45. தமிழ் மையை நிரப்பு

 

26.jpg.ss

 

தமிழ் மையை நிரப்பு

 

ஆதித் தொன்மையாம் குமரிக் கண்டம்
ஆஸ்திரேலியா, சாலித்தீவு, தென்னாபிரிக்கா இணைவாம்
ஏக மனதாராய்ச்சி தேவநேயப்பாவாணரோடு பலரால்.
ஊகமல்ல பதினான்கு மாநிலங்களான பிரிவாம்
ஏழு தெங்கு நாடு என்றும்
ஏழு பனை நாடெனப் பிரிவுகளாம்!
தமிழன், தமிழ்மொழி பிறப்பிடம் குமரிக்கண்டம்
தக்கசான்றுகள் பினீசியர்கள் கல்வெட்டுகள் நாணயங்கள்.

 

உன்னத இலக்கியம் இரண்டாயிரமாண்டுகளிற்கு மேலானது
கன்னலாம் நீண்ட இலக்கண மரபுடையது.
இன்பத் தமிழேயித்தனை பழமைத் திமிரே!
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென
துன்ப அகராதி துடைத்தழிக்கும் அமிழ்தே!
என்னுயிர்ச் சொத்தாமுலகின் பதினெட்டாம் நிலையே!
உன்னையின்னும் மக்கள் இழுத்து அணைக்கட்டும்!
சின்ன எழுதுகோலில் தமிழ்மையை நிரப்பட்டும்!

 

மொழி எம் வாழ்க்கையின் வழி!
ஆழி! உள்ளாழ்ந்து முத்துக் குளி!
தோழியாய்த் தோளணைத்து மழையாய்ப் பொழி!
ஊழிக்காலம் வரை காத்திட விழி!
அறிவானது பனையோலை வாய்மொழியான பாதுகாப்பு!.
செறிமைச் சூரியன்! இன்ப நீரோடை!
வறியவனாக்காத மொழிப் பயிர் மேடை!
தறியெனும் எழுதுகோலால் நூல் நெய்வோம்!

 

பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்    20-6-2015

10429486_849560548416048_5114170664496932595_n

20 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Nagendra Bharathi
  டிசம்பர் 13, 2015 @ 11:43:50

  அருமை

  மறுமொழி

 2. கோவை கவி
  டிசம்பர் 13, 2015 @ 12:44:33

  You, இரா. கி இராஜேந்திரன்.கிருஷ்ணசாமி, Mullai Amuthan and Amirtha Rani like this.
  1 share
  Comments

  இரா. கி இராஜேந்திரன்.கிருஷ்ணசாமி :- அருமையான பதிவு
  Unlike · Reply · 1 · 13-12-15
  Vetha Langathilakam
  Vetha Langathilakam மிக்க நன்றி ஐயா செந்தமிழெடுத்து வரிகள் தந்தமைக்கு.
  லைக் என்று இலேசாக அழுத்துகிறோம்.
  தங்கள் இனிய வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி.
  Like · Reply · 13-12-2015.

  மறுமொழி

 3. T.N.MURALIDHARAN
  டிசம்பர் 13, 2015 @ 12:51:27

  தமிழ் மையை நிரப்பு ஆஹா! என்ன கவித்துவமான தலைப்பு! அருமை

  மறுமொழி

 4. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  டிசம்பர் 13, 2015 @ 15:07:03

  கவிதை மிகவும் நன்று சகோ.

  மறுமொழி

 5. Bagawanjee KA
  டிசம்பர் 13, 2015 @ 15:30:50

  படித்து களித்தேன் 🙂

  மறுமொழி

 6. கோவை கவி
  டிசம்பர் 13, 2015 @ 18:01:43

  இரா. கி இராஜேந்திரன்.கிருஷ்ணசாமி பாவகை :வெண்டுறை
  ————————————
  மை நிரப்ப மறந்து விட்டேன்
  கை யெழுத நினை விழந்தேன்
  தொகுத் தளித்த வரிகளில் சரித்திரத்
  தோற்றங்களீல் லயித்து விட்டேன் சற்றே
  விழித்துக் கொண்டேன் நினைவு வந்து
  மொழியழகில் மயங்குகிறேன் என்றும்
  Unlike · Reply · 1 · 13-12-2015 18.45pm

  Vetha:- தங்கள் நல்ல கருத்திற்கு நான் மகிழ்கிறேன்.
  அன்பு நன்றி கூறுகிறேன் உறவே.

  மறுமொழி

 7. திண்டுக்கல் தனபாலன்
  டிசம்பர் 14, 2015 @ 02:26:33

  அருமை…

  மறுமொழி

 8. கோவை கவி
  டிசம்பர் 14, 2015 @ 09:19:50

  Maniyin Paakkal:- மொழி எம் வாழ்க்கையின் வழி!
  ஆழி! உள்ளாழ்ந்து முத்துக் குளி!
  Unlike · Reply · 14-12-2015

  Sangilian Lawrence :- இதற்கு குளிர்களி என்று தமிழ்ஈழத்தில் பெயர்
  Like · Reply · 14-12-15

  Vetha Langathilakam :- சங்கிலியன் லோறன்ஸ்! குளிர் கழி இது ஐஸ்கிறீம் பெயர்
  தமிழ் மொழியில் அமிழ்!- நன்கு அமிழ்ந்து நனைந்து ரசி!
  களி! – ஆனந்தி, நன்கு களிப்படைவாயாக!
  தமிழில் ம வ்ழவும் ள வுமே நல்ல ரசனை தரும்.
  அத்தனை அழகான தமிழ் மொழியில் அமிழ்!
  களி மகிழ் என்று எழுதினேன்.
  தம்மைப் போல எத்தனை பேர் தவறாக விளங்கினார்களோ! ஆண்டவனிற்கே வெளிச்சம்!
  நன்றி சகோதரா..நன்றி….
  Like · Reply · 1 min

  Vetha Langathilakam:- @ Manjyin Maniyin Paakkal.. Arumai…arumai.. mikka nanry Makilnththen..
  Like · Reply · Just now

  மறுமொழி

 9. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  டிசம்பர் 14, 2015 @ 15:58:38

  வணக்கம்

  அற்புத வரிகள் படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 10. Valvai Suyen
  டிசம்பர் 23, 2015 @ 20:28:32

  தாய் மொழியே நம் வாழ்வின் உயர் வழி
  ஆழி! உள்ளாழ்ந்து முத்துக் குளி!
  அருமை நன்றே நன்று சகோதரி

  மறுமொழி

 11. கோவை கவி
  ஜூன் 22, 2018 @ 08:59:35

  மறுமொழி

 12. கோவை கவி
  ஜூன் 22, 2019 @ 10:13:07

  சிறீ சிறீஸ்கந்தராஜா :- அறிவானது பனையோலை வாய்மொழியான பாதுகாப்பு!.
  செறிமைச் சூரியன்! இன்ப நீரோடை!
  வறியவனாக்காத மொழிப் பயிர் மேடை!
  தறியெனும் எழுதுகோலால் நூல் நெய்வோம்!
  ·22-6-2015 at 7:03am
  Palani Kumar :- வாழ்த்துக்கள்
  22-6-15y at 8:15am
  Vetha Langathilakam :- சகோதரர்கள் சிறீ, பழநி குமார் பகிர்விற்கு மிக்க மகிழ்வும் நன்றியும்.
  22-6-15 at 8:56am
  Ashraff Puthunagaran:- மொழி எம் வாழ்க்கையின் வ ழி.!!அருமை.!!!
  22-6-15 at 9:31am
  Vetha Langathilakam :- மகிழ்ச்சி நன்றி சகோதரா…dear A.P
  22-6-15 at 9:41am
  Ratha Mariyaratnam:- தமிழின் தொன்மையைக் காட்டும் விதமாய் அமைந்த கவிதை மிக அருமை சகோதரி…வாழ்த்துக்கள்
  Like · 23-6-2015
  Vetha Langathilakam :- மகிழ்ச்சி நன்றி சகோதரி…dear Ratha..
  2015

  மறுமொழி

 13. கோவை கவி
  ஜூன் 22, 2019 @ 10:15:45

  இரா. கி இராஜேந்திரன்.கிருஷ்ணசாமி:- அருமை சகோதரி
  அமிழ்தமென முத்துச் சர வரியில்
  தமிழ் மையை நிரப்பு என்று
  கவி படைத்து வானதி நீங்கள்
  கண்ணில் நீர் நிரப்பிய நீவீர்
  எண்ணத்தில் பெயரில் இலங்காதிலகம்
  மண்ணிலே நல்ல கவித் திலகம்
  23-6-15
  Vetha Langathilakam :- மனம் மகிழ்ந்தேன் ஐயா.
  எனது நன்றி உரித்தாகுக.
  Meenakumari Kannadasan :- அருமை
  வாழ்த்துக்கள்
  23-6-15
  Muthukumaran Singaram :- அருமை…..
  23-6-15
  Vetha Langathilakam :- மனம் மகிழ்ந்தேன் .
  எனது நன்றி உரித்தாகுக.Meenakumari.K and Muthukumaran.S
  Muruguvalli Arasakumar :- அருமை…வாழ்த்துகள்
  Verona Sharmila :- அருமை
  வாழ்த்துக்கள்
  Vetha Langathilakam:- மனம் மகிழ்ந்தேன் .
  எனது நன்றி உரித்தாகுக Muruguvalli Arasakumar, Verona Sharmila.
  23-6-15
  விஜயகுமார் வேல்முருகன் :- அருமை அம்மா..
  அழகுத்தமிழின் அதிசயங்கள்தான் ஏராளம்
  பழமைத்தமிழின் பண்புகளிங்கே தாராளம்
  அத்தமிழின் பெருமைகளை எழுதிட்ட உங்களுக்கு நன்றிகள்
  ஏராளம் ஏராளம்…
  24-6-2015

  Jayaseelan Vallibooks:- Valthukal
  Like · 25-6-2015
  Vetha Langathilakam:- Makilchchy…eniya nanry dear Jeyaseelan.V
  Edit or delete this
  Like
  · Reply · 3y

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: