தொலைத்தவை எத்தனையோ!.. (11)

untitled   11

அப்பொழுது நான் சிறுபிள்ளை பெரியப்பா எமது வீட்டிற்கு வந்த போது சொன்னார் பின்னேரம் எல்லாரும் வாங்கோ தேவாரம் படிக்க வேண்டும் என்று. அன்றிலிருந்து மாலை ஐந்து மணி போல முகம் கழுவி விட்டு நாமும் சகோதரர்களும். பெரியப்பா வீடு போய் அவர்கள் பிள்ளைகள் நாங்களுமாகத் தேவாரம் படிப்போம் திருவாசகமும் கூட. இப்படிப் படித்தது இன்றும் நினைவில் உள்ளது. 

577310_10150771712893950_2107453511_n

(பெரியப்பா – பெரியம்மா  அமரர்கள் முன்னாள் கோப்பாய் இறப்பு பிறப்பு விவாக பதிவுகாரர். இன்று மகள் யேககேஸ்வரி.)

நாம் இங்கு டென்மார்க்கில் முன்பு கூட்டுப் பிரார்த்தனை செய்த போது திருவாசகம் பாட எல்லோரும் புத்தகம் வைத்துப் பாடினார்கள். நான் மனதால் நினைத்துப் பாடினேன். வீடு வர என் கணவர் ‘ கேட்டார் எப்படியப்பா நினைவிருத்திப் பாடினாய!  என்று. ‘ எல்லாம் பெரியப்பாவின் நற் செயல். இன்றும் நினைவிருக்கு’! என்றேன்.
பாடசாலையில் ஏதாவது பரீட்சை என்றால் பெரியப்பா வீட்டுப் படியேறியதும்

ஒரு தேங்காயைக் கையில் தந்து    

coconut

‘ போகும் பொழுது முத்துமாரிக்குத் தேங்காய் உடைத்திட்டுப் போ!’ என்பார் பரீட்சை நன்றாக எழுத.

208980_130759123731912_703948728_n

(இது புதுப்பித்த கோயில். அன்று ஒரு சிறு கட்டிடமாக இருந்தது.)
அவர்கள் வீட்டிற்குப் போய் அக்கா சகோதரங்கள் சேர்ந்து தான் நாவலர் பாடசாலைக்குச் செல்வோம். பாடசாலை நடந்து போகும் தூரம் தான்.

imagesCAJI2JCO     Kajenthini_1  10273223_484016721739482_8149647559071011188_o

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMER

அக் காலத்தில் சித்திரைப் புது வருடம் வருகிறது என்றால் ஒரே ஆரவாரம். அப்பா வெளியே துப்பரவு செய்ய ஆரம்பிப்பார். வாசலில் மாவிலை புதிதாக மாற்றுவார்.

MamidiToranamEC

அம்மா எமக்குப் புது ஆடைக்குத் துணிகள் எடுத்துத் தைப்பிக்கும் வேலைகளில் இறங்குவார்கள்.

சிப்பிப் பலகாரம் நீண்ட நாட்களிருக்குமாதலால் அது இருக்கும். 

murukuuralnSitpy2

சிப்பி என்றால் மாவுருண்டையை உருட்டி உதவுவது. வாழைத் தண்டைப்  பிளந்து அதன் பிளவுகளில் உருண்டையை வைத்துக் குழித்து உருட்டுவோம். நல்ல கட்டம் கட்டமான மாதிரியில் மாவுருண்டை கீழே விழும், சோகி போல.

sl2829

சோகி போல என்றது பார்வைக்கு இப்படியிருக்கும். உருண்டையாக உருட்டியதை கீறிய வாழைத்தண்டின் பின்புறத்தில் வைத்து உருண்டை மேலே ஒரு விரலால் குழியாக்கி அப்படியே கீழே பெட்டியுள் உருட்டி விட வேண்டு. அது இப்படி சோழி போன்ற உருவில் வரும்

வேறும் வசதி போல பலகாரங்கள் இருக்கும்,

DC121116172234ambode-step-3download (2)

ஓரு மாதமும் ஆட்கள் புதிதாக வருவதும் (உறவு புதுப்பிப்பது போல) அம்மா அப்பா போவதுமாக இருப்பார்கள். ஓரு மாதமும் வெற்றிலைத் தட்டத்தில்

Areca-Betel_PlateDSC3543-blog

புது வெற்றிலை பாக்குச் சீவல்கள் சுண்ணாம்பு என்று எப்போதும் இருக்கும்

இங்கு தான் பாக்குவெட்டி பாவிப்போம். சாதாரண நேரத்தில் எம் வீட்டில் யாரும் வெற்றிலை உண்ணும் பழக்கமில்லை.

image-19ciseaux
இந்த பாக்குவெட்டியில் பாக்கு வெட்டுதலே ஒரு கலை. மற்றவர்கள் எளிதாகப் பாக்குச் சீவும் போது அதைச் சரியாக வெட்டிப் பழக வேண்டுமென்று மனதில் நல்ல உந்துதல் உருவானது. நல்ல ஞாபகம் மேசன் சவரிமுத்து அழகாக வெட்டுவார் வாயில் வெற்றிலையைக் குதப்பியபடி. (அவர் ஐமீன்தார் மீசை வைத்திருந்தார்.)
சும்மா இருக்கும் வேளையில் எப்படிப் பாக்கை சீவுவது என்று முயற்சித்து வெற்றி கண்டதுண்டு.
நாங்கள் புது வருடத்தன்றே குளித்து புத்தாடை அணிந்து முற்றத்தில் பொங்கலிட்டு

pongal-105

(ஆம் 3 கல்வைத்தே பொங்குவது) புக்கை சாப்பிட்டு எல்லா உறவு வீடுகளிற்கும் சென்று ( அதாவது எமது புது ஆடையைக் காட்டத் தான் – சிறு வயதில் வேறு என்ன எண்ணமுண்டு! இது தவிர!).
புது வருடத்திற்கு நல்ல நேரம் பார்த்து கைவிசேசம் வாங்குவது என்று முதன் முதலில் பணம் தொடுவார்கள்.

11147021_459345077552872_3310352264142706470_n

( அது வரை பிடிவாதமாக பணத்தைக் கையால் தொடாமல் இருப்பார்கள்) அதாவது ராசியான நல்லவரிடம் பணம் கொடுத்து வாங்குவார்கள். அப்படியானால் வருடம் முழுவதும் நல்ல பணம் பெருகும் என்று ஒரு பழக்கம். இதிலெல்லாம் என்றும் எனக்கு நம்பிக்கை வரவில்லை. இதை இன்றும் கடைப் பிடிப்பதில்லை.
சிறு வயதில் அதி காலை முற்றம் கூட்டி , மஞ்சள் நீர்,

bucketpickles2_new

சாணி நீர் தெளிப்பது, புக்கை பொங்கிப் படைக்கும் போது தேவாரம் பாடுவது ஒன்றே எமது வேலையாக இருந்தது. பின்னர் வளர வளர

images (1)download (2)

ஆச்சி வீட்டுத் தொழுவத்தில் ஓடிப்போய் சாணி எடுத்து வந்து முற்றத்தில் வட்டமாய் மெழுகுவது என்றானது.

meluku edit

இன்னும் சிறிது வளர உலக்கை வைத்துக் கோலம் போடுவது,

29616_320787918022029_1021171941_n.jpkolam.jpg-dd

 

 

சூரியன் வரைவது, பொங்கல் பானை இறக்கி வைக்கும் இடத்தில் வண்ணமாய் கோலம் போடுவது என்று கற்பனை, கலைகள் வளர்ந்தன. என்ன இருந்தாலும் புது வருடமென்றால் மனதில் இந்த ஏற்பாடுகளால் மகிழ்வு பொங்கும் தான். எந்த நேரமும் ஆட்கள் வருவினமென்பதும் மகிழ்வு தான்.
மேலும் அடுத்த அங்கத்தில் தொடருவோம்.

hheee211

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
4-10-2015.

Sparkle_up_your_life_with_happiness_have_a_Mastiful_Dhamakedar_Diwali_pp-ll

4 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  அக் 05, 2015 @ 03:42:33

  அதெல்லாம் ஒரு கனாக்காலம் ஆம் இனி அவைகள் கிடைக்காததே… நினைவோட்டங்களை பகிரந்தமைக்கு நன்றி சகோ.

  மறுமொழி

 2. கோவை கவி
  அக் 08, 2015 @ 06:13:07

  You, Mithaya Kaanavi, Puducherry Devamaindhan and 2 others like this.
  Comments

  Puducherry Devamaindhan

  Puducherry Devamaindhan எங்கே தொலைத்தீர்கள். அப்படியே அவ்வவற்றை ஆவணப்படுத்தியுள்ளீர்கள். மிகவும் பாராட்டுகிறேன்.
  Like · Reply · October 5- 2015 at 12:11pm

  Vetha Langathilakam:- ஐயா நேற்று முழுதும் ஒரு முடித் தேங்காய்க்கும் முற்றத்தில் வட்டமாய் சாணிமெழுகுதலும்
  என்று பல படங்களைச் சேகரித்து வைத்து இரவு வலையேற்றினேன்.
  இவை போதவில்லை. உடனே ஊருக்கு ஓட வேண்டும் போல ஆசையாக இருந்தது.
  ஒரு புழு நெளிந்தாலும் அதைப் படமாக்க வேணும் போல இருந்தது.
  நன்றி. இன்னும் வரும்.
  Like · Reply · 1 · October 5 at 12:26pm

  Puducherry Devamaindhan :- உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். நீங்கள் தொடர்ந்து இத்தகைய பணியில் ஈடுபடுவது, பிந்திய தலைமுறைக்குப் பெரிதும் பயன்படும்.
  Like · Reply · October 5 – 2015 at 12:29pm

  Vetha Langathilakam :- ஆம் அதற்காகவே அதற்காகவே படங்களைத் தேடுகிறேன்.
  இதில் முதல் அங்கத்தில் அப்பு ஈஸிசேயரில்
  – சாய்மானக் கதிரையில் படுத்திருந்தார் என்ற வரிக்கு
  தம்பியிடம் கேட்டு ( என்னிடம் மொபைல் இல்லை)
  மொபைலில் ஈஸிச்சேயர் படம் பிடித்து அனுப்பினார்.
  Unlike · Reply · 2 · October 5 at 12:35pm

  Puducherry Devamaindhan :- நல்லது.

  மறுமொழி

 3. கோவை கவி
  அக் 04, 2016 @ 09:27:56

  Rasiah Shara:- இன்றய
  தலை முறையினருக்கு
  தெரியப்படுத்தியமைக்கு நன்றி
  4-10-2016

  Vetha Langathilakam :- நன்றி சகோதரி . மிக மகிழ்ச்சி.மகிழ்ச்சி.
  தங்கள் கருத்துப் பார்த்ததும்
  மறுபடி கிளிக்கி என் வலையில் இதை வாசித்தேன்.
  மனதில் மத்தாப்பு விரிந்தது. இன்னும் சிறப்பாக
  எழுதியிருக்கலாமோ என்று தோன்றியது.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: