391. துணிவு. (2)

SUKSESS

துணிவு.

இடைஞ்சலை எதிர்நோக்கித் தாங்கும் பாங்கு

 அடையும் மனித வரலாறு துணிவின் பங்கு.

 விடையோ பல பரிமாணங்கள், சாதனைப் புதுமைகள்.

 தடையற்ற உலக இயக்கக் காரணி துணிவாளர்கள்.

உடலாரோக்கியத்தால் பெறும் சாந்தம், உற்சாகம்

 கடல் போல் நம்பிக்கையின் ஆதிப் பிறப்பகம்.

 உடற் பலத்தில் வீரியக் குடை விரியும்.

 நடை போடும் மனப்பலம் துணிவு.

 

 

துணிவின் அத்திவாரம் உண்மை, நேர்மை.

 துணிவான உடலுளத்தின் அபிவிருத்தி ஆளுமை.

 துணிவு முன்னிலை வகிக்கும் அச்சாரம்.

 துணிவு முயற்சி பயிற்சியிலாகும் வித்தாரம்.

தயக்கம் பலவீனம் துன்பத்தின் காரணம்.

 நயக்க முடிவெடுக்கும் அதிகாரம் சுயபூரணம்.

 அச்சம், பலவீனம் வெல்லுதல் துணிவு.

மெச்சும் கருத்துருவாக்கல், வெளிப்படுத்தல் துணிவு.

 

 

தவறைத் தட்டிக் கேட்டல் துணிவு.

பிரச்சனைகள் சமாளிக்கும் திறன் துணிவு.

நல்லது, கெட்டது எடுத்துரைத்தல் துணிவு.

தம்பதிகளிற்குள் சமமான மதிப்பு துணிவு.

 

நேர்மைவாழ்வு மனம், உடலிற்குத் துணிவு.

சோம்பேறித்தன மற்றவர்கள் துணிவாளர்கள்.

தீமைகளைப் படைதிரட்டி எதிர்ப்பான் துணிவாளன்.

வாழ்வில் தடம்பதிப்பான் வல்லமையாளன், துணிவாளன்.

 

ஒழுக்க வாழ்வு துணிவிற்கு நற்பயிற்சி.

வழுக்காத துணிவின் நடுப்புள்ளி இதயம்.

அநியாயக் களை வளர்ந்து துணிவு

நியாயம் முடங்குதல் பெரும் குனிவு.

 

பா ஆக்கம் . வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

3-2-2014.

Samme heading  – துணிவு.  another poem by me :  

https://kovaikkavi.wordpress.com/2012/05/23/237-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/

11223944_10206213712558948_5950246429026053381_n

lines-c

Advertisements

9 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. முனைவர் ஜம்புலிங்கம்
    ஆக 12, 2015 @ 10:49:01

    துணிவைப் பற்றிய துணிவான பதிவு. நன்று

    மறுமொழி

  2. திண்டுக்கல் தனபாலன்
    ஆக 12, 2015 @ 12:01:06

    அருமை சகோதரி… துணிவே துணை…

    மறுமொழி

  3. தேவகோட்டை கில்லர்ஜி
    ஆக 12, 2015 @ 12:25:06

    துணிவோடு படித்து விட்டேன் சகோ அருமை,

    மறுமொழி

  4. Karanthai Jayakumar
    ஆக 12, 2015 @ 13:04:41

    துணிவுஅருமை சகோதரியாரே

    மறுமொழி

  5. கோவை கவி
    அக் 29, 2015 @ 18:05:39

    Sujatha Anton, கவின் மகள், Shenbaga Jagatheesan and 17 others like this.
    Comments

    Prema Rajaratnam :- தயக்கம் பலவீனம் துன்பத்தின் காரணம்,,,,உண்மை.
    July 19 at 11:24am · Unlike · 1

    Sankar Neethimanickam :- அநியாயக் களை வளர்ந்து துணிவு
    நியாயம் முடங்குதல் பெரும் குனிவு. – fine

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: