68. முத்து.

f1309042

உயர்முத்தின் தாய் முசெலினங்களில் முத்துச்சிப்பி.
உயிர் சிப்பியுள் திண்மபொருள்(நுண்துகள்) நுழைவால்
உறுத்தலடையும் சிப்பியில் எபிதீலியம் படிவம்
உருவாகி நுண்துகளைச் சுற்றிப் பொதிகிறது.
சிப்பியின் சுரப்பு நீர்ப் படிவம்
சிப்பிக்குள் கசியும் கெட்டியான பசை
சிப்பியின் பாதுகாப்புப் பசைநேக்கர் படையாக
அப்புதலால் உருவாகிறது நவரத்தினத்திலொரு முத்து.

விலங்கின வகையாம் முத்துச் சிப்பி
விலைமதிப்பு இல்லா விநோத சீவன்.
அரிய வகைக் கடல் வாழுயிரினம்.
விரிவாக நூற்றுக்குமதிகமான சிப்பி இனங்களுண்டு.
பட்டை தீட்டத் தேவையற்றது முத்து
பட்டொளியாம் இயற்கைப் பொலிவுரு நேக்கரால்.
முத்தின் மறுபெயர் நித்திலம் தூமணி.
முத்துக்களில் சிறப்புடையது ஆணி முத்து.

இயற்கை முத்து அவிகுலிடி என்ற
இனமான சிப்பியிலும், யூனியனி என்ற
மட்டிகளிலும் உருவாகிறதாம். முத்துகள் நீலம்
மஞ்சள், சிவப்பு, இளஞ்சிவப்புகளில் உண்டு.
முத்துகளில் கறுப்பினம் அந்தமான் தீவிலுண்டாம்.
முத்திற்குப் பிரபலமானது பாண்டிய நாடாம்.
முத்து நகர் தூத்துக்குடியாம். மூழ்கி
முத்துச் சிப்பியெடுத்தல்.முத்துக்குளிப்பு என்பார்.

வரிகள்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
15-10-2015.

index

7 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  அக் 18, 2015 @ 10:10:20

  கவிதையை மிகவும் இரசித்தேன் வாழ்த்துகள் சகோ.

  மறுமொழி

 2. Bagawanjee KA
  அக் 18, 2015 @ 11:47:19

  முத்து முத்தான தகவல்கள் 🙂

  மறுமொழி

 3. karanthaijayakumar
  அக் 18, 2015 @ 12:48:36

  முத்து முத்துதான்
  அருமை சகோதரியாரே
  நன்றி

  மறுமொழி

 4. கோவை கவி
  டிசம்பர் 19, 2015 @ 11:18:17

  Sujatha Anton:- வாழ்க தமிழ்.!!!
  Unlike · Reply · 1 · October 16 – 2015at 2:44pm

  Vetha Langathilakam :- மிக்க நன்றி மகிழ்ச்சி தோழி சுஜாதா.
  அதிக நேரம் எடுத்து இதை எழுதினேன் .
  வல்லமையில் பிரசுரித்திருந்தனர்
  தங்களிற்கு மிகுந்த நன்றி.19-12-2015

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: