410. பாதுகாப்பு ஆதரவு

12092287_900704376650429_547000782_n

படம் வரி 33
பாதுகாப்பு ஆதரவு

பாதுகாப்புணர்வின்றிப் பதறும் மனம்
பக்கமிருப்பதைக் கையிலெடுத்து சூப்பியும்
பாந்தமாய் அணைத்தும் தேறுகிறது.
பரிவைத் தானாகப் பற்றுகிறது.
பொம்மைத் தெரிவுமிங்கு ஐயகோ!
பயங்கர உருவில்! இது
பெற்றவர் செயலா! பரிதாபம்!
பாசம் அன்பு தூரமாகிறது.

பச்சை மனம் பாதுகாப்புணர்வை
பற்றும் எதிலும் தேடுகிறது
பாசத்தை அணைப்பை உருத்தாய்
பக்கமிருந்து கொடுத்தால் குறையமாட்டோம்;!
தனைமறந்துறங்குது குழந்தை தனிமையில்
வினை நிறைந்த உலகில்
அனைத்தும் நவீனமயத்தால் மழலையும்
தனிமைத் தீவிலாதரவுத் தேடலில்

வரிகள் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
10-10-2015

10917228_10205492446491343_1925219595402362348_o

Advertisements

10 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. karanthaijayakumar
  நவ் 03, 2015 @ 00:59:32

  பச்சை மனம் பாதுகாப்புணர்வை
  பற்றும் எதிலும் தேடுகிறது
  அருமை அருமை சகோதரியாரே
  நன்றி

  மறுமொழி

 2. B Jambulingam
  நவ் 03, 2015 @ 01:31:08

  பாதுகாப்பு உணர்வுக்கு ஏற்ற கவிதை, பொருத்தமான புகைப்படம்.

  மறுமொழி

 3. selvakumar
  நவ் 03, 2015 @ 04:10:12

  வினை நிறைந்த உலகில்
  அனைத்தும் நவீனமயத்தால் மழலையும்
  தனிமைத் தீவிலாதரவுத் தேடலில்# முத்தாய்ப்பு….

  மறுமொழி

 4. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  நவ் 03, 2015 @ 04:20:05

  கவிதையை மிகவும் ரசித்தேன் சகோ.

  மறுமொழி

 5. கோவை கவி
  டிசம்பர் 19, 2015 @ 18:24:29

  shfa Ashraf Ali :- அன்பு தூரமாகிறது
  19-12-2015.

  Vetha Langathilakam :- ஆம் மிகத் தூரமாகிறது..
  நன்றி சகோதரா..மகிழ்ச்சி
  19-12-2015

  மறுமொழி

 6. கோவை கவி
  டிசம்பர் 19, 2017 @ 09:44:12

  Sujatha Anton :- தனிமைக்கு பொம்மைகள் உடன்பிறப்புகளாக. வாழ்க்கையில்
  எதிர்கால சந்ததிகள் தாமாக எதிர்நோக்குபவை. கவிநயம் மேலும்
  எடுத்துக்காட்டுகின்றது.
  22 December 2015 at 15:46

  Velavan Athavan:- பாசத்தை அணைப்பை உருத்தாய் பக்கமிருந்து கொடுத்தால் குறையமாட்டோம்;! – பேதலித்த பிள்ளை மனம் பாவம் என்ன செய்யும்…
  22 December 2015 at 19:10

  Alvit Vasantharany Vincent:- ம்ம்ம்.. இங்குள்ள வாழ்க்கைமுறை ஏற்படுத்தும் தாக்கம் இது.
  25 December 2015 at 16:34

  Vetha Langathilakam:- மிக்க நன்றி மகிழ்ச்சி கருத்திடலிற்கு dear A.V.V….
  · 25 December 2015 at 17:53

  Mohan Nantha :- அன்பும் ஆதரவும் குழந்தைப்பராயம் முதல் முதுமையில் இறப்புவரை தேடப்படுகின்றது. தேடலின்போது ஒருசிலருக்கு அது இளவுகாத்தகிளியின் எதிர்பார்ப்பைப்போன்றே எதுவும் கிடையாதுபோய்விடுகின்றது.
  27 December 2015 at 06:09

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: