404. நான்

12079280_10206717205305952_6505992783110638265_nநான்

நான் யாரெனும் தன்னறிவு நன்மை.
நான் முயல் நான் எறும்பு
நான் திமிரற்றவள் மானம் உள்ளவள்.
நான் படித்தேன் யாழ் கோப்பாயில்.
நான் கட்டுரை கவிதைகள் எழுதுகிறேன்.
விண்மீன்களாய் என்னை சுற்றுது அவைகள்.
நான் உன் அன்பை நினைத்து
என்னை மறக்கிறேன் இது காதல்.

இயற்கை அழகில் தொலையும் நான்
இசையும் கவியில் மயங்கும் நான்
அசையும் மழலையில் உருகும் நான்
அகவும் மயிலை ரசிக்கும் நான்
நான் (தன்)முனைப்பு நீக்கும் நான்
தன்னான்ம உணர்வு பெறுவது தெளிவு.
தான் என்ற கர்வ அழிவில்
நான் என்பது இனிமை கீதமாகும்.

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்
டென்மார்க்.
9-9-2015

நான் – 2

நான் ஒரு மனிதனின் நாண்.
நான் எனும் உணர்வற்றவன் வீண்.
நான் எது! நானிந்த உடல்
நான் யார்! நான் மனச்சாட்சி.
நான் தலைக்கன அகந்தையுடன் இணையின்
ஊன் தான் ஒரு மனிதன்.
நான் பிரமம் என்கிறான் வேதாந்தி
நான் பிரமம் என்பது யோகநிலை.

நான் என்பதன் அடையாளம் நாமமாகிறது.
நான் தன்னம்பிக்கைத் தூண் ஆகிறது.
நான் எனதென உரிமை கொண்டாடுகிறது.
நான் நீ சேர்ந்தால் நாமாகிறது.
பெயர் அழைத்து யார் என்பது
துயரின்றி சிலிர்ப்பாய் தான் ஆகிறது.
நத்தை ஓட்டினுள் ஒழிய இயலாது
செத்தை தான் நானற்ற பதிலானது.

நான் கட்டுப்படும் நேர்மை பண்பில்.
நான் விட்டுக் கொடுக்கும் அன்பினில்
மன்னிக்கும் மனம் கொண்ட நான்
மின்னிடும் சூரியக் கதிரான வான்.
நான் நீ சேர்ந்தால் காதல்
என் பெற்றோரின் நல் வளர்ப்பிலும்
வீண் வம்பற்ற சூழலாலும் பண்புடன்
நான் நல்லவன் ஆவது திண்ணம்.

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
22-9-2015

2004994hc5fmx1bz5

Advertisements

6 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. B Jambulingam
  அக் 10, 2015 @ 03:11:03

  நல்ல நான். அருமை.

  மறுமொழி

 2. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  அக் 10, 2015 @ 09:53:38

  அருமை மிகவும் ரசித்தேன் சகோ நல்ல வரிகள்

  மறுமொழி

 3. கோவை கவி
  டிசம்பர் 19, 2015 @ 10:35:04

  Subajini Sriranjan :- நான்-மனச்சாட்சி
  நான் என்பதை உணர்ந்தாலே நல்ல மனமாகி பிறர் போற்றத்தக்கவராக
  வாழ்ந்து விடலாம் ….உணர்த்திய வரிகள்
  அழகு.
  Unlike · Reply · 1 · September 30 .2015 at 1:07pm

  Vetha Langathilakam :- .நல் மனதுடன்
  நற் கருத்திட்டீர்கள்.
  நற் தமிழ் வாழ்க!
  நயமிகு நன்றி. suba..
  Like · Reply · September 30 – 2015 at 5:48pm

  மறுமொழி

 4. கோவை கவி
  டிசம்பர் 19, 2015 @ 10:36:31

  Ramesh Manivasagam :- நன்று நன்று
  Like · Reply · October 2- 2015 at 3:24pm

  Vetha Langathilakam :- நல் மனதுடன்
  நற் கருத்திட்டீர்கள்.
  நற் தமிழ் வாழ்க!
  நயமிகு நன்றி. dear R.M
  Like · Reply · 19-12-2015.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: