2015 in review

The WordPress.com stats helper monkeys prepared a 2015 annual report for this blog.

Here’s an excerpt:

The concert hall at the Sydney Opera House holds 2,700 people. This blog was viewed about 26,000 times in 2015. If it were a concert at Sydney Opera House, it would take about 10 sold-out performances for that many people to see it.

Click here to see the complete report.

102. 2016 றே வா!..

vill.png.bb

2016 றே வா!..

பல நல்ல நிகழ்வுகளின் சொந்தக்காரனான 2015தே சென்று வா!
இனிய நல்ல நிகழ்வுகளிற்கு வித்திட 2016றே வா!..

தமிழருக்குள் குடும்பங்களிற்குள் ஒற்றுமை மேம்படட்டும்.
பொதுவான நல்ல எண்ணங்களிற்கு ஆதரவு நல்கி
ஒற்றுமையை வளர்க்கட்டும் என்று இப் புது 2016ல் வேண்டுகிறேன்.

வேதா. இலங்காதிலகம்
டென்மார்க்.
31-12-3015

10861134_818876691503365_6158213604798785450_o

58. பொறுத்திரு!

12234849_10206971685667802_9095139822821523432_n

 

பொறுத்திரு!

 

 நீல இரவினில் மயக்கும்

கோல விழிகளின் பரவசம்

சீலனுன் இதயம் திருடும்

சாலக்காரனின் அழகு தரிசனமே!

***

அவசரப்படாதே! அவன் உன்

அருகில் வரட்டுமே! ஏன்

அழகு மங்கைகள் அவன்

அழகில் மயங்குவாரெனும் பயமோ!

***

முத்துக்களும் மின்னும் மணிகளுன்

சொத்தல்ல! தூய்மையாம் அவன்

பத்தரை மாற்று அன்பின்

உத்தம இதயமேயுன் சொத்து!

***

கன்னல் கன்னியே! காதல்

இன்னல் நீங்கும் ஈதல்!

என்றும் இருவழிக் கூதலால்

இன்னும் எத்தனையோயின்பம் பொறுத்திரு!

***

பா ஆக்கம்

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

19-11-2015

Ha_3610png0002

தொலைத்தவை எத்தனையோ!.. 12.

தொலைத்தவை எத்தனையோ!.. 12.

 

 

எதை எழுதலாம் என எண்ணும் போது அங்கம் 11ல் தென்னம் பாளை பற்றி எழுத நேர்ந்தது. இதோடு தொடரலாம் என்று எண்ணுகிறேன்.

முன்பு அப்பாவிடம் நிறைய காணிகள் இருந்தது. ஊரில் நிலப் பிரபு என்றும் கூறினார்கள்.

அப்பா காலமாகிப் (23-12-2006) பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அன்று நாமிருந்த வளவு அத்தோடு களுவடி என்னும் வளவிலிருந்தும் தென்னோலைகள் நிறையச் சேரும். ( படம்)

paalai.keeral.jpg-oo

வீச முடியுமா!.
அம்மா அப்பாவிடம் கேட்பா  ” ஓலை கிழித்து தண்ணீர் தெளிக்கிறீர்களா  ”  என்று.

எல்லாம் சேர்த்து இப்படியான கத்தியால்

kaththy.
முழு ஓலையின் நடு முதுகுத்தண்டால் ஓலையை இரண்டாகப் பிரித்து, தலையையும் வாலையும் சிறிது துண்டித்துக் கொள்வார் இப்படியாக. (படம்)

oolai-2

10406577_428820247316563_7765116377340874208_n
இதில் நுனிப் பக்கத் துண்டை நாங்கள் தம்பி தங்கைகள் சேகரித்து அதை அப்பா போலக் கிழித்துக் குட்டியாகக் கிடுகு பின்னுவோம் அது வேறு கதை.
பாதி பாதி ஒலைகளை புறப்பக்கமாக (தண்ணீர் தெளிக்கும் போது தண்ணீர் ஓலையுள் நின்று ஓலையை நன்கு ஈரமாக்கும்) ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி ஒரு மாலை நேரம் கிணற்றிலிருந்து அப்பா வாளியில் தண்ணீர் கொண்டு வந்து தெளிப்பார். அடுத்த நாள் காலையுணவு முடிய 10து மணியளவில் ஈர ஓலைகளால் கிடுகு பின்னுவா அம்மா. (படம்)

IMG_7546

நாங்களும் பின்னிக் கொடுப்போம்.
அதில் ஒரு அருவருப்பு என்ன வென்றால் ஈர ஓலைக்குள்

anndhu

நத்தை, புழு எல்லாம் இருக்கும். அதற்காகவே அம்மாவிடம் பின்ன மாட்டோம் என்றும் மறுப்போம். பிறகும் அம்மா பாவம் என்று உதவி செய்வோம்.
பின்னி முடிய 2 -3 நாட்கள் இப்படி

36377_1

விரித்துக் காய விடுவோம். நன்கு காய்ந்ததும் கொட்டிலினுள் ஒன்றன் மேல் ஒன்றாய்

36377_2

அடுக்கி வைக்கப்படும்.
கீழே தரையில் கறையான் ஏறாமல் பெரிய கற்கள் தடிகள் வைத்துச் சாம்பல் தூவி அதன் மேலேயே அடுக்கப்படும். உறவினர், தெரிந்தவர், எமது தேவைக்கு இவை பாவனையாகும். சில வேளை பணத்திற்கும் கொடுப்பதுண்டு.
குட்டி நுனி ஓலைத் துண்டுகளை நாம் தம்பி தங்கைகள் சிறு கிடுகாகப் பின்னி சிறு வீடு கட்டித் திண்ணை அல்லது குந்து, களி மண்ணில் வைத்துக் கூரை போடுவோம்.

eda78c90-961d-422e-a866-a8c42e11af0c

பின்பு சின்னக் குந்தைச் சாணம் கொண்டு மெழுகுவோம்.  சிறு விளையாட்டு வீட்டினுள் தரையும் மெழுகப் படும். இவை தம்பி தங்கைகளுடன் சேர்ந்து கூட்டாகவே நடக்கும்.

ஐந்து நாட்கள் பாடசாலை. சில சனி ஞாயிறில் களுவடி வளவில் தேங்காய் பிடுங்குவது நடக்கும். முதலில் அப்பாவும் நாங்களும் போவோம். கள்ளு மரத்தில் கள் இறக்க வருபவர் தேங்காய் பிடுங்கித் தருவார்.

coconutharvest

அவருக்கு 3 மரத்திற்கு 2 தேங்காய் வீதம் கூலி கொடுக்கப் படும். பகல் போல பக்கத்து வீட்டார் வண்டி கொண்டு வருவார்.

oo

வந்து ஒரே தடலையாக எல்லாத் தேங்காய்களும் வீட்டிற்கு கொண்டு வந்து தருவார். அப்பா போய் விடுவார். நான் பொறுப்பாக நின்று வண்டிலுடன் வீடு செல்வேன். பின்னால் வண்டிலைப் பிடித்து நடப்பது ஜாலி தான். மாடு இல்லாமல் பக்கத்து வீட்டக்காரர் கையாலேயே வண்டியை இழுத்துச் செல்வார்.

மிகுதியை அடுத்த அங்கத்தில் தொடருவேன்.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
ஐப்பசி 2015.

 

stock-photo-difference-of-coconut-tree-isolated-on-white-219257599

419. வறுமை மனம்.

11221702_10206984813515990_2044734494621021146_n

 

வறுமை மனம்.

 

இறவா விடாமுயற்சியின் வெற்றிப் பலம்
திறமையுடன் திகழ்தல் இறை வரம்.
திறனற்று சேம்பலில் பயனற்று உலவும்
திடசித்த மானுடமும் கலந்த உலகம்.
திறன் அறிந்தும் உழைப்பை இருட்டடிக்கும்
திரையிட்டு மறைக்கும் விற்பன்ன மனிதமும்
திலங்கும் உலகிது! பூச்செண்டு பட்டாடைக்கும்
தியங்கும் (புத்தி மயங்கும்) அற்ப மானுட உலகம்.
***
 
தன்னாட்சிக்குச் சூழ்ச்சித் திறன் உபயோகம்.
அன்றும், இன்றும், என்றும் பயனாக்கம்.
தன் கூட்டம், பந்தங்கள் புகழும்
மின்னொளிர விரிக்கும் சிறு மதியாளர்.
வறுமை மனம் சுய பிரலாபத்தில்
மறுகும், குறுகும்! பொறாமை வட்டத்தில்
பிறர் திறம் தரம் குறைக்கும்.
திறமை போற்ற பதுங்கும் திணறும்.
***
உலகப் பிரச்சனைகள் தராசில் விழும்
உள்ளகப் பிரச்சனைகள் தராசிற்கு விலகும்
நீதி முள்ளை ஒடித்து விடும்
அநீதி மனமுடை அரங்க மனிதம்.
வெள்ளை ஆடையும் கொள்ளைப் பேச்சும்
வெள்ளையடிக்க வேண்டிய ஒரு மனம்
வைரவர் வாகன வால் வளைவை
கை கொண்டும் நீட்ட முடியாதன்றோ!
***
பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
22-11-2015.
Zakat-GivingAlms

 

***

heart-line

42. நத்தார் புதுவருட வாழ்த்துகள்

எல்லோருக்கும் எங்கள் இனிய நத்தார் புதுவருட வாழ்த்துகள்
24-12-2015

91ba1ebd-46e0-4fcc-8946-4c9333d4eba7.jpg-hh

 

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
24-12-2015

santasit-l

418. வீடு.

house-02

 

வீடு.

அன்பகம், அறிவகம், ஆலயம்.
தன்னகம் பண்பகமான அமைவு
இன்ப அகமாட்சித் திறவு.
அன்னவன் கூட்டுறவும் உயர்வு.

***

அன்பு மழையில் நனைந்து
அமைதிப் பால் அருந்து.
அன்றாடம் அரவணைப்பு மிகுந்து
நின்றாடும் வாழ்வு விருந்து.

***

துன்பம், கோபம், ஆக்ரோசம்
துன்மார்க்கப் பாதைக் கற்களாம்.
துன்புறு(த்)தல் தவிர்த்து நடத்தல்
இன்பத் துன்னர் இயல்பு.

***

நன்னெறி நன்னடத்தை தர்மம்
நன்மையே கைப்பற்று நிர்மலம்
நாடு போற்றும் நற் குணத்தால்
வீடு போற்றவும் வாழ்வாய்

***

(துன்னர் – தையற்காரர்)

***

வீடு.

விரிவாகப் பேசினால்
மூடும் சுவர்கள் கதவு
ஈடு கட்டும் கூரை
கூடும் நான்கு மூலைகள்
கேடற்ற செங்குத்துச் சுவர்கள்
பீடற்ற அன்பு, கண்டிப்பு,
வாடாத காதல், நேசம்
கூடி நிறைந்து வழிவது.

பதினெண் கோணங்களாலும் பொதிந்தது.
நிதியுடை பணக்காரன், ஏழை
மதியுள்ளவன், இல்லாதவன் என்று
அதிட்டமுடைய நல்ல பல
விதிகளுடைய புள்ளிக் கோலம்.
அதிகாரம் அன்புடைய கூடு.
அதிரசம் நிறைந்தது. ஒருமையாய்
இதிகாசமும் படைக்கும் பதி.

எடுப்பதும் கொடுப்பதுமான வட்டம்.
கடுப்பற்ற நிதான நடை
எடுப்பாக நடத்தல், வாழ்வை
மிடுக்காக அமைக்க முயல்தல்.
வீடு விட்டுப் பறப்பவை
கூடு திரும்புதலானது வீடு.
சிடுசிடுத்தலும் சிரிக்குமன்புமான வழி.
வடுவான பொய் உண்மையுமுடையது.

செங்கோலாக மட்டப் பலகை
நீர்மட்ட நூல் உபயோகமாக
மரியாதை, நம்பிக்கை நாணயமன்பு
சரியாதிருப்பது நல்ல வீடு.
செல்ல மக்கள், மனைவியே
நல்ல வீட்டின் அணிகலன்.
வாடகை விட்டிலும் ஒரு
சொந்த வீடு சிறப்பு.

19-10-15

வேறு

வீடு

மாடமாளிகை,கூடகோபுரம்,
மண் குடிசையுமானாலும்
மனம் நிறைந்த நிம்மதி தேவை
அன்றல் காடாகிலும்
குடியிருக்க இயலாது.
நீயே உipத்துக் கட்டு
பாயே போட்டும்
உறங்குவாய் நிம்மதியாய்.

2018

 

new header

 

57. இளஞ் சிவப்புக் காதல்

12111964_1637477273207592_6064421111639268644_n

 

இளஞ் சிவப்புக் காதல்

(அழகம்- கூந்தல். குழகுதலாய் – கொஞ்சி விளையாடுதல், கலத்தல்.
கழகம் – கல்வி பயிலுமிடம்.)
***
மலரென்ற உடலிங்கு அசையுது
புலனைந்தும் தடம் மாறி உலையுது
மலரேந்தும் நினைவு மகிழ்ந்தாடுது
அலங்கார சாத்திரம் ஆராயுது.
***
அழகமேந்தும் வதனம் நிலவானது
குழகுதலாய் என்னை இழுத்தது.
கழகமாய் என்னை வரவேற்றது.
பழகிட மனம் துடித்தது.
***
நிழலாவாளோ பாசமிகு அன்பிற்கு!
பழமாய் கனிவாளோ பசிக்கு!
வழங்குவாளோ தன்னை எனக்கு!
முழங்குமா காதல் தீபம்!
***
இளஞ்சிவப்பு அழகில் தனியன்
இளகி உருகுதல் காதலின்
களமான குணம்! மனிதன்
தளமிடலாம் காதலிற்குத் தரமுடன்.
***
பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
21-11-2015
***
3356826ujko9qbny6

417. பணம்

money-600x338

பணம்

 

பணச்செங்கோல் உலகை பலமாய் ஆளுது
குணச்செங்கோலை அது புரட்டிப் போடுது.
எணம்(மதிப்பு) உடைய கடதாசி ராசாவிது.
கணம்! மனிதத்தின் கண்களை மறைக்கிறது.
Superstar---5-Star-rating---Gold
கணன்(கள்ளன்), கணிகை, பக்திமானும் தேடுவது
கணத்தில் உயர்வு புகழ் தருகிறது.
சணத்திலெட்டினால் பூஜ்ஜியமும் இராச்சியம் ஆளுகிறது.
கணக்கு விட்ட பலரைக் கவிழ்த்தது.
Superstar---5-Star-rating---Gold
தன்னலம் நிறைத்துத் தரம் சாய்க்கிறது.
என்னலமும் நிறைந்தவனையும் பித்தலாட்டம் ஆட்டுகிறது.
பென்னம் பெரிய அதிகார முதலாளியிது.
அன்பமுதம், தொடுமுணர்வின் இதம் தராதது.
Superstar---5-Star-rating---Gold
மனம் மகிழ்ந்து பூவாய் சிரிக்கும்
தனம் இந்தப் பணச் சரித்திரம்.
கனமாக இது இல்லையெனிலும் தரித்திரம்.
தினமும் தேவை நிகழ்த்தும் சூத்திரம்.
Superstar---5-Star-rating---Gold
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
14-12-2015
(samme heading another poem’s link)
***
 
 
Line_of_cash

26. துர்க்காதேவி.

Durgai (1)

 

துர்க்காதேவி.

 

சிம்மவாகினி தாயே எம்
அம்மா துர்க்கா தேவி
தீய சக்தி ஒளிக்க
தீயாய் துணை வருவாய்.
Superstar---5-Star-rating---Gold
நவராத்திரி ஒன்பது நாட்கள்
தவமான முதல் மூன்றும்
நவசக்தி நாயகி உன்னை
நலம் வேண்டி வணங்குவோம்.
Superstar---5-Star-rating---Gold
மகிஷாசுரமர்த்தனி அகிலாண்ட ஈசுவரி
மங்களசண்டிகையே அருள் வடிவே
ஆதிபராசக்தி அன்பின் உருவே
ஆபத்தைத் தடுப்பாய் போற்றி.
Superstar---5-Star-rating---Gold
திரிசூல நாயகியே போற்றி
திரிபுர சுந்தரியே அருள்வாய்
பரசுராமருக்கு அமரத்துவம் தந்தாய்
பக்தியுடன் உன்னைப் பணிகிறோம்.
Superstar---5-Star-rating---Gold
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
26-10-2015
10474864_699684510086896_4159358153570174852_n

Previous Older Entries