70. பிழைக்கும் கவித்துவம்…!

11923198_10206457900343490_7416856781895452082_n

 

பிழைக்கும் கவித்துவம்…!

 

நந்தவனப் பூ மெத்தையில் சிறு நதி ஓரத்தில்

சொந்தம் யாருமின்றி இயற்கையை மிக விரும்பி ரசித்தல்

 

வண்டுகள் ரீங்காரித்துப் பறக்க வண்ணத்துப் பூச்சிகளும் சிறகசைக்க,

கண்டிட முடியாத் தென்றலை உணர்ந்து குளிர்மையை ரசிக்க 

 

எவரமைத்தார் இந்த நந்தவனத்தை?! அருகினில் ஒரு இதம்

கவருகின்ற தென்னை மரச்சோலையும் பறவைகள் ஒலியும் பரவசம்!

 

பொல்லாக் காற்று இல்லாததால் தென்றலும் மெல்லிசைக் கடை

தொல்லையில்லா ரசனை! கவிதை பொங்கிட ஏது தடை?!

 

தலையசைத்த மலர்கள் வாசனையை இதயத்துள் மெதுவாகத் தூவின

தலை ஆட்டும் தென்னோலைகள் சில தேங்காய்கள் தந்தன

 

தனிமை இல்லையே! எங்கோ போனது! வண்டுகள் ஓசையும்

இனிமை சேர்க்கச் சோலைநிழல் காட்டியது கோலம்

 

குழலோசை ஒன்று குயிலோசையாய்த் தவழ மயக்கம் வந்தது

உழவுமழையாய் உள்ளத்தில் பொழிந்து அரங்கத்தில் அமருமுணர்வு கூட்டியது

 

ஆகா! அற்புதம்! என்னே இயற்கை! எழுதலாம் எழுதலாம்

சாகா வரிகள்! பிழைக்கும் கவிஞன் திறமை என்றும்!

 

பா ஆக்கம்

பா வானதி வேதா. இலங்காதிலகம்

டென்மார்க்

 

ssssd

 

14 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Nagendra Bharathi
  நவ் 24, 2015 @ 12:16:34

  கவிதை அருமை

  மறுமொழி

 2. கொமதி அரசு
  நவ் 26, 2015 @ 02:06:08

  இயற்கையின் அழகை . அது தரும் மகிழவை எவ்வளவு வேண்டும் என்றாலும் எழுதலாம் நீங்கள் கவிதை படைக்கும் வல்லவர் அல்லவா நீங்கள்.
  வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 3. karanthaijayakumar
  நவ் 27, 2015 @ 02:10:21

  அருமை சகோதரியாரே

  மறுமொழி

 4. T.N.MURALIDHARAN
  நவ் 28, 2015 @ 01:49:32

  அருமை.
  இயற்கை கவிஞர்களுக்கு வாரி வழங்கும் வள்ளல்தான்

  மறுமொழி

 5. ramani
  நவ் 29, 2015 @ 12:50:37

  அருமை அருமை
  இரசித்த விதமும்
  இரசிக்கத் தந்தவிதமும்…
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

 6. yarlpavanan
  டிசம்பர் 06, 2015 @ 13:12:18

  சிறந்த பாவரிகள்
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  மறுமொழி

 7. கோவை கவி
  டிசம்பர் 07, 2015 @ 11:50:38

  elavan Athavan நல் விதை தூவி கவிதை அறுபடை செய் இறந்தகாலம் என்ன நிகழ்காலத்திலும் நீ வாழலாம்….. அருமை பதிவு சகோதரி வேதாக்கா…
  2015 – August 21 at 10:21am · Unlike · 1

  Sankar Neethimanickam :- நல்விதை தூவ நல்லதே விளையும்.. அம்மாவின் கவி விதை நல்கவிகளை விளைக்கட்டும்..
  August 21 at 4:55pm · Unlike · 1

  Vetha Langathilakam :- அன்புடன் சுயேன் – சங்கர் நீதிமாணிக்கம் நேரமற்ற உலகில்
  தங்கள் அன்பான கருத்திடலிற்கு மகிழ்ந்தேன்.
  மிகுந்த நன்றி
  August 22 at 9:28am · Like

  Malini Mala:- கவிதையில் எது விதைப்பது என்பது தெளிவாக விதைத்திருக்கிறீர்கள்.
  August 22 at 9:36am · Unlike · 1

  Vetha Langathilakam:- Dear Malini…நேரமற்ற உலகில்
  தங்கள் அன்பான கருத்திடலிற்கு மகிழ்ந்தேன்.
  மிகுந்த நன்றி.

  மறுமொழி

 8. கோவை கவி
  டிசம்பர் 07, 2015 @ 11:53:09

  Vetha Langathilakam:- மறையூர் மு.பொ.மணியின் பாக்கள் and இரா. கி இராஜேந்திரன்.கிருஷ்ணசாமி like this.
  August 22 at 5:34pm · Like

  Subajini Sriranjan :- இயற்கையில் நனைந்தேன்.
  ஒவ்வொரு வரியும் அழகு……..
  August 22 at 6:38pm · Like

  Vetha Langathilakam :- Dear Suba….நேரமற்ற உலகில்
  தங்கள் அன்பான கருத்திடலிற்கு மகிழ்ந்தேன்.
  மிகுந்த நன்றி.
  August 22 at 7:02pm · Like

  Rasiah Sharatha :- very nice
  August 27 at 5:43am · Unlike · 2

  Sujatha Anton :- ஒரு சிறுதுளிகளிற்குள் விதைத்திருக்கும் துளிகள் அழகு.!!!!
  August 29 -2015
  at 8:03pm · Unlike · 1

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: