393. கூடேகும் வண்ணக் கோலம் + கலங்காது வாழ்வை….

11733407_861553573898843_2086625688_nபடவரி 21

கூடேகும் வண்ணக் கோலம்.

பட்டினப் பரபரப்பிலொரு மயங்கும் மாலை
பட்டு மாலை, படும் மாலை.
வெண் மணலில் காலடிச் சுவடு
வெண் மேகத்திலோ பறவைகளால்  முகடு!
பொத்தாது மனதை விரித்துப் பரப்பி
சித்தம் மகிழும் பெண்களும், பலரும்
இத்தனை சுதந்திரமாய் மொத்தப் பறவைகளும்
சத்தமிட்டு உணவு பொறுக்குமழகு கூடேக!

 

https://www.vallamai.com/?p=59490

Extra

மணலில் காலடிச் சுவடு வெயிலில்
தணலில் காலடி படும் வகயில்

உணலிற்குப் பலவகைச் சிற்றுண்டி கரையில்
இணக்கமுடன் உல்லாசச் சூழல் இங்கு.
(உணல் – உண்ணல். )

வரிகளாக்கம்.
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
18-7-2015

11802085_867732629947604_440588056_nபடம் 23 
கலங்காது வாழ்வை….

கூடை நிரம்பும் வரை வலையெறிதல்
கூடியுண்ண வைக்கும் குடும்பத்தை, இங்கு
கொட்டும் மழையானால் என்ன! தகிக்கும் 
கொடுமை வெயிலானால் என்ன! சாவுக்கும்
வாழ்விற்கும் நடக்கும் போராட்டமே வலையெறிதல்!
வீழ்ந்து அல்லலுறுவது பலர் வாழ்வு
இலங்கையர் இந்தியரென்று, எல்லை மீறுதலென்று
கலங்காது வாழ்வை சுகித்தல் என்றோ!

1 August, 2015,

https://www.vallamai.com/?p=60300

வரிகளாக்கம்.
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.

lines-a

11 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Rajarajeswari jaghamani
  ஆக 22, 2015 @ 03:24:23

  அழகான வரின் ஆக்கம்..பாராட்டுக்கள்.

  மறுமொழி

 2. பிரபுவின்
  ஆக 22, 2015 @ 07:30:14

  “வெண் மணலில் காலடிச் சுவடு
  வெண் மேகத்திலோ பறவைகளால் முகடு!”

  அருமையான வரிகள்.

  மறுமொழி

 3. B Jambulingam
  ஆக 22, 2015 @ 09:52:13

  புகைப்படமே பல கவிதைகளைக் கூறுகின்றன.

  மறுமொழி

 4. கோவை கவி
  ஆக 22, 2015 @ 13:12:14

  http://www.vallamai.com/?p=59490 — ( கூடேகும் வண்ணக் கோலம்.)

  http://www.vallamai.com/?p=60048 — ( கலங்காது வாழ்வை…. )

  மறுமொழி

 5. Karanthai Jayakumar
  ஆக 22, 2015 @ 13:32:50

  அருமையான புகைப்படம்
  அழகுக் கவிதை
  நன்றி சகோதரியாரே

  மறுமொழி

 6. தேவகோட்டை கில்லர்ஜி
  ஆக 22, 2015 @ 15:12:27

  படங்களும் அழகு சகோ.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: