401. சுதந்திரம் எங்கே!…..

ethu suthanthi     

சுதந்திரம் எங்கே!…..

தட்டுத் தடையற்ற கடமை கண்ணியத்தால்
இட்டமுடன் விழிப்புணர்வு நேர்மையாய் வாழல்,
கட்டுப்பாடு எவ்வகைத் தடையின்றி வாழ்தல்
தெட்பமாகப் பேசுதல் சுதந்திரச் செயற்படல்.
கட்டுச் சுமையை ஒருவரில் ஏற்றல்
கூட்டில் அடைத்தல் சுதந்திரம் அழித்தல்.
தன்னிச்சைச் செயற்புhடு, பிறரை எவ்வகையிலும்
வன்முறைக்கு ஆக்காத வழிமுறை சுதந்திரம்.
நாட்டிற்குச் சுதந்திரம் நல்ல ஆட்சி.
காட்டிய சுதந்திரம் காணாமலடிப்பது சூழ்ச்சி.
எதையும் செய்தல் சுதந்திரம் அல்ல
எதைத் தேவையென்றறிந்து செய்தல் சுதந்திரம்.
உத்தம சுதந்திரம் விடுதலை என்போம்.
சித்திரம் தீட்டல் சுவரில் என்றால்
சுத்தியமாயது சட்டமீறல் சுதந்திரம் அல்ல.
சுத்த சுதந்திரம் நேர்மை இதயத்துள்.
(தெட்பம் – தெளிவாக)
பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
5-8-2015
Samme theam:-  
*
https://kovaikkavi.wordpress.com/2015/09/11/399-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/
*
Samme type poem:-  kovaikkothai: கிடைக்காத சுதந்திரம் க்கான தேடல் முடிவுகள்
Divider-Red-3

8 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கீதமஞ்சரி
  செப் 30, 2015 @ 00:51:10

  சுதந்திரத்துக்கும் அத்துமீறலுக்கும் உள்ள வித்தியாசம் அறிந்தால் போதும்.. சுதந்திரத்தின் அனுபவம் சுகமாய்க் கிட்டும். மனந்தொடும் வரிகளால் இக்கருத்தை உணர்த்திய விதம் அருமை. பாராட்டுகள் தோழி.

  மறுமொழி

 2. karanthaijayakumar
  செப் 30, 2015 @ 01:22:23

  சுத்த சுதந்திரம் நேர்மை இதயத்துள்.
  அருமை
  அருமை
  நன்றி சகோதரியாரே

  மறுமொழி

 3. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  செப் 30, 2015 @ 05:31:30

  அருமை சகோ சிறந்த வரிகள்

  மறுமொழி

 4. கோவை கவி
  டிசம்பர் 13, 2015 @ 20:30:09

  You, Ramesh Manivasagam, Sathya Murti, Ratha Mariyaratnam and 11 others like this.
  1 share
  Comments

  Sankar Neethimanickam :- சுதந்திரம் வேண்டும்.. ஆனால் கட்டுப்பாடற்ற சுதந்திரம் இல்லை.. சுயகட்டுப்பாடோடு சுதந்திரம் வேண்டும்..
  Unlike · Reply · 1 · September 29 – 2015at 2:58pm

  Subajini Sriranjan :- அழகான விளக்கத்தோடு
  சுதந்திரம் பற்றி!
  அருமை.
  Unlike · Reply · 1 · September 29 at 7:26pm

  Vetha Langathilakam:- கவிதையும் ஒரு கல்வியே!..
  Like · Reply · September 30 at 12:36pm

  மறுமொழி

 5. கோவை கவி
  டிசம்பர் 13, 2015 @ 20:34:04

  Rathy Mohan :- அழகான வரிகள் … சுதந்திரம் பற்றி
  Unlike · Reply · 1 · September 30 – 2015at 12:53pm

  Vetha Langathilakam :- anpudan sanker -Suba – Rathy…. …………………………………………………….நல் மனதுடன்
  நற் கருத்திட்டீர்கள்.
  நற் தமிழ் வாழ்க!
  நயமிகு நன்றி.
  Like · Reply · September 30 at 3:16pm

  Ratha Mariyaratnam அழகான கவிதை…
  Like · Reply · October 1 at 11:15am

  Vetha Langathilakam:- dear Ratha ..நல் மனதுடன்
  நற் கருத்திட்டீர்கள்.
  நற் தமிழ் வாழ்க!
  நயமிகு நன்றி.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: