45. தமிழ் மையை நிரப்பு

 

26.jpg.ss

 

தமிழ் மையை நிரப்பு

 

ஆதித் தொன்மையாம் குமரிக் கண்டம்
ஆஸ்திரேலியா, சாலித்தீவு, தென்னாபிரிக்கா இணைவாம்
ஏக மனதாராய்ச்சி தேவநேயப்பாவாணரோடு பலரால்.
ஊகமல்ல பதினான்கு மாநிலங்களான பிரிவாம்
ஏழு தெங்கு நாடு என்றும்
ஏழு பனை நாடெனப் பிரிவுகளாம்!
தமிழன், தமிழ்மொழி பிறப்பிடம் குமரிக்கண்டம்
தக்கசான்றுகள் பினீசியர்கள் கல்வெட்டுகள் நாணயங்கள்.

 

உன்னத இலக்கியம் இரண்டாயிரமாண்டுகளிற்கு மேலானது
கன்னலாம் நீண்ட இலக்கண மரபுடையது.
இன்பத் தமிழேயித்தனை பழமைத் திமிரே!
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென
துன்ப அகராதி துடைத்தழிக்கும் அமிழ்தே!
என்னுயிர்ச் சொத்தாமுலகின் பதினெட்டாம் நிலையே!
உன்னையின்னும் மக்கள் இழுத்து அணைக்கட்டும்!
சின்ன எழுதுகோலில் தமிழ்மையை நிரப்பட்டும்!

 

மொழி எம் வாழ்க்கையின் வழி!
ஆழி! உள்ளாழ்ந்து முத்துக் குளி!
தோழியாய்த் தோளணைத்து மழையாய்ப் பொழி!
ஊழிக்காலம் வரை காத்திட விழி!
அறிவானது பனையோலை வாய்மொழியான பாதுகாப்பு!.
செறிமைச் சூரியன்! இன்ப நீரோடை!
வறியவனாக்காத மொழிப் பயிர் மேடை!
தறியெனும் எழுதுகோலால் நூல் நெய்வோம்!

 

பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்    20-6-2015

10429486_849560548416048_5114170664496932595_n

34. அந்தநாள் ஞாபகம்

11990538_10206567470802683_1246651914165505259_n (1)

அந்தநாள் ஞாபகம்

பனை வளவில் அப்பாவுடன்
பனம் பாத்தி அமைத்ததும்
பல கதைகள் பேசியதும்
பசுமை நினைவுகள் அழியாதது…

அதி காலையில் எழுந்து
அணில் கொறித்த மாங்காய்கள்
அந்த மரத்தின் கீழ்
அவசரமாய்ப் பொறுக்கியது அழியவில்லை…

சிறு ஆணியடித்து கம்பிணைத்து
சின்னத் தகரம் சில்லாக
சிறு தள்ளு வண்டியென
சிற்றடி நடந்தது அழியாதது.

சனிக்கிழமை காலை மாமிமாருக்கு
சங்கீத வகுப்பெடுக்க வருவார்
சங்கீத வாத்தியார் சாம்பசிவம்
இங்கிதமாய் அருகிருந்து இதயத்திலெடுத்ததுவும்

பெற்றவர் சகோதர அன்பு
பெருமையாய் வாழ்ந்த வீடு
அருமைத் தாய்நாடு அத்தனையும்
ஒரு புலம்பெயர்வால் மறக்குமா!

அந்த நாள் ஞாபகம்
எந்த நாளும் மறக்காதது.
இந்த வாழ்விற்கு வளமூட்டும்
சந்தன அட்சயபாத்திரம்! கிரியாஊக்கி!

வரிகள் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
5-8-2015

panai-2

 

 

26.பாரதியார்.

zz

*

பாரதியார்.  (பாரதி பற்றி  – 3 வது)

*

 

பாரதம் பெருமையுறும் தவப்புதல்வன் மகாகவி
பாரதி பிறந்தார் நெல்லை எட்டயபுரத்தில்.
ஆரதி செய்கிறாரவர் ஆராதனைக் கவிகளை.
சீரதிகமென்று சீராட்டுகிறார் உலக மக்கள்.

*

நீரவர்(அறிவுடையோர்) யாவரும் விரும்புமிவர் கவிகள்
சாரம் அதிகம்! யாரும் மறுக்கார்.
வீரதீர வரிகளும் கூரதிகமாய் எழுதி
யாரதிகம் எழுதுவார் என்ற நிலையே!

*

வேரதிகம் ஓடிய இவன் சாயல்
தீர வரிகளும் அதிகம்.
போரதிகம் செய்து புலவர் பட்டத்திற்கு
பாரதியாகவும் சாரத்தியம் செய்கிறார் பலர்.

*

பாரதியென்று பதினொரு வயதில் பட்டமாண்டார்.
ஊரதிருது நூற்று இருபத்திரண்டு வருடமாக
பாரதி வரிகள் பாராளுது. பாரதியாக
சோராத கவிகளாயும் பலர் எழுதுகிறார்கள்.

*

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
11-12-2015

*

1653344_615174351888104_825373005_n

101. சிரம் தாழ்த்த அவிழ்!

12191047_10206897696218112_3451354839850490279_n

 

ஆற்று நீரோட்டம் அழகு
ஊற்றுக் கவியாட்டம் பழகு
காற்றும் புகுந்து களியாட
சாற்று கவிதை நடைபோட
வரம் பெற்ற தமிழ்
தரம் நிறை தமிழ்
சரம் சரமாய் அவிழ் !
சிரம் தாழ்த்த அவிழ்!
***
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
5-11-2015
2683852taf9ikr3qe

416. கல்வி.

Online-study-420x268

கல்வி.

அறிவுச் செல்வமது குறியோடு செல்வது.
அறிமுகமாவது விஜயதசமி என்று ஆகிறது.
அறிவாளி சேர்ப்பவன் அறிமுகம் சிகரமேற்றுகிறது.
அறிவிலியறிவைச் சேர்ப்பவன் எறிந்தாலும் போகாதது.

***

கல்விக்கு அதிபதி சரசுவதி தேவி.
நல்லிரு கண்கள் கணிதத்தோடு கல்வி.
பொல்லாதவரும் அழிக்க முடியாத செல்வம்
இல்லாதவரும் வேண்டி ஏங்கும் செல்வம்.

***

தோண்டத் தோண்டப் பெருகும் கல்வி
ஆண்டு அனுபவிப்பவருக்கும் கல்வியொரு தகுதி.
மீண்டும் மீண்டும் வளர்த்தால் வளரும்.
கூண்டுக்குள் அடைத்தாலும் ஒளிரும் கல்வி.

***

கலையாது நிலைக்கும் செல்வம் யார்
குலைத்தாலும் உயரும் ஊன்றும் வேர்.
மலை போல் சுடரும் கல்வி.
மனிதனை மாமனிதன் ஆக்குமறிவுச் செல்வம்.

***

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.

27-10-2015

கல்வி

கண்டு கேட்டது அனுபவக் கல்வி
கண்டுபிடித்தனர் எழுத்து உருக்கள்.
கண்ட காட்சி வரைந்தது அறிவு
உண்டு உடுத்து ஆரம்பம் பாடங்கள்.

வண்டாகிப் புத்தகப் பூச்சியாய் முயற்சியது
தண்டமிழ் வளர்ந்து மெல்லச் செழித்தது
திண்மைப் புலவர்கள் அரசசபை ஏறினர்
தொன்மைத் தீந்தமிழ் ஒலித்தது கல்வியால்

அறிவால் நம்பிக்கை உறுதியாய் வளரும்
செறிவான துணிவும் நேரான நடையும்
செஞ்சாந்துக் குளம்பாய் சீவனைத் தடவும்
மஞ்சகம் (கட்டில்) போட்டு அறிவு கொஞ்சும்

ஓதி உயர்ந்தார் உலவினர் துணிவானார்
ஆதிமந்தி, ஒளவையாக வனிதையர்
வாதிட்டு வல்லமையாய்த் தெளிவாய்த் தூவினார்
மோதிக் கருத்தினை முடிவாகக் கூறினார்

கரையிலாக் கல்வியின் ஆனந்த நுரை
வரையிலா அறிவோடு தழுவும் கரை
இரை தமிழ்ப்பசிக்கு இன்ப சீவனுக்கு
அரை மனிதனின்றி முழு மனிதனாக்கும்

2015

கல்வி.

அகரம் அறிதல் எழுதுதல். ஒழுக்கம்
அறிவுஇ கலைகள் கற்றல் கற்பித்தல்.
நிகரற்ற அறிவுஇ அனுபவம்இ ஆளுமை
ஆற்றலின் அடித்தளத் தொகுப்பே கல்வி.

கரையற்றது. காலம் முழுதும் கற்கலாம்.
கற்றது கையளவு கல்லாதது உலகளவாம்.
கரையாது. கொடுத்தாலும் எடுத்தாலும் உயரும்.
விற்றாலும் வெற்று மனிதனாகினாலும் போகாதது.

கல்வி சமூகத்தின் கலங்கரை விளக்கு
சமுதாயப் பள்ளங்கள் நிரவுவான் கல்வியாளன்.
கல்வியாகக் கற்ற நீதிப்படி ஒழுகினால்
அநீதி மலியாதுஇ அவலம் குறையும்.

மின்சாரமாய் தன்சாரம் ஒளி தரும்.
சென்றவிடமெல்லாம் கல்வியால் சிறப்பு உயரும்.
இன்று பணத்திற்கு வாங்கும் பொருளானது.
கசடறக் கற்று அதற்கேற்றபடி நடவுங்கள்.

வேதா. இலங்காதிலகம்
டென்மார்க். 3-6-2016.

493789nfy8xzi1n4

415. தர்மம்.

12235099_944299678984220_4745647860030978580_n

தர்மம்.

தர்மம், நற்செயல், நீதி
தருமம், இயற்கை, நல்லொழுக்கம்
மர்மமல்ல கொடை, கருணை
தயை, நற் போதiனைகளுமாகும்-
சர்ச்சையல்ல சரியான செயல்கள்
செய்தல், சரியான பாதையிலேகுவதாகும்.
தர்மம் பொருளாளர்களது அல்ல
தேவையின் மிகுதியையும் கொடுக்கலாம்.

Superstar---5-Star-rating---Gold

எல்லோரும் தர்மம் செய்யலாம்
இளகிய மனமே தேவை.
நல்லவகையில் கொடுப்பது தானம்
கேட்டுக் கொடுப்பது பிச்சை.
பொல்லா வழிக்கொடுப்பனவு இலஞ்சம்
புகழிற்குப் பிராயச்சித்தத்திற்கும் தருமமுண்டு.
நல்லாக வாழுவான் கொடுத்தவன்
கொடுக்காது வாழ்பவன் வாழ்வதில்லை.

பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
27-10-2015

Technique_Tuesday_Stamp_Set_Borderline_Vintage_Lace-4

 

 

Next Newer Entries