396. வா சினிமா நடிகையாகலாம்!…

11703187_1023018747738384_7658131148293038942_n

வா சினிமா நடிகையாகலாம்!…

இடையை ஏன் காட்டுகிறாய் பெண்ணே
கடை விரிக்கும் கால்களும் தெரியுதடி.
படையெடுப்பார் பலர் உன்னைப் பருக.
கடை போடடி கண்டாங்கிச் சேலையால்.
மடையாய்க் கொட்டும் நீர் அருகே
மலராய் விரிந்து அழகு காட்டுகிறாய்
பா கட்டியுன்னை நான் அடிக்க
பூ வெட்டி நீயென்னை அடிப்பாயா!

சில்லாய் உடையுதடி என் மனசு
பல்லிளிக்கும் உன் அரிவாள் காண்கையில்
நல்ல ஒப்பனை! நடிக்கத்தான் பொருத்தமடி!.
செல்லமே வா! சென்னைக்குப் போவோம்!
அல்லற்படாதே இந்த அரிவாள் கத்தியோடு.
சொல்லடி ஒரு சொல்லு முல்லையே
நல்ல சினிமா நடிகையாகலாம் வா!
தொல்லைகள் தீரும் வா பயணமாவோம்!

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
24-7-2015.

vector_146.cdr

Advertisements

14 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. srichandra
    ஆக 30, 2015 @ 00:03:14

    நல்ல சிந்தனையான கவிதை

    மறுமொழி

  2. karanthaijayakumar
    ஆக 30, 2015 @ 01:11:52

    அருமை சகோதரியாரே
    நன்றி

    மறுமொழி

  3. B Jambulingam
    ஆக 30, 2015 @ 01:54:17

    இவ்வாறு கூட முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் ரசனையோடு எழுதலாமா? அருமை.

    மறுமொழி

  4. DD
    ஆக 30, 2015 @ 02:35:44

    அருமை சகோதரி…

    மறுமொழி

  5. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
    ஆக 30, 2015 @ 04:48:45

    ஓவியமும் அருமை கவிதையும் மாறுபட்ட சிறப்பு வாழ்த்துகள் சகோ.

    மறுமொழி

  6. கோமதி அரசு
    ஆக 30, 2015 @ 06:09:44

    படக் கவிதை அருமை.

    மறுமொழி

  7. Bagawanjee KA
    ஆக 30, 2015 @ 16:46:25

    பட அழகியே ,உண்மையான புன்னகையே உனக்கு போதும் ,பொய்யாய் சிரித்து உன் பூவுடலைப் புண்ணாக்கிக் கொள்ளாதே:)

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: