394. பொறாமை

19-1405748336-7-couple*

தடாகம் கவிதை

 பொறாமை

*

பிறரின் உயர்வால் பொறாமையுறாதவன்

கறளெனும் பொறாமை அற்றவன்.
பொறாமை துறவாமை பெருங்கேடு.
அறவேயதை அழித்தல் மேம்பாடு.
தாங்காத ஏற்காத மனம்
வீங்கிச் சாயும் பொறாமையால்.
ஆங்காரம் ஆவேச நெய்யில்
ஓங்காரமாய் எரியும் பொறாமை.

*

வட்டமிடும் மனவேற்றுமை ஆற்றாமை.
அட்டையாய் உதிரமுறுஞ்சும் பொறாமை
அட்டமத்துச் சனியாயூன்றும் நாட்டாமை.
கட்டணமின்றி அட்டணக்காலிடும் இயலாமை
ஈட்டியாய் வதைக்கும் மனதை.
ஊட்டும் நிறைந்த கசப்பை.
எட்ட வைக்கும் உறவை
ஓட்டகத் தலையே பொறாமை.

*

பொறாமை மானம் வெட்கம்
பாராமை மனதின் அசுத்தம்.
பொறுமைக் குளிர்ச் சாரல்
பொறாமைத் தீ தணிக்கும்.
பண்பற்ற குணமே ஏற்காமை
புண்ணாக்கும் ராஜாளி பொறாமை.
வீழ்த்தும் பொறாமையால் சிறப்பழிவது
வாழ்வமைச்சு எனும் அறமது.

*

பா வானதி வேதா. இலங்காதிலகம்
டென்மார்க்.

*

வேறு

5-7-2010 பொறாமை

பொறாமையால் பொங்கி
ஆற்றாமை அலையடிக்கும்
அலட்சியம் ஓரவஞ்சனை ஒருவனை
நீராட்டி நனைக்கிறது.
வாலாட்டும் கருமைகள்
கோலாட்டிக் கொலுவிருந்து
நூலாட்டும் போது மனிதன்
பொம்மலாட்டப் பாவையாகிறான்.
அப்போதும் தான் வென்றுவிட்டதாக
இறுமாந்து மகிழ்கிறான்.
அந்தோ! பரிதாபம்!

*

Samme  katu  Poraamai – another poem link ;.    

https://kovaikkavi.wordpress.com/2014/06/11/321-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88/

**

*

mask-2

13 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Karanthai Jayakumar
  ஆக 23, 2015 @ 01:34:45

  அருமை சகோதரியாரே
  பொறாமை நம்மையே வீழ்த்தும் ஆயுதமல்லவா

  மறுமொழி

 2. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  ஆக 23, 2015 @ 03:32:18

  பொறாமையைக் குறித்து நல்லதொரு ஆக்கம் வாழ்த்துகள் சகோ.

  மறுமொழி

 3. Bagawanjee KA
  ஆக 23, 2015 @ 03:56:45

  #ஓட்டகத் தலையே பொறாமை#
  உண்மைதான் இந்த ஒட்டகத்துக்கு இருக்க இடம் கொடுத்தால் படுக்க பாய் கேட்கும் 🙂

  மறுமொழி

 4. சசிகலா
  ஆக 26, 2015 @ 10:50:04

  இன்றைய நிலையை அழகாக சொன்னீர்கள் தோழி.
  நலம் தானே?
  எங்கே தங்களை பார்த்து நாளாச்சே?

  மறுமொழி

 5. பிரபுவின்
  ஆக 27, 2015 @ 18:02:37

  அருமை சகோதரி. நன்றி.ஒருவர் எம்மை பார்த்து பொறாமை கொள்கிறார் என்றால் நாம் அவரை விட உயர்வாக இருக்கிறோம் என்று நாங்கள் பெருமைப்பட முடியும்.

  மறுமொழி

 6. கோவை கவி
  டிசம்பர் 07, 2015 @ 20:01:47

  புலவர்குரல் இராமாநுசம், Subajini Sriranjan, Rathy Mohan and 34 others like this.
  Comments

  Alvit Vasantharany Vincent :- வாழ்த்துக்கள் சகோதரி.
  July 22 – 2015at 2:20pm · Unlike · 1

  Vetha Langathilakam :- Meenakumari Kannadasan அருமை மேடம்
  July 22 at 2:41pm · Like

  James Gnanenthiran:- உங்கள் கவியை வாசித்து உங்கள் திறமையைக் கண்டு பொறாமைப்படுகிறேன்
  July 22 at 5:46pm · Unlike · 1

  Vetha Langathilakam :- James இக்கரைக்கு அக்கரை பச்சை.
  திறமை எல்லோரிடமும் உண்டு
  அதை வெளிப்படுத்தலே தேவை.
  கருத்திற்கு நன்றி.
  2015- July 22 at 6:07pm · Like

  மறுமொழி

 7. கோவை கவி
  டிசம்பர் 07, 2015 @ 20:08:16

  Vetha Langathilakam Vetha Langathilakam :- கலைமகள!….இந்த முறை போட்டிக் கவிதை
  எழுதத் துளியும் எண்ணம் வரவில்லை.
  இப்பொது இறுதி நேரத்தில் முனைந்தேன்…thanks god..
  22-7-2015

  தடாகம் கலை இலக்கிய வட்டம் :- உங்கள் மனச் சிந்தனை வானில் இருந்து தானே கவிதை மழைகொட்டு கொட்டு என்று கொட்டும் போது என்னாச்சு இப்படி எழுதி உள்ளீர்கள் ?வேதா. smile emoticon
  22-7-15

  Velavan Athavan :- வட்டமிடும் மனவேற்றுமை ஆற்றாமை.
  அட்டையாய் உதிரமுறுஞ்சும் பொறாமை – ஆதாரம் இல்லாமலே உதிரம் உறஞ்சும் பொறாமை. – சபாஷ் வேதாக்கா….
  22-7-15

  Vetha Langathilakam:- மகிழ்ச்சி.
  கருத்திற்கு நன்றி சுஜேன்
  July 22 at 6:13pm · Like

  Mageswari Periasamy : மிக அருமை. வாழ்த்துகள் தோழி.
  July 23 at 2:56am · Unlike · 1

  Vetha Langathilakam :- தமிழவன் வேல்முருகன், Giri Tamilan likes this. Gnani :- EXELLENT
  24-7-2015..Vetha Langathilakam:- Mikka nanry Mr (Thiru) Gnani.

  July 24 at 9:16am · Like

  Vetha Langathilakam :- Meenakumari Kannadasan :- அருமை மேடம்
  July 222015…
  July 24 at 9:47am · LikeGowry Sivapalan :- அருமை
  July 22
  Senthil Kumari :- அருமை.

  Vetha Langathilakam :- Meenakumari Kannadasan-Gowry Sivapalan- senthi Senthil Kumari மிக்க மகிழ்வுடன் நன்றி.
  24-7-2015

  Vetha Langathilakam :- Yashotha Kanth likes this.

  Yashotha Kanth
  28-7-2015.photo-

  Vetha Langathilakam:- Mikka nanry sis…
  Just now ·28-7-2015.

  மறுமொழி

 8. கோவை கவி
  ஜூன் 11, 2018 @ 10:16:12

  கவிதையின் காதலன் :- அருமை
  2014

  Jeyaseelan Arulananthajothie Saraswathyammah:- கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி, தன் பொல்லாச் சிறகை விரித்தாடுவது போல் தறிகெட்டு ஆடிக்கொண்டிருப்போருக்கு, தன்னிலை எங்கே தெரியப்போகிறது!

  இவர்கள் என்ன ஆட்டம் ஆடினாலும், நம் திறன் நம்மோடு தான் இருக்கும். நாம் நினைத்தாலும் அது நம்மை விட்டகலாது.

  கவியில் பரணித்தொனி தொனிக்கிறது!
  இதன் வெம்மை கூட உணரமாட்டா அவர் மதி.
  2014

  Dr.Muttiah Kathiravetpillai Muruganandan:- “..மனிதன்
  பொம்மலாட்டப் பாவையாகிறான்…” அருமை
  2014

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: