43. தமிழாம் எம் மொழி

12122756_935765536504301_3233280117178799162_n.jpg-kk

தமிழாம் எம் மொழி

தமிழனுக்குத் தமிழ் கலங்கரை விளக்கு.
தமிழரிதை உணர்தல் கலக்கமற்ற இலக்கு.
தமிழினைக் காத்தல் பலரது நோக்கு.
அமிழாது காக்க குழுநிலைகள் இயக்கு.
குழந்தையிலிருந்து தமிழ் பேசத் தொடக்கு.
குவியலான மொழிகளோடு தமிழையும் பழக்கு.
குழப்பமின்றிப் பேசலாம் அறிவியல் வழக்கு
குழம்புவது பெற்றோரே, இல்லையிது சிறாருக்கு

தமிழுணர்வு உணவு ஒரு தமிழனுக்கு.
தமிழுன் வேர், ஊன்றுகோல் விளக்கு.
தமிழொரு மது அருந்தியுனை இயக்கு.
தமிழ் அமுது, இசை, முழக்கு,
தமிழ் ஒலி ஊன் நமக்கு.
தமிழை அணை, தோள் நமக்கு.
தமிழ் தேன் சந்ததி விருட்ச வேருக்கு.
அமிழ்தமாய் எடுக்க ஏது பிணக்கு.

தமிழ் பேசக் கூசுவோர் பலர்
தமிழென்று சொல்லவே அவமானம் அவருக்கு
தமிழை இகழ்வாகச் சொல்வோருக்குத் துலக்கு
தமிழால் புகழ் ஏந்தலாம் இயக்கு.
தமிழ் காற்று நுழையட்டும் சுவாசமாக்கு.
தமிழ் முத்தெடுக்க இன்றே மூழ்கு
தமிழ் சிகரத்திலொளிர பாடுபடு, வணங்கு.
தமிழை வானில்  மின்னும் நட்சத்திரமாக்கு.

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.

August 2015

lines-stars-243923

9 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. selvakumar
  நவ் 03, 2015 @ 11:05:33

  தமிழுணர்வு உணவு ஒரு தமிழனுக்கு.
  தமிழை வானில் மின்னும் நட்சத்திரமாக்கு.#
  இன்னும் இன்னும்….

  மறுமொழி

 2. Nagendra Bharathi
  நவ் 03, 2015 @ 15:33:48

  அருமை

  மறுமொழி

 3. karanthaijayakumar
  நவ் 04, 2015 @ 01:27:41

  தமிழை சுவாசிப்போம்
  நன்றி சகோதரியாரே

  மறுமொழி

 4. கோவை கவி
  டிசம்பர் 19, 2015 @ 19:39:47

  Subajini Sriranjan:- தமிழினை காத்தல் கடமையே
  Unlike · Reply · 1 · November 1 – 2015 at 10:36pm

  Vetha Langathilakam: – மகிழ்ச்சி உறவே தங்கள் வரிகளிற்கு
  அத்தோடு இனிய நன்றியும் உரியதாகிறது.
  Like · Reply · a few seconds ago
  V
  நக்கீரன் மகள்:- தமிழை வானில்; மின்னும் நட்சத்திரமாக்கு.
  அருமை
  Unlike · Reply · 1 · November 1-2015 at 10:47pm

  Vetha Langathilakam :- மகிழ்ச்சி உறவே தங்கள் வரிகளிற்கு
  அத்தோடு இனிய நன்றியும் உரியதாகிறது.
  Like · Reply · 19-12-15

  மறுமொழி

 5. கோவை கவி
  டிசம்பர் 19, 2015 @ 19:42:23

  Sankar Neethimanickam :- அருமை.. தமிழ் நமக்கு கலங்கரை விளக்கு.. உணர்தல் கலக்கமற்ற இலக்கு.. நல்லவரிகளுக்கு நன்றி அம்மா
  Unlike · Reply · 1 · November 2 – 2015 at 7:02am
  Vetha Langathilakam
  மகிழ்ச்சி உறவே தங்கள் வரிகளிற்கு
  அத்தோடு இனிய நன்றியும் உரியதாகிறது.

  Prema Rajaratnam:- தமிழை அணை தோள் நமக்கு,,,,அருமை.
  Unlike · Reply · 1 · November 2 at 9:57am

  Vetha Langathilakam :- மகிழ்ச்சி உறவே தங்கள் வரிகளிற்கு
  அத்தோடு இனிய நன்றியும் உரியதாகிறது.
  Like · Reply · 19-12-15

  Sujatha Anton :- தமிழுணர்வு உணவு ஒரு தமிழனுக்கு.
  தமிழுன் வேர், ஊன்றுகோல் விளக்கு.
  தமிழொரு மது அருந்தியுனை இயக்கு.
  தமிழ் அமுது, இசை, முழக்கு,
  தமிழ் ஒலி ஊன் நமக்கு.
  தமிழை அணை, தோள் நமக்கு.
  தமிழ் தேன் சந்ததி விருட்ச வேருக்கு.
  அமிழ்தமாய் எடுக்க ஏது பிணக்கு

  அருமை…உலகெங்கும் தங்கள் எழுத்துப்பணி பரந்து விரியட்டும்.
  வாழ்க தமிழ்.!!
  Like · Reply · November 11 at 2:28pm

  Vetha Langathilakam :- மகிழ்ச்சி உறவே தங்கள் வரிகளிற்கு
  அத்தோடு இனிய நன்றியும் உரியதாகிறது.
  Like · Reply · 19-12-15

  மறுமொழி

 6. கோவை கவி
  பிப் 21, 2016 @ 16:19:46

  Vathiri C Raveendran Super:- நமது பிள்ளைகளை தமிழ் கலாசாரத்துடன் இணைத்து வாழ வைத்தால் நம் மொழி நன்றே வாழும்.
  Like · Reply · 41 mins 21-2-16

  Vetha Langathilakam:- நல்ல கருத்தகளின் வார்ப்பு
  நல்லவெல்லச் சுவை ஈர்ப்பு.
  மிக்க நன்றி மகிழ்ச்சி சகோதரா.
  Like · Reply · Just now 21-2-16.

  கவிதை ரசிகை கோமதி முத்துக்குமார் :- நன்று சகோதரி
  Like · Reply · 41 mins 21-2-16

  Vetha Langathilakam :- மிக்க நன்றி மகிழ்ச்சி சகோதரி
  Like · Reply · 1 · Just now 21-2-16

  விஜயகுமார் வேல்முருகன் :- என்
  மூச்சிலும்
  பேச்சிலும்
  உயிரிலும்
  உணர்விலும்
  அனைத்திலும்
  அன்னைமொழியாம்
  அருந்தமிழே நிறைந்திருக்கும்
  தாழ்வெனக்கு உண்டானாலும்
  என் தமிழை உயர்த்திடுவேனே
  வாழ்வெனக்கு வந்தாலும்
  வளமுடன் வளர்த்திடுவேன்
  வண்டமிழ்தனை..

  விஜயகுமார் வேல்முருகன்
  Like · Reply · 1 · 21-2-16

  Vetha Langathilakam :- மிக்க நன்றி மகிழ்ச்சி சகோதரா
  Like · Reply · Just now 21-2-16

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: