67. புல்.

green-grass-hd-wallpapers-free-nature-images

     புல்

புல்லில் படுத்து வானம் பார்

அல்லல் தீர்க்கும் பாதைக்கு ஊர்!

மெல்லென மனவுடல் களைப்பழிக்கும் இச்சை

சில்லெனக் கண்களைக் குளிர்விக்கும் பச்சை.

புல்வெளி கால்நடைகளின் மேய்ச்சல் நிலம்.

பல் வகைப் புற்கள் நல் மருந்தாம்.

புல் பூமாதேவியின் பாதுகாப்புக் கவசம்.

உல்லாசம் சீவன்களிற்குப் புல்லில் புரள்தல்.

***

புல்லில் காகிதம் செய்தனர் கி.மு2400ல்.

புல்லின் அரசன் அறுகம் புல்லாம்.

அகரம் புல், அருகன் புல்லாகிய

அறுகம் புல்லில் பல இனங்களுண்டு.

ஏகப்பட்ட பெயர்கள் அருகன் புல்லிற்கு.

காகா மூலி, ஆரோக்கியப் புல்,

குழந்தைகளிற்குக் குருமருந்து, பிள்ளையார் புல்,

விஷ்ணு மூலியென்றும் சித்தர் வழங்குகிறார்.

***

தலைவலி, கண்ணுபாதைக்கு நற்பசுமைவிருந்து.

விலையில்லை உலகிலிதற்கு வேறொருமருந்து.

நீர் வாழ் தாவரங்களும் புல்லினமே.

தர்ப்பை, அறுகம்புல் நீரின்றி வளரும்.

தர்ப்பை இரத்த அழுத்தத்தைக் கட்டப்படுத்தும்.

தர்ப்பைக் காற்றால் தொற்றுநோய் நெருங்காது.

நீரில் அழுகும் தன்மையற்றது தர்ப்பை.

சூரியகிரகணம் இதன் வலிமையை அதிகரிக்கும்.

***

பா ஆக்கம்

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

6-7-2015

grass line

Advertisements

9 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ramani
  ஆக 02, 2015 @ 23:09:15

  புல்லின் மகத்துவம்
  அது தரும் ஆனந்தம், சுகம்
  கவியாகச் சொல்லிச் சென்ற விதம்
  மிக மிக அற்புதம்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

 2. Karanthai Jayakumar
  ஆக 03, 2015 @ 00:58:23

  புல்லின் மகத்துவம்
  அறிந்தேன் சகோதரியாரே
  நன்றி

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  ஆக 03, 2015 @ 03:06:58

  அருமை சகோதரி…

  மறுமொழி

 4. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  ஆக 03, 2015 @ 03:44:55

  கவியில் பயன் படும் விடயங்கள் அருமை சகோ….

  மறுமொழி

 5. கோவை கவி
  அக் 29, 2015 @ 17:57:29

  You, Puducherry Devamaindhan, சி வா, Arumugam Mahenthy and 22 others like this.
  Comments

  Ratha Mariyaratnam :- அருமை சகோதரி
  July 10 at 8:09am · Like

  Jeeva Kumaran :- புற்கள் பற்றிய நல்ல தொகுப்பு
  July 10 at 8:13am · Like

  Sankar Neethimanickam :- அம்மா.. புற்களை பற்றி மிகசிறந்த வரிகள்.. அதனுடன் அவற்றின் பயன்கள்… வாவ்..
  July 10 at 8:37am · Like

  Subajini Sriranjan :- அழகான வரிகள்
  புல்லின் சிறப்பும் அதன் பயனும்…….
  July 10 at 3:36pm · Unlike · 1

  Velavan Athavan :- புல்லில் படுத்து வானம் பார்
  அல்லல் தீர்க்கும் பாதைக்கு ஊர்!
  அகரம் புல், அருகன் புல்லாகிய
  அறுகம் புல்லில்
  காகா மூலி, ஆரோக்கியப் புல்,விஷ்ணு மூலியென்றும் சித்தர் வழங்குகிறார். – சகோதரி வேதாக்கா தேடலில் ஔவை நீங்கள் அள்ளி அள்ளி தருகிறீர்கள் அள்ளக்குறையா அன்னைத் தமிழில் ஆரோக்கிய மூலி அட்சய பாத்திரத்திலிருந்து யாவும் சிறப்பு…
  July 10 at 11:38pm · Unlike · 1

  Malini Mala:- புல் பற்றிய சிறந்த விவரணம்
  July 10 at 11:45pm · Unlike · 1

  James Gnanenthiran:- Pul kavithai Nanraaga irukkinrathu
  July 11 at 12:16pm · Unlike · 1

  Vetha Langathilakam :- அன்புடன் ராதா – ஜீவா – சங்கர் நீதி மாணிக்கம்
  மிக மகிழ்வும் நன்றியும் தங்கள் கருத்துப் பகிர்விற்கு.
  July 11 at 12:33pm · Like

  Vetha Langathilakam :- அன்புடன் சுபா – சுஜேன் – மாலினி – ஜேம்ஸ்
  மிக மகிழ்வும் நன்றியும் தங்கள் கருத்துப் பகிர்விற்கு.
  July 11 at 12:34pm · Like · 1

  Vetha Langathilakam:- Mur Ugesh, Sivakumar Kc, Gnani, Sathya Murti, KDoss Doss likes this.
  July 12 at 12:20pm · Like

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: