தொலைத்தவை எத்தனையோ!.. 12.

தொலைத்தவை எத்தனையோ!.. 12.

 

 

எதை எழுதலாம் என எண்ணும் போது அங்கம் 11ல் தென்னம் பாளை பற்றி எழுத நேர்ந்தது. இதோடு தொடரலாம் என்று எண்ணுகிறேன்.

முன்பு அப்பாவிடம் நிறைய காணிகள் இருந்தது. ஊரில் நிலப் பிரபு என்றும் கூறினார்கள்.

அப்பா காலமாகிப் (23-12-2006) பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அன்று நாமிருந்த வளவு அத்தோடு களுவடி என்னும் வளவிலிருந்தும் தென்னோலைகள் நிறையச் சேரும். ( படம்)

paalai.keeral.jpg-oo

வீச முடியுமா!.
அம்மா அப்பாவிடம் கேட்பா  ” ஓலை கிழித்து தண்ணீர் தெளிக்கிறீர்களா  ”  என்று.

எல்லாம் சேர்த்து இப்படியான கத்தியால்

kaththy.
முழு ஓலையின் நடு முதுகுத்தண்டால் ஓலையை இரண்டாகப் பிரித்து, தலையையும் வாலையும் சிறிது துண்டித்துக் கொள்வார் இப்படியாக. (படம்)

oolai-2

10406577_428820247316563_7765116377340874208_n
இதில் நுனிப் பக்கத் துண்டை நாங்கள் தம்பி தங்கைகள் சேகரித்து அதை அப்பா போலக் கிழித்துக் குட்டியாகக் கிடுகு பின்னுவோம் அது வேறு கதை.
பாதி பாதி ஒலைகளை புறப்பக்கமாக (தண்ணீர் தெளிக்கும் போது தண்ணீர் ஓலையுள் நின்று ஓலையை நன்கு ஈரமாக்கும்) ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி ஒரு மாலை நேரம் கிணற்றிலிருந்து அப்பா வாளியில் தண்ணீர் கொண்டு வந்து தெளிப்பார். அடுத்த நாள் காலையுணவு முடிய 10து மணியளவில் ஈர ஓலைகளால் கிடுகு பின்னுவா அம்மா. (படம்)

IMG_7546

நாங்களும் பின்னிக் கொடுப்போம்.
அதில் ஒரு அருவருப்பு என்ன வென்றால் ஈர ஓலைக்குள்

anndhu

நத்தை, புழு எல்லாம் இருக்கும். அதற்காகவே அம்மாவிடம் பின்ன மாட்டோம் என்றும் மறுப்போம். பிறகும் அம்மா பாவம் என்று உதவி செய்வோம்.
பின்னி முடிய 2 -3 நாட்கள் இப்படி

36377_1

விரித்துக் காய விடுவோம். நன்கு காய்ந்ததும் கொட்டிலினுள் ஒன்றன் மேல் ஒன்றாய்

36377_2

அடுக்கி வைக்கப்படும்.
கீழே தரையில் கறையான் ஏறாமல் பெரிய கற்கள் தடிகள் வைத்துச் சாம்பல் தூவி அதன் மேலேயே அடுக்கப்படும். உறவினர், தெரிந்தவர், எமது தேவைக்கு இவை பாவனையாகும். சில வேளை பணத்திற்கும் கொடுப்பதுண்டு.
குட்டி நுனி ஓலைத் துண்டுகளை நாம் தம்பி தங்கைகள் சிறு கிடுகாகப் பின்னி சிறு வீடு கட்டித் திண்ணை அல்லது குந்து, களி மண்ணில் வைத்துக் கூரை போடுவோம்.

eda78c90-961d-422e-a866-a8c42e11af0c

பின்பு சின்னக் குந்தைச் சாணம் கொண்டு மெழுகுவோம்.  சிறு விளையாட்டு வீட்டினுள் தரையும் மெழுகப் படும். இவை தம்பி தங்கைகளுடன் சேர்ந்து கூட்டாகவே நடக்கும்.

ஐந்து நாட்கள் பாடசாலை. சில சனி ஞாயிறில் களுவடி வளவில் தேங்காய் பிடுங்குவது நடக்கும். முதலில் அப்பாவும் நாங்களும் போவோம். கள்ளு மரத்தில் கள் இறக்க வருபவர் தேங்காய் பிடுங்கித் தருவார்.

coconutharvest

அவருக்கு 3 மரத்திற்கு 2 தேங்காய் வீதம் கூலி கொடுக்கப் படும். பகல் போல பக்கத்து வீட்டார் வண்டி கொண்டு வருவார்.

oo

வந்து ஒரே தடலையாக எல்லாத் தேங்காய்களும் வீட்டிற்கு கொண்டு வந்து தருவார். அப்பா போய் விடுவார். நான் பொறுப்பாக நின்று வண்டிலுடன் வீடு செல்வேன். பின்னால் வண்டிலைப் பிடித்து நடப்பது ஜாலி தான். மாடு இல்லாமல் பக்கத்து வீட்டக்காரர் கையாலேயே வண்டியை இழுத்துச் செல்வார்.

மிகுதியை அடுத்த அங்கத்தில் தொடருவேன்.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
ஐப்பசி 2015.

 

stock-photo-difference-of-coconut-tree-isolated-on-white-219257599

8 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. jude arulappu
  டிசம்பர் 28, 2015 @ 02:18:30

  நன்று.வாழ்த்துக்கள்! தொடர்ந்து எழுதுங்கள்!

  Vetha:- இந்த இணைப்பில் எனது இரண்டாவது வலையில் இவை தொடருகின்றது.வாசியுங்கள்.. https://kovaikkothai.wordpress.com/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B/

  மறுமொழி

 2. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  டிசம்பர் 28, 2015 @ 03:39:30

  பழைய நினைவோட்டங்கள் அழகிய புகைப்படங்களும், சித்திரமுமாய் அருமை தொடர்கிறேன் சகோ

  மறுமொழி

 3. karanthaijayakumar
  டிசம்பர் 29, 2015 @ 03:02:04

  நினைவுகள் இனிமையானவை

  மறுமொழி

 4. sarwaswary kathirithamby
  டிசம்பர் 29, 2015 @ 07:29:04

  வணக்கம் வேதா அக்கா !
  விடைபெறும் ஆண்டினை மீள மீட்டியபடியே /. . . .
  விரைந்துவரும் புதிய ஆண்டில் எல்லாமகிழ்வுகளும்
  சுகநல இனிமையுடன் இனிதே பெருகிடட்டும் !
  இனிய வாழ்த்துக்கள் !
  அருமையான இனிய நினைவுகளை மிளிரவைத்துள்ள
  தென்னைமரத்து ஓலையின் சரிதம் சுப்பர் அக்கா! உள்ளம் குளிர்கிறது .
  எனது கதை ஒன்றில் இப்படியான சுவையை பலவிதத்தில் சேர்த்தே
  தொடங்கியுள்ளேன் முடிவு என்றோ தெரியவில்லை . எப்போ எங்கள் வானலை உங்கள் பிரசன்னம் _ ஆவலுடன் எதிர்பார்த்தபடியே . . . .தொடருங்கள்
  உங்கள் மேன்மைகொண்ட பணியை . . . .
  அன்புடன் சர்வி .க

  Date: Sun, 27 Dec 2015 22:15:30 +0000
  To: sarvi-5@hotmail.de

  மறுமொழி

 5. கோவை கவி
  ஜன 03, 2016 @ 07:46:58

  கருத்திடலிற்கு மிக்க நன்றியும் மகிழ்வும்
  இறையாசி நிறையட்டும்.
  மீண்டும் வருக அன்புறவே.
  Happy new year.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: