405. அன்பால் வெல்லுங்கள்

baby-krishna

படக்கவிதைப் போட்டி 31-இன் முடிவுகள்

இனி இவ்வாரத்தின் சிறந்த கவிஞரைக் காண்போம்!

இன்றைய பெற்றோரிடம் காணப்படுகின்ற பெரிய குறை, தம் ஆசைகளையெல்லாம் தம் பிள்ளைகள் நிறைவேற்றியே தீரவேண்டும் என்கின்ற நியாயமற்ற எதிர்பார்ப்பு. அதன் விளைவு…எந்தப் போட்டியானாலும் தம் பிள்ளைகள் அதில் பங்கேற்று வெற்றிவாகை சூடிவிடவேண்டும் எனும் பேராசை கலந்த பரிதவிப்பு! அவ்வாறு அன்னையின் வற்புறுத்தலால் அளவற்ற அணிகலன்கள் சுமந்து கண்ணனாக மாறியிருக்கும் குழந்தையொன்று படும்பாட்டை விளக்கும் எளிய பாட்டொன்று கண்டேன்!

எத்தனை சொல்லியும் அம்மாவின் பிடிவாதம்!
இத்தனை பாரம்! செய்த தலையலங்காரம்.!
மொத்த முகப்பூச்சும் சேர்ந்து அம்மாடியென்
சத்தெல்லாம் இழந்ததாய் களைப்பு! அலுப்பு!

இந்த நள்ளிரவில் படத்திற்கு நிற்பது
எந்தப் பிள்ளைக்குத் தரும் மகிழ்விது!
சொல்லுங்கள்! எனக்கு ஆனந்தம் தரவில்லை
வெல்லுங்கள் பிடிவாதத்தாலல்ல அன்பால் எங்களை! 

மழலையரின் இன்றைய நிலையைத் தன் கவிதையில் எதார்த்தமாய்ப் பேசியுள்ள திருமிகு. வேதா. இலங்காதிலகத்தை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்ந்தெடுக்கின்றேன். பாராட்டுக்கள் கவிஞரே!

வல்லமைத் தெரிவு.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
12-10-2015

peacock-feather-line[2]b

Advertisements

6 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  அக் 13, 2015 @ 03:42:40

  மழலை மொழி அருமை சகோ வாழ்த்துகள்

  மறுமொழி

 2. கோமதி அரசு
  அக் 13, 2015 @ 06:15:05

  நன்றாக சொன்னீர்கள். குழந்தைகள்பெற்றோர்களின் ஆசையால் அவ்ர்கள் படும் பாடு கஷ்டம் தான்.

  மறுமொழி

 3. raveendran sinnathamby
  அக் 13, 2015 @ 16:04:52

  வேதாவிற்கு இனிய வாழ்த்துகள்.
  தொடர்ந்து வெற்றி பெறுக.

  வதிரி.சி.ரவீந்திரன்
  கொழும்பு.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: