56. கன்னற் காதல்

58413_252084991594227_338192240_n

கன்னற் காதல்

தென்னஞ் சோலையிலே தென்றல் வீசுகையில்
கன்னம் குழிவிழவே காத்திருப்பாள் எனக்காக
உன்னை நினைக்கையிலே உள்ளம் இனிக்கையில்
என்னை மறக்கிறேன் பூத்திருக்கும் உனக்காக

சொன்ன சொல்லையே நினைவாகக் காத்திடுதல்
என்ற உணர்வென்றும் பவுத்திரக் காதலுக்கே
அன்றொரு நாளருவிக் கரையில் அந்த
உன்னருகு அனுபவம் இன்றும் இனிக்குது.

தென்றலின் சுகத்தில் குளிர் நீரிலமிழ்ந்து
ஒன்றாய் நனைந்தது எங்கள் பாதங்கள்.
இன்னல் கரைந்தது மின்னல் புகுந்தது.
பின்னும் கரங்களால் மனதில் இன்பமடி.

தென்னோலை காற்றிசையில் நடனம் ஆட
கன்னம் சிவந்திட பயத்தில் நீயங்கு
பின்னற் சடையைப் பின்னிப் பின்னி
அன்னையின் ஏச்சுக்கு அகத்தில் பயமானாய்.

என்னைப் பிரியாதென்றும் இணை சேர்ந்து
சின்ன மகனைச் சிற்பமாய் செதுக்குவோம்
அன்னமே பேதையேயென அகத்தில் எண்ணாதே
என்ன சொல்கிறாய்! இதற்குச் சம்மதமா!

மென்மையோ வன்மையோ உன் அன்பு
பன்னீர் தெளித்தலாய் என்னைக் களிப்பாட்ட
மன்னனும் இராணியுமாய் மகிழ்ந்து வாழ்வோம்.
இன்னமுத வாழ்வை என்றும் இளமையாக்குவோம்.

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
4-10-2015.

48176-Royalty-Free-RF-Clipart-Illustration-Of-A-Border-Of-Rainbow-Lines

15 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  நவ் 13, 2015 @ 13:00:33

  மறுமொழி

 2. Nagendra Bharathi
  நவ் 13, 2015 @ 17:12:46

  சுகமான காதல் கவிதை

  மறுமொழி

 3. கோமதி அரசு
  நவ் 14, 2015 @ 10:20:30

  நல்ல கவிதை , வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 4. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  நவ் 14, 2015 @ 12:32:33

  கவிதை நன்று சகோ வாழ்த்துகள்

  மறுமொழி

 5. selvakumar
  நவ் 16, 2015 @ 12:56:10

  அழகு

  மறுமொழி

 6. Velavan Athavan
  நவ் 23, 2015 @ 10:45:34

  மென்மையோ வன்மையோ உன் அன்பு
  என்னை பிரியாமல் இணை சேர்ந்து
  சின்ன மகனைச் சிற்பமாய் செதுக்குவோம்
  அன்னமே பேதையேயென அகத்தில் எண்ணாதே
  என்ன சொல்கிறாய்! இதற்குச் சம்மதமா!

  காதலால் காதலுற்றேன் காதலே வாழ்வெலாம் இணை நில்லென அன்போடு ஆழைப்பாணை விடும் அந்தப் புறம் – அருமை

  மறுமொழி

 7. கோவை கவி
  டிசம்பர் 20, 2015 @ 16:24:50

  Subajini Sriranjan :- மிக அருமை
  எளிமையாக அழகான ஒரு நீரோட்டம் போல்
  கவிதை நகர்கிறது.
  Like · Reply · October 25 – 2015 at 9:09am

  Ratha Mariyaratnam :- மிக நன்று சகோதரி
  Like · Reply · October 25 at 9:11am

  Vetha Langathilakam :- மிக்க நன்றி சுபா – ராதா…
  கருத்திற்கு மகிழ்வு கொண்டேன்…
  நேரம் கண்டு வந்ததற்கு
  Like · Reply · October 25 at 9:40am
  Vetha Langathilakam திரு சிறீ அவர்களிற்கு…
  தங்கள் வரிகள் ஆரம்பத்துத் தந்த
  கவிதை எனது சுவரில்…
  நேரமிருந்தால் பார்க்கவும்…

  மறுமொழி

 8. கோவை கவி
  டிசம்பர் 20, 2015 @ 16:26:28

  Seeralan Vee :- அழகிய உணர்வுகள்
  Like · Reply · October 25 at 9:37am

  Vetha Langathilakam :- மிக்க நன்றி Seeralan Vee
  கருத்திற்கு மகிழ்வு கொண்டேன்…
  நேரம் கண்டு வந்ததற்கு
  Like · Reply · 1 · October 25 at 11:19am

  Seeralan Vee :- கிடைக்கும் நேரத்தில் எல்லோர் பதிவுகளையும் பார்க்க முடியவில்லையே
  Like · Reply · October 25 – 2015 at 11:38am

  மறுமொழி

 9. கோவை கவி
  டிசம்பர் 20, 2015 @ 16:27:15

  Siva Jeya :- அழகிய காதல்
  Like · Reply · October 25 at 11:17am

  Vetha Langathilakam :- மிக்க நன்றி Siva Jeya.
  கருத்திற்கு மகிழ்வு கொண்டேன்…
  நேரம் கண்டு வந்ததற்கு

  மறுமொழி

 10. கோவை கவி
  டிசம்பர் 20, 2015 @ 16:30:19

  Verona Sharmila :- அருமை அழகிய காதல் உணர்வுகள்
  Unlike · Reply · 1 · October 25 at 12:28pm

  Vetha Langathilakam:- மிக்க நன்றி dear V.Sharmila…
  கருத்திற்கு மகிழ்வு கொண்டேன்…
  நேரம் கண்டு வந்ததற்கு
  Like · Reply · October 25 at 1:10pm

  Tharini Raj :- அழகிய காதல்…அருமை
  Unlike · Reply · 1 · October 25 at 11:12pm

  Vetha Langathilakam :- மிக்க நன்றி.
  கருத்திற்கு மகிழ்வு கொண்டேன்…
  Like · Reply · 20-12-15

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: