99. மயக்கும் செழிப்பு

10264309_343900009092046_4012840835843234110_n.jpg-dd

மயக்கும் செழிப்பு

பசுமைத் தாய் இயற்கையின்
பசுந்தரை மடியில் நீல
விசும்புப் போர்வையின் விரிப்பு!
விசுவரூப அழகுத் தரிப்பு.    

பசுத்துவம் வாழும் வேளை
பசுவெயிலில் பறவைகள் பறக்க
பசுக்களும் புல் மேயும்
பசுமையின் மயக்கும் செழிப்பு.
30-10-2015

grass  line

98. போகட்டும் விடு.

1235011_311243022350157_1834512128_n-k.jpg-gg

நெஞ்சில் ஏதும் உறுத்தல்கள்
   கொஞ்சமேனும் ஆற்றாமை…

lines-c

22. தாய்மை

familt21

தாய்மை

ஆய்மையற்ற தூய உறவு
ஆய்பவன் அறிவிலி உறவு
ஒய்தலற்றது தாய்மைத் திறவு
மாய்தலற்ற புனிதத் தரவு

மதுர சஞ்சீவி வரவு
உதரத்திலிருந்து எழுந்த  உறவு
உலகில் யாரெவரோ வருவார்
உன்னத தாய்மைக்கு ஈடேது!

துளியுதிரத் தொடர்பு அப்பா
களியுடன் கருவிலுருண்டு செப்பமாய்
தொப்புள் கொடியாற் பிணைந்து
பாரிற்குத் தந்தாள் அம்மாவென்றோம்.

உழைப்பு, ஊக்கம்,உதிரமாய்
உணர்ந்து, உயிராய், அன்பாய்
உவந்த தாய்மைக்கு நாம்
உயர்வாய்க் கொடுக்கலாம் நற்பெயரை.

உருகியோடும் பனியாறாய்
பெருகும் அன்பு பேராறாய்
தரும் தாய்மை அகண்டது.
பெருமாதரவான கைப்பிடி இது.

கருவறை தொடங்கிக் கல்லறையீறாக
சில்லறையின்றிப் பெறும் தூயது
நல்லறமாகவிது வாய்த்திட்டால் வாழ்வு
பல்லறமான ஒரு பாரிணாமம்.

(திறவு – வாயில், வழி என்ற கருத்தாக)
2-10-2015

12140589_927622443985277_5668174396968589711_n

*

தாய்மை.

*

நெஞ்சத்து வேரில் எழும் தாய்மைச் சுடர்
கிஞ்சித்தும் வெறொன்றுடன் ஒப்பாகாத புனிதச் சுடர்.
மொத்த மனிதத்தின் தனிவசந்தம் தாயினம்.
முத்துகள் பிரசவிக்கும் உயர் சிப்பி தாயினம்.

காலம் காலமாய் விழுது விடும் தூய்மை
நீளம் நீளமாய்த் தொடர்ந்து வரும் தாய்மை.
நெஞ்சில் சந்தனம் கரைக்கும் உயர் தாய்மை
தஞ்சம் தரும் தனித்துவ அன்பு தாய்மை.

என்மனவானில் இனிய இராகம் இசைப்பவள்
என் அப்பாவுடன் இணையக் கை கோர்த்தவள்
நன் மானிட நெஞ்சப் போர்வை கொண்டவள்.
உன்னத வாழ்வை வாசிக்க மொழி தந்தவள்.

பிறக்க வைத்தாயு; உலகில் உருவாய் என்னை
சிறக்க வாழ வைத்தாய் தினமும் என்னை
மறக்காது உன் நினைவு நானிருக்கும் வரை
புறக்கணிக்க இயலாத புனித உறவு தாய்மை.

30-10-2005
இலண்டன் தமிழ் வானொலியில் – சிஐ தொலைக்காட்சியிலும்
நான் தொலைபேசியூடாக வாசித்தேன்.

*

தமிழ் கவிதைப் பூங்கா அமுதசுரபி
*

Signal light   nest  (bird pic)

*

தாய்மை

*
தாய்மை எதற்கும் துணிந்தது உதாரணமாக
தாற்பரியம் புரியாது சமிக்ஞை விளக்கில்
தன் கூடமைத்துக் குடும்பம் நடத்துவது.
*

என்னே பரிவு! என்னே தாய்மை!
ஆவலுடன் அலகு விரிக்கும் குஞ்சுகள்.
உயிரனைத்திற்கும் கரிசனைத் தாய்மை ஒன்றே.
*

சிறகசைக்கும் வரையீயும் பரிவும் பாசமும்.
புயலடிக்காது காக்கட்டும்! போக்குவரவுச்
சட்டமும் சிறிது பொறுமை காக்கட்டும்!
*

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
22-6-2016
*

Samme  katu  enkum :-    

https://kovaikkavi.wordpress.com/2017/02/14/476-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/

*

Bar%20Golden%20Rings

409. “விடியலை நோக்கி”

கவிதைப் போட்டியின் முடிவுகள் (kavithaichangamam.  FB)

PINNED POST

News Feed

அன்பார்ந்த கவிஞர்களுக்கு எமது வணக்கங்கள்….
“விடியலை நோக்கி” என்னும் தலைப்பில் நடந்த கவிதைப் போட்டியின் முடிவுகள் அறிவிப்பதில் மகிழ்ச்சியாக உள்ளேன். இந்த வாரம் விடியலை நோக்கி நகர்ந்தவர் பட்டியலில் வந்த 7
கவிதைகளில்
மூன்றாமிடம் :
பெறுபவர் :
வேதா. இலங்காதிலகம்
படைப்பு:
விடியலை நோக்கி அனைவரும்
கடிதாய் ஓடுகிறார்! வனைவோரும்
வடிப்போரும் புகழ்வோரும் புனைவோரும்
துடிப்பாய் முயல்கிறார் ஓயாதார்.
வியர்வை சிந்திப் பாய்தலும்
உயர்தலும் சாய்தலும் ஓய்தலும்
துயராய் துணிவாய் நிகழ்தலும்
அயர்வற்ற செயலாகிறது வாழ்விலும்.
பங்கேற்ற மற்ற கவிஞர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களுடன் அடுத்த போட்டியில் சந்திக்கிறேன்.
நன்றி -விவேக்பாரதி
இங்ஙனம்
கவியன்பன் கலாம் நீலமேகம் தமிழருவி இலக்கியா மாலிக் முகம்மது

12079555_422766697921918_8343117445831455119_n

408. தண்ணீருக்குக் கண்ணீர்….

raindrops

தண்ணீருக்குக் கண்ணீர்….

வெள்ளிச் சிதறல் கையில் பட்டு
துள்ளிக் குதிக்குது மேனி சிலிர்க்க.
வானத்தால் வந்த நீர் எம்
மானம், உயிர் காக்கும் நீர்.
நாமும் இங்கு நன்னீர் வெந்நீருக்கும்
நாணயம் கொடுத்தே நாளும் சுகிக்கிறோம்
தண்ணீர் தேடி செந்நீர் கொதிக்க
கண்ணீரும் சொரிவது மகா கொடுமை!
வரிகள் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
19-9-2015.

500_F_42871016_1SJklqYw8gAcaigbkhXEX8yFZ4bIrNdj

20. ஏடு தொடக்குதல். – எழுத்து ஆரம்பம்

124profileimge3_tamil.jpg-dd.jpg-dd

ஏடு தொடக்குதல். – எழுத்து ஆரம்பம்

இன்றைய நவீன காலத்துப் பிள்ளைகள் தமிழ் படிக்க ஏனோ சிரமப் படுகிறார்களோ! எங்கள் பேரன் 3 வயது ஆரம்பத்தில் நான் தமிழ் பாடல்கள் பாடினால் ஆசையாகக் கேட்பார். இது தொட்டில் பிள்ளைகளாக இருக்கும் வரை தான். அவர் 3 வயதிற்குப் பிறகு பாலர் பராமரிப்பு நிலையம் செல்ல ஆரம்பித்தார். நட்புகளும் மாறியது.
சனிக் கிழமைகளிலும் நட்புகளுடன் விளையாடப் போவார். பெற்றோர் அழைத்துச் செல்வார்கள்.
இப்போது தேவாரமும் பாடத் தொடங்கி விட்டேன். எழுந்து அடுத்த அறைக்குப் போகிறார்.
இந்த விஜயதசமிக்கு எழுத்து ஆரம்பித்தோம். முதல் நாளே சொல்லி வைத்தேன் நாங்கள் நாளைக்கு அரிசியில் பஃன் ( fun – வேடிக்கை) செய்வோம் என்று.
வெற்றியோடு சேர்ந்து இரண்டாவது பேரன் சோழாவும் அண்ணா எழுதி முடிய அரிசியைக் கையால் எடுத்து தூவி விளையாடினார்.
எனது கணவர் சொன்னார் அரிசியை வாயில் போட்டுப் பாருங்கோ வெற்றி என்று. இப்படி தமஷாக எழுத்து ஆரம்பம் சென்றது.
ஏடு தொடக்குதல் முடிந்தது.

mine12 B 015-A

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
23-10-2015

green-line-2

407. மலரும் முகம் பார்க்கும் காலம்

scrap-book-2zxDa-29EGv-print

மலரும் முகம் பார்க்கும் காலம்’ கவிதைத் தொடர்: 8

தமிழ் எழுத்தாளர் இணைய அகத்தின் ‘மலரும் முகம் பார்க்கும் காலம்’ கவிதைத் தொடரின் எட்டாவது (8) தொடர்ச்சியை எழுதியவர் டென்மார்க் நாட்டில் வாழும் படைப்பாளி திருமதி. வேதா இலங்காதிலகம் அவர்கள்.

அவரின் கவிதையையும்; புகைப்படத்தையும் இங்கே பிரசுரித்து மகிழ்ச்சியடைகிறோம். இவரின் கவிதை இம்முகநூலிலும், தமிழ் எழுத்தாளர் இணைய அகத்தின் முகநூலிலும் இணையத்தளங்களிலும் 26.08.2015 புதன்கிழமை பிரசுரமாகின்றது.

தமிழ் எழுத்தாளர் இணைய அகத்தின் வேண்டுகோளை ஏற்று கவிதைத் தொடரில் பங்குபற்றி ஒத்துழைப்பு நல்கிய திருமதி.வேதா இலங்காதிலகம் அவர்களுக்கு பணிவன்பான நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்.

தமிழ் எழுத்தாளர் இணைய அகம்
———————————————————————————-

„மலரும் முகம் பார்க்கும் காலம்’ கவிதைத் தொடர்

கவிதை:8 எழுதியவர் : பா வானதி வேதா. இலங்காதிலகம்,டென்மார்க்

வர வழி விடு தாயே
ஈர முத்தங்களாக இன்பங்களை இனியாவது
அரங்கேறிய துன்பங்கள் எமது வாரிசுகளை
உரசியரசகட்டில் ஏற வேண்டாம்

தாய் மொழியைப் பேணி ஊட்டி
தீய்ந்திடாது நம் பண்பாடு காட்டி
வாய்மையாய் வாழத் திடம் ஊட்டி
சேய்களைத் தரவைரமாக வளர்க்கலாம்

தாயகப் பெருமை, சிறுமைகள் அனைத்தையும்
சேயகத்தில் ஊட்டித் தேசியம் வளர்த்தும்
நாயகனாக (நாயகியாக) முளைவிடும் முல்லை அரும்புகளையும்
வையகம் போற்றும் விருட்ச வேராக்கலாம்

மனிதனை மனிதனாக மதித்து உண்மையில்
மனிதநேயம் பேணக் கற்றுக் கொடுத்தால்
வனப்பான வாழ்வொழுக்கம் சீராக உயரும்
இனிதான சுவாசம் வானவிற் கனவுகளாயுயரும்

தனமான தன் வார்த்தை செயலில்
கன துணிவு கொண்டு துன்ப
மனவிருட்டின் தடமழித்து உற்சாகம் மொண்டு
இன வழியறிவோடு சிகரத்திற்கேகுவோம்.

 

 

 

blue-line

97. கவிதை பாருங்கள்(படம்+ வரிகள்)

maa-saraswati-chalisa-thehindufacts-the-hindu-facts3.jpg-vv

வெண் தாமரையாள் காலம்.
வெண்ணகையாய் அறிவு வாலாயமாக மாணவர்
வெண்ணீறு தடவி பூசை.——

10737791_771888509544924_1380567544_o

68. முத்து.

f1309042

உயர்முத்தின் தாய் முசெலினங்களில் முத்துச்சிப்பி.
உயிர் சிப்பியுள் திண்மபொருள்(நுண்துகள்) நுழைவால்
உறுத்தலடையும் சிப்பியில் எபிதீலியம் படிவம்
உருவாகி நுண்துகளைச் சுற்றிப் பொதிகிறது.
சிப்பியின் சுரப்பு நீர்ப் படிவம்
சிப்பிக்குள் கசியும் கெட்டியான பசை
சிப்பியின் பாதுகாப்புப் பசைநேக்கர் படையாக
அப்புதலால் உருவாகிறது நவரத்தினத்திலொரு முத்து.

விலங்கின வகையாம் முத்துச் சிப்பி
விலைமதிப்பு இல்லா விநோத சீவன்.
அரிய வகைக் கடல் வாழுயிரினம்.
விரிவாக நூற்றுக்குமதிகமான சிப்பி இனங்களுண்டு.
பட்டை தீட்டத் தேவையற்றது முத்து
பட்டொளியாம் இயற்கைப் பொலிவுரு நேக்கரால்.
முத்தின் மறுபெயர் நித்திலம் தூமணி.
முத்துக்களில் சிறப்புடையது ஆணி முத்து.

இயற்கை முத்து அவிகுலிடி என்ற
இனமான சிப்பியிலும், யூனியனி என்ற
மட்டிகளிலும் உருவாகிறதாம். முத்துகள் நீலம்
மஞ்சள், சிவப்பு, இளஞ்சிவப்புகளில் உண்டு.
முத்துகளில் கறுப்பினம் அந்தமான் தீவிலுண்டாம்.
முத்திற்குப் பிரபலமானது பாண்டிய நாடாம்.
முத்து நகர் தூத்துக்குடியாம். மூழ்கி
முத்துச் சிப்பியெடுத்தல்.முத்துக்குளிப்பு என்பார்.

வரிகள்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
15-10-2015.

index

406. காகிதக்கூழ் கலை

man-with-ashgourd

படம் 32
காகிதக்கூழ் கலை

அச்சு அசலாக நடிப்பது
மெச்சும் வகையாயில்லையே இது.
மச்சு வீடாயினும் குடிசையாயினும்
முகமூடியிட்டு சமூகத்தில் உலாவுதல்
தகவற்ற குணமாகும் புவியில்.
நகைச்சுவை, திருஷ்டிக்கு உதவும்.
பகைச்சுவைக்கு நல் நண்பனாகும்.
வகை வகையாம் காகிதக்கூழ் கலையிது.

வரிகள் 
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
3-10-2014 – 21.00 பின் மாலை  

https://www.vallamai.com/?p=62553

 

multi024

Previous Older Entries