2. நம்பிக்கைத் தோழன், எம் நாயார்.

67. புல்.

green-grass-hd-wallpapers-free-nature-images

     புல்

புல்லில் படுத்து வானம் பார்

அல்லல் தீர்க்கும் பாதைக்கு ஊர்!

மெல்லென மனவுடல் களைப்பழிக்கும் இச்சை

சில்லெனக் கண்களைக் குளிர்விக்கும் பச்சை.

புல்வெளி கால்நடைகளின் மேய்ச்சல் நிலம்.

பல் வகைப் புற்கள் நல் மருந்தாம்.

புல் பூமாதேவியின் பாதுகாப்புக் கவசம்.

உல்லாசம் சீவன்களிற்குப் புல்லில் புரள்தல்.

***

புல்லில் காகிதம் செய்தனர் கி.மு2400ல்.

புல்லின் அரசன் அறுகம் புல்லாம்.

அகரம் புல், அருகன் புல்லாகிய

அறுகம் புல்லில் பல இனங்களுண்டு.

ஏகப்பட்ட பெயர்கள் அருகன் புல்லிற்கு.

காகா மூலி, ஆரோக்கியப் புல்,

குழந்தைகளிற்குக் குருமருந்து, பிள்ளையார் புல்,

விஷ்ணு மூலியென்றும் சித்தர் வழங்குகிறார்.

***

தலைவலி, கண்ணுபாதைக்கு நற்பசுமைவிருந்து.

விலையில்லை உலகிலிதற்கு வேறொருமருந்து.

நீர் வாழ் தாவரங்களும் புல்லினமே.

தர்ப்பை, அறுகம்புல் நீரின்றி வளரும்.

தர்ப்பை இரத்த அழுத்தத்தைக் கட்டப்படுத்தும்.

தர்ப்பைக் காற்றால் தொற்றுநோய் நெருங்காது.

நீரில் அழுகும் தன்மையற்றது தர்ப்பை.

சூரியகிரகணம் இதன் வலிமையை அதிகரிக்கும்.

***

பா ஆக்கம்

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

6-7-2015

grass line

96. கவிதை பாருங்கள்(படம்+ வரிகள்) – கூட்டுச் சங்கமம்.+ஆர்வம் அற்புதம்

10447733_530868153703415_3160287203812648636_nkk

வெண்டிரை – கடல்

தண்டலை – சோலை.

தெண்டிரை – கடல்.

மண்டலம் – பூமி

11148579_1589754591297605_6890117820666493374_n

வரைதல் . எழுதுதல் என்றாக..

chainborder

Next Newer Entries