unlike · 2

  Yashotha Kanth :- கண்ணீரை காணிக்கையாக்குகிறேன்…..

  உம்மை மண்ணில்(புதைக்கும்) விதைக்கும் போது …..
  உம்மை போல் ஒன்றாவது முளைக்காதா …..
  ஏக்கத்துடன் நாங்கள் ….
  July 28 at 3:29pm · Unlike · 2

  Velavan Athavan :- இளைஞோர் நாயகன் இளவலுக்கு கண்ணீர் அஞ்சலி
  July 28 at 10:06pm · Like

  மறுமொழி

 9. கோவை கவி
  அக் 29, 2015 @ 17:35:38

  மறுமொழி

 10. கோவை கவி
  அக் 29, 2015 @ 17:37:49

  Loganathan Ratnam photo
  July 29 at 2:57am · Like

  Kiruba Pillai:- RIP frown emoticon
  July 29 at 4:50am · Like

  Vetha Langathilakam :- Gnani, Shenbaga Jagatheesan and 6 others like this.

  Gnan:-. i மாணவர் குழாமுடன் கலந்தவர்.

  Sathya Murti :- ஆஹா அஹா ஓஹோ ஓஹோ பேஷ்

  Komathi Kesavan என்றும் உம் புகழ்
  வாழ்க வளமுடன்
  29-7-2015
  July 29 at 10:04am · Edited · Like · 1

  Kannan Sadhasivam’s photo.
  July 29 at 11:13am · Unlike · 1

  Arunthathy Loganathan
  July 30 at 2:56am · Like

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: