395. வயோதிபக் கோலம்…

10521913_1022111664495759_5156956686421536759_n

வயோதிபக் கோலம்…

கோலமிடுகிறாய்! ஓவ்வொரு கோணமாய்
கோமளமாயும் உன்னை ரசித்தது
கோன்மை (அரசாட்சி) செய்த இளமையில்.
கோயிற்சிலை என்றும் நீயெனக்கு!
கோலமான இவ் வயோதிபம்
கோமாளித்தனம் செய்ய விடவில்லை
கோமாட்டியே! என்னிதயக் கோமளமே!
கோலமடி இந்தக் காமம்.

அருகில் வந்தாலும், பஞ்சணையிலும்
அணைக்கும் எண்ணம் மறைந்ததடி!
அசடு வழியச் சிரிக்கிறேனடி!
அருகிலிரு! அது போதும்!
கண்ணில் அன்பு வடிய
காதலுடன் பார்க்க முடியும்!
தொடும் ஆசை இல்லையடி!
தொதலே! வயோதிபம் உனக்குமன்றோ!

பிள்ளைகள் பேரர் கண்டோம்!
அள்ளியெடுத்த அருந்திய அமிர்தம்
கொள்ளையடித்த இளமை தொலைத்தோம்!
கொள்கலம் காய்ந்ததடி! காதல்
கள் கடைசித் துளிவரையே!
கொள்ளுப் பேரன் வரட்டும்
கொஞ்சி மகிழ்வோம் குடிசையில்
அஞ்சுகமே! அன்பில் குளிப்போம்.

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
22-7-2015

stock-vector-cute-fun-and-colorful-simple-birds-with-lines-leaves-and-flourishes-perfect-wallpaper-or-border-79893292-oo

15 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. thanimaram
  ஆக 28, 2015 @ 00:36:52

  அருமைக்கவி வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 2. thanimaram
  ஆக 28, 2015 @ 00:38:46

  கிழக்குமாகாணவாடை அடிக்குது கவியில்[[[[

  மறுமொழி

 3. ramnai
  ஆக 28, 2015 @ 02:24:44

  ஓவியமும் அது தந்த கவிதையும்
  சிறப்பில் ஒன்றை ஒன்று மிஞ்சுது
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

 4. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  ஆக 28, 2015 @ 07:29:46

  அருமை சகோ வாழ்வியல் சித்தாந்தம்
  எல்லோருக்கும் கிடைப்பதில்லை இவ்வாழ்வு கிடைத்தால் அதுவே வாழ்வு

  மறுமொழி

 5. கோமதி அரசு
  ஆக 28, 2015 @ 10:06:23

  முதுமை காதல், அருமை. அன்பு வற்றத ஜீவநதி அல்லவா?

  மறுமொழி

 6. karanthaijayakumar
  ஆக 28, 2015 @ 13:14:07

  அருமை
  அருமை

  மறுமொழி

 7. B Jambulingam
  ஆக 29, 2015 @ 04:41:59

  அன்பைப்பொழியும் அழகுக்கவிதை

  மறுமொழி

 8. கோவை கவி
  டிசம்பர் 07, 2015 @ 13:34:25

  Kannadasan Subbiah :- கவிதை அருமை கவிஞர் அவர்களே
  நல்வாழ்த்துகள்
  Kannadasan Subbiah’s photo.

  Senthil Kumari :- அருமை.
  2015 – July 22 at 7:10pm · Like · 1

  Sasith Sasi :- வாழ்த்துக்கள்…மா
  July 22 at 7:16pm · Like · 1

  Vetha Langathilakam:- Nanryjudan makilvum sakothara kannadasan Subbish.

  மறுமொழி

 9. கோவை கவி
  டிசம்பர் 07, 2015 @ 13:37:07

  Ratha Mariyaratnam :- நாற்பத்து எட்டு அகவை
  உங்கள் இணைபிரியா உறவுக்கு
  ஏற்பதும், இசைவதும் பல நேரம்
  விட்டுக் கொடுத்தலும் சில நேரம்
  நூற்றின் அரையாய் மணவாழ்வு கண்டீர் வாழ்வின்
  ஏற்றங்கள் இறக்கங்கள் , சமநிலை ஓட்டங்கள்
  மக்கட் செல்வங்கள் அவர்களின் துணைகள்
  பேர் சொல்ல வந்த பேரச் செல்வங்கள்
  இவை அத்தனையும் மீறி
  தமிழ் அன்னைக்காற்றும் பெரிந்தொண்டு
  வருங்காலச் செல்வங்கள் படித்துணரவென்று
  பல நூறு பிள்ளைத் தமிழ்ப் பாடல்கள்
  கவிதை கட்டுரைகள் கணவன் கொடுத்த ஒத்துளைப்பில்
  கனிவாய் மலர்ந்தது தமிழ்த் தொண்டு
  புவியோர் போற்றிட நீவீர் பல்லாண்டு வாழ்க வாழ்க

  திரு திருமதி வேதா .இலங்காதிலகம் அவர்கள் வாழிய பல்லாண்டு .இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
  2015 – July 22 at 7:43pm · Edited · Like · 1

  Bala Chander :- அருமை!
  July 22 at 8:51pm · Like · 1

  Vetha Langathilakam:- மிக்க நன்றியும் மகிழ்வும் சகோதரி.
  இறையாசி நிறையட்டும்.
  எமது ஆசிகளும் உரித்தாகுக.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: