407. மலரும் முகம் பார்க்கும் காலம்

scrap-book-2zxDa-29EGv-print

மலரும் முகம் பார்க்கும் காலம்’ கவிதைத் தொடர்: 8

தமிழ் எழுத்தாளர் இணைய அகத்தின் ‘மலரும் முகம் பார்க்கும் காலம்’ கவிதைத் தொடரின் எட்டாவது (8) தொடர்ச்சியை எழுதியவர் டென்மார்க் நாட்டில் வாழும் படைப்பாளி திருமதி. வேதா இலங்காதிலகம் அவர்கள்.

அவரின் கவிதையையும்; புகைப்படத்தையும் இங்கே பிரசுரித்து மகிழ்ச்சியடைகிறோம். இவரின் கவிதை இம்முகநூலிலும், தமிழ் எழுத்தாளர் இணைய அகத்தின் முகநூலிலும் இணையத்தளங்களிலும் 26.08.2015 புதன்கிழமை பிரசுரமாகின்றது.

தமிழ் எழுத்தாளர் இணைய அகத்தின் வேண்டுகோளை ஏற்று கவிதைத் தொடரில் பங்குபற்றி ஒத்துழைப்பு நல்கிய திருமதி.வேதா இலங்காதிலகம் அவர்களுக்கு பணிவன்பான நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்.

தமிழ் எழுத்தாளர் இணைய அகம்
———————————————————————————-

„மலரும் முகம் பார்க்கும் காலம்’ கவிதைத் தொடர்

கவிதை:8 எழுதியவர் : பா வானதி வேதா. இலங்காதிலகம்,டென்மார்க்

வர வழி விடு தாயே
ஈர முத்தங்களாக இன்பங்களை இனியாவது
அரங்கேறிய துன்பங்கள் எமது வாரிசுகளை
உரசியரசகட்டில் ஏற வேண்டாம்

தாய் மொழியைப் பேணி ஊட்டி
தீய்ந்திடாது நம் பண்பாடு காட்டி
வாய்மையாய் வாழத் திடம் ஊட்டி
சேய்களைத் தரவைரமாக வளர்க்கலாம்

தாயகப் பெருமை, சிறுமைகள் அனைத்தையும்
சேயகத்தில் ஊட்டித் தேசியம் வளர்த்தும்
நாயகனாக (நாயகியாக) முளைவிடும் முல்லை அரும்புகளையும்
வையகம் போற்றும் விருட்ச வேராக்கலாம்

மனிதனை மனிதனாக மதித்து உண்மையில்
மனிதநேயம் பேணக் கற்றுக் கொடுத்தால்
வனப்பான வாழ்வொழுக்கம் சீராக உயரும்
இனிதான சுவாசம் வானவிற் கனவுகளாயுயரும்

தனமான தன் வார்த்தை செயலில்
கன துணிவு கொண்டு துன்ப
மனவிருட்டின் தடமழித்து உற்சாகம் மொண்டு
இன வழியறிவோடு சிகரத்திற்கேகுவோம்.

 

 

 

blue-line

5 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. B Jambulingam
  அக் 23, 2015 @ 05:45:50

  வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 2. கோவை கவி
  அக் 29, 2015 @ 08:58:52

  STS studio mikka nanry….

  http://www.stsstudio.com/?p=10855

  மறுமொழி

 3. கோவை கவி
  டிசம்பர் 19, 2015 @ 11:39:01

  Subajini Sriranjan ;. வாழ்த்துக்கள்.
  Like · Reply · September 27 – 2015at 11:49am

  Alvit Vasantharany Vincent :- வாழ்த்துக்கள் சகோதரி. தொடரட்டும் தங்கள் பணி.
  Unlike · Reply · 1 · September 27 at 10:36pm

  Sakunthala Srinivasan :- வாழ்த்துகள்
  Unlike · Reply · 1 · September 28 at 6:46am

  Maniyin Paakkal :- வாழ்த்துக்கள்.
  Like · Reply · September 28 at 9:52am

  Sujatha Anton:- தேசம் பரந்து தங்கள் தமிழ்ப்பணி தொடர வாழ்த்துவோம்.!!! வாழ்க தமிழ்.!!
  Unlike · Reply · 1 · September 29 – 2015at 1:27pm

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: