386. உவப்பானது வாழ்வு

11038927_10204300568889732_4145562627728076659_n

உவப்பானது வாழ்வு

குவலயம் நிறை இயற்கை.

தவமாய் அமையும் வாழ்க்கை

அவமற்ற உயர் வாய்ப்பை

அவலமாக்குவது விந்தையிலும் விந்தை.

கவலை உதிரும் இறகு!

சவமெனக் கைவிடு! சிரி!

உவப்பான வாழ்வில் துன்பத்தை

துவளாது நெற்றியில் பூசுவதேன்!

சவலைச் சிந்தனைகள் பேசி

உவமைகளும் கூறி ஊதி 

சவர்காரமாய் நுரைக்க வீசி

கவருகிறார் மானுட அமைதியை

வறட்சியற்ற மனக் குளத்தில்

திறனாய்க் கல்லெறிந்து கலக்குதலால்

இறப்பு மனவருவி வளையோசைகள்.

சிறக்கவையுங்கள் சந்தோச ஒத்திகையை.

பா ஆக்கம் 

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

4-6-2015

padaku

385. காட்சிக்கு நான்கு குருவி + மந்த தோற்றம்

11356062_847745791946288_1022635255_n

படவரி   17
1. காட்சிக்கு நான்கு குருவி

ஏழு நிறப் பிரிகை எனலாம்
ஏன் இன்னும் அதிகமும் எனலாம்
குச்சிலாம்பிலொரு பிரபஞ்ச நீர்த் தொட்டிலோ!
உச்சி வேளையல்ல ஊருறங்கப் போகிறது.

ஆரம்ப ஓவிய வகுப்பில் நான்
ஆறுதலாக வண்ணம் பூசியது முப்பிரிவு
நிலம், நீர்; வானம் – இங்கு
நிறைவாக நான்கு குருவி வரையலாம்!

வரிகளாக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
20-6-2015

2. மந்த தோற்றம்

வெண் சீருடை கழுவ
கண்ணன் மாயனின் வண்ணமாம்
கண் பறிக்கும் நீலப்பொடியை
எண்ணிக் கலக்கியது யாராகும்!
           –அன்றி –
விண்முகில் இங்கு சடுதியாய்
மண்ணில் தெரியும் மாயை!
திண்ணமோ இது நானறியேன்! 
கண்ணின் எண்ண மயக்கமோ!
            – ஒன்று –
இந்தப் பூனையும் பாலருந்துமோவென
மந்த தோற்றத்திலுறங்கும் கடலே!
மொத்த உலகுயிர்களைச் சுருட்டி
கத்தி ஆக்ரோசமான சுனாமியாவதும்
               – நீ தானே! – 

வரிகளாக்கம்  வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
19-6-2015

chainborder

Next Newer Entries