398. இசையவைக்கும் தேவ வாத்தியம்.

11736935_869711359749731_1255709504_nபடம்  24.
இசையவைக்கும் தேவ வாத்தியம்.

பண்டைய வாத்தியம் வீணை, தஞ்சையை
ஆண்ட ரகுநாத மன்னன் காலத்திலுருவாகி
ஈண்டது தஞ்சாவூர் வீணை என்றும்
ஆண்டது ரகுநாத வீணை என்றும்.
சக்தி அம்சம் சிவ அம்சமும்
பொத்திய மெல்லிசை, நரம்புக் கருவி
இலயித்திங்கு இரசித்து இலயம் தவறாது
இலாவணியமாய் வாசிக்கிறாள் இளம் கோதை.

இசைத்து நிறுத்திடினும்  இன்னொலியாய் கமகம்
அசைந்து அலையலையாய் பின்னும் நீளும்.
இசைந்து பிரணவநாதமாய் மெல்லத் தேயும்.
நசையறு நயம் கம்பீரம் இணையுமொலி.
பலாமரத்தி லுருவகமான அழகிசைக் கருவி.
விலாவாரியான நுட்பங்கள் தத்துவங்கள் நிறையிசை.
உலகளவு புவிசார் குறியீடு இதற்கு!
ஆம்! தஞ்சாவூர் வீணையென அழைப்பு.

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.  8-8-2015

veena

Advertisements

10 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. karanthaijayakumar
    செப் 05, 2015 @ 02:03:15

    தஞ்சை வீணை போற்றுதலுக்கு உரியது

    மறுமொழி

  2. திண்டுக்கல் தனபாலன்
    செப் 05, 2015 @ 02:16:43

    அருமை…

    மறுமொழி

  3. B Jambulingam
    செப் 05, 2015 @ 04:15:40

    அறிவோம். தற்போது கவிதை வடிவில் அறிந்தோம். நன்றி.

    மறுமொழி

  4. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
    செப் 05, 2015 @ 14:24:55

    கவிதை வழியே தகவல் அருமை
    சகோ நான் ஒரு நாட்டுப்புறப்பாட்டு எழுதினேன் நேரமிருந்தால் பாருங்கள்

    மறுமொழி

  5. கீதமஞ்சரி
    செப் 17, 2015 @ 09:25:35

    வீணையிசைக்கும் மற்ற இசைக்கருவிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடே வீணையை இசைத்து நிறுத்தியபின்னும் இன்னொலி அலையலையாய்ப் பரிணமித்துத் தொடரும் அதிசயம்தான். அதை மிக அழகாக கவி வரிகளால் சுட்டி அசத்திவிட்டீர்கள். மனமார்ந்த பாராட்டுகள் தோழி.

    மறுமொழி

  6. கோவை கவி
    டிசம்பர் 13, 2015 @ 19:58:00

    தங்கள் இனிய கருத்திற்கு மகிழ்வுடன் நன்றி கூறுகிறேன்:

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: