397. வெள்ளைச்சிரிப்பு

11822703_1031009860272606_617664061545255814_n

சித்திரம் பேசுதடி-heading.

வெள்ளைச்சிரிப்பு

வெள்ளைச் சிரிப்பிலில்லைக் களங்கம்.
கள்ளருந்துவதாய் மயக்குது நிசம்.
கொள்ளையடிக்கும் உலகை நிசம்.
கிள்ளை மொழியுனதும் இனிக்கும்.
பிள்ளைச் சிரிப்பைப் பத்திரமாய்
சள்ளையற்றுலகம் பாதுகாப்புத் தருமா!
கொள்ளைக் கேள்விகள் என்னிடம்
நொள்ளை உலகைப் பார்த்து.

அத்துமீறலற்ற அழகுப் பெட்டகம்.
முத்துச் சிரிப்பு இது.
சத்து அழியாது காக்க
பத்தரைமாற்று மனிதர்கள் தேவை.
சுயநலம் நிறைந்து வெகு
பயம் கொண்ட உலகில்
தயவோடு நீ வாழத்
தகவு பல பெற்றிடுவாய்!

(சள்ளை – துன்பம், தொந்தரவு. நொள்ளை – குருடு)

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
8-8-2015

vector_146.cdr

13 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Nagendra Bharathi
  ஆக 31, 2015 @ 00:58:59

  அருமை

  மறுமொழி

 2. karanthaijayakumar
  ஆக 31, 2015 @ 01:35:04

  வெள்ளைச் சிரிப்பு அழகு

  மறுமொழி

 3. Rajarajeswari jaghamani
  ஆக 31, 2015 @ 02:46:44

  கொள்ளையடிக்கும் உலகை நிசம்.
  கிள்ளை மொழியுனதும் இனிக்கும்.

  பிள்ளைச்சிரிப்பு
  உள்ளம் கொள்ளை கொண்டது…!

  மறுமொழி

 4. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  ஆக 31, 2015 @ 03:35:50

  வெள்ளச் சிரிப்பு மனதை கொள்ளை கொண்டதே…

  மறுமொழி

 5. முனைவர் ஜம்புலிங்கம்
  ஆக 31, 2015 @ 08:06:47

  இதற்கு இணையேது.

  மறுமொழி

 6. கீதமஞ்சரி
  செப் 17, 2015 @ 09:27:24

  பிள்ளைச்சிரிப்பு களவுபோகாமலிருக்க இந்த நொள்ளையுலகம் பார்த்துக் கவலைப்படும் மனத்தின் ஆதங்கம் புரிகிறது. மழலை மனத்துக்கும் வேலிபோட்டுக்காக்கவேண்டிய கட்டாயத்தில் நாம்.

  மறுமொழி

 7. கோவை கவி
  ஆக 08, 2017 @ 12:16:48

  Kannadasan Subbiah :- அருமை சகோதரி
  என் இனிய நல்வாழ்த்துக்கள்!
  8-8-2015

  Kannadasan Subbiah :- நல்வாழ்த்துகள்
  Kannadasan Subbiah’s photo.

  Kalia Permual :- வெள்ளைச் சிரிப்பில் உள்ளம் பரி போனதே!
  8-8-15
  Vetha Langathilakam :- உள்ளம் பறி போனதே!….மகிழ்ச்சியுடன் நன்றி கண்ணதாசன் சுப்பையாவுடன் கலியபெருமாளுக்கும்.
  8-8-15
  Bala Chander :- அருமை!
  8-815

  Vetha Langathilakam :- Mikka nanry Bala Chander…..
  8-8-15
  8 August 2015 at 21:00
  Vetha Langathilakam:- Dpg Sekaran :——–Super kavi
  9-8-2015…See more
  9 August 2015 at 08:42 ·
  Subbu Subbu வெ ள்ளை மனம் (மணம்)
  11 August 2015 at 17:15 ·

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: