427. வெகுளி.

TN_120628133327000000

 

வெகுளி.

மயக்கம், காமம், வெகுளி
மும்மலங்களில் ஒன்றாம் வெகுளி.
அம்மாஞ்சிக் கோபம், வெறுப்பு, அ
றியாமை என்பதும் வெகுளி.
***
குழந்தை போலொரு வெகுளி
உலகம் தெரியாத வெகுளி
கள்ளம்கவடு இல்லாமை வெகுளி.
கள்ள ஞானம் வெகுளி
***
வெகுளி என்பவர் அப்பாவி
வெகுமதி இல்லாப் பிறவி.
வெங்காயம் என்று இழித்துரைக்கும்
வெள்ளை மனமுடை அப்பட்டம்.
***
வெகுளி என்று கூறியும்
வெகுவாகக் காரியம் சாதிப்பார்.
தாயின் பரிவு வெகுளியை
தரமாய்க் காப்பாற்றி வாழவைக்கும்.
***
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
27-12-2015.
paperclips

426. தேடும் அன்பு!

hearts-of-flame

தேடும் அன்பு!

அடிமனதில் உள்ளூர ஊறும்
அன்பூற்றில் ஆழ்ந்து நனையாமலும்
அலுக்காது காயம் செய்தலாய்
இல்லா நெருக்கமுடை உறவுகள்
இருந்தென்ன? விலகியென்ன? சமனே!

விருந்தெனும் ஆனந்தக் கீழ்வானமாகக்
கரும்பெனும் ஆழ்மன அன்பை
விருப்பித் தேடுதலாய் நிதமும்
அரும்பு விடத் தேடுகிறோம்.
அருமை அது கையகமாவது.

திறந்து வெளியாகும் அன்பைப்
பறந்து மினுமினுக்கும் அன்பிறகைக்
கறந்த பாலினிளம் சூட்டில்
சிறந்து மகிழ்ந்தருந்தத் தேடுகிறோம்.
துறந்திடாது நிலைத்திடல் ஆசையாய்.

புதிர்கள் வழியும் உறவுகளிடம்
எதிர்ப்படுமா பொங்கிப் பிரவகிக்கும்
கதிர்வீசும் உயிர்ப்புடை அன்பு
எதிர்க் காற்றில் உயிர்த்திடுமா!
உதிர்ந்து தான் போகிறது!

வேதா. இலங்காதிலகம்.டென்மார்க்.    15-12-2015

***
heart-line

19. ஆத்தும சாந்தி

 

சகோரர் கிருஷ்ணகுமாரின் தாயாரின் ஆத்துமா சாந்தியடைவதாக.

26366850-Vector-frame-with-black-ribbon-Stock-Vector-condolences-mourning-obituary.jpg-ffanjaly.png-pp

என்னால் எழுதப்பட்டது.
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.

 

 

anjali-2

46. தங்கத் தமிழ்

954560_889634221062911_1775597506_n-kk

தங்கத் தமிழ்

***

உயிர் மெய்யான தங்கத் தமிழ்
பயிர் செய்வது உங்கள் கையில்!
உயிர் என்பதாய் யான் மொழிதல்
உயர் காதல் தமிழில் அதனால்.
புதிய சொற்கள் கருத்துகள் தினம்
புதிதாய் பழகிட என்ன கனம்!
குளம் குட்டையாய் தேங்குவதா மனம்!
வளமுடை நதியான பிரவாகம் தனம்!
***
நான்கு வயதுத் தமிழ் வேறு
நாற்பது வயதுத் தமிழொரு கூறு!
வித்தகம் உத்தமம்! தமிழ் சாறு
எத்தகு இனிமை! இல்லையது சேறு!
நல்ல தமிழால் சாதனை உண்டு!
வல்ல தமிழை நெருங்கி அண்டு!
கொல்லாது குடையும் இன்ப வண்டு!
இல்லாத ஆனந்தம் நிச்சயம் உண்டு!
***
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
30-11-2015
Swirl divider v2

425. பசி

 

pasi.png-2

 

சொல்லிப் புரியாது சொல்ல முடியாது
எல்லோரும் பெறுவது. அறவே தீராதது.
ஒரு நோய்! பெரும் பசி!
ஒரு சாண் வயிற்றுப் பசி!
படிப்படியாய் உயிர் வாழத் தூண்டுமுணர்வு.
அடிப்படைத் தேவை பசியெனும் உணர்வு.
உலகனைத்துச் சீவன்களின் பொது மொழி
அலக்கழித்து வாட்டும் இலக்கண வழி
***
உணவே பசிக்கு எரி பொருள்
உணவிற்காய் உலகையே புரட்டும் மருள்
பசி மயக்கம் உயிரையும் பறிக்கும்.
பசித்தால் பெரும் குசி பிறக்கும்.
தாளாப் பசியால் அறிவுடமை, தவம்,
தாளாண்மை, முயற்சி, வண்மை, குலம்:,
தானம், கல்வி, மானம், காமமெனும்
தசமும் பறக்கும். பசி ருசியறியாது.
***
பசி ஏழைகளின் சொத்து. இதை
பகடையாக்குவான் பணக்காரன் தன் சுகத்திற்கு.
பசித்தால் புலி புல்லையும் உண்ணாது.
பகுத்தறிவாளன் மனிதன் எதையும் உண்பான்.
பசியாமையும் ஒரு நோய். நன்கு
பசிக்க இஞ்சி சாப்பிடலாம். ஒரேயளவு
சீரகம் – உப்பு வாயில் மென்றால்
சீரான பசி ஏற்படும் முயலுங்கள்!
***
12390913_960433400704181_4120140646094119582_n

வேறு

பசி

*

பசிக் கொடுமையால் எலும்பும் தோலுமான
பசியுடை கறுப்பினப் பிள்ளை ஒன்று
பசுவின் மலவாசலில் வாய் வைக்கிறது
பசிக் கொடுமையில் சாணியை உண்பதற்கு.

படத்தை முகநூலில் பார்த்த பின்பு
பசியென்றதும் வயிற்றில் தீ எழுகிறது.
பசியெனும் வறுமை இளமையில் கொடிது!
பசியால் குற்றங்கள் பயங்கரவாதம் வளர்கிறது.

ஒரு நாளில் ஒரு வேளையும்
ஒரு கிழமையில் மூன்று நாளும்
மருந்தாக உண்ணும் ஏழைகள் பலர்.
விருந்தாக ஏப்பமிட்டு உண்பவரும் பலர்

பசி வந்திடப் பத்தும் பறக்குமாம்
பதவிப் பசி, அறிவுப் பசியாம்,
பணப் பசி, ஆன்மிகப் பசியென
தேசியப் பசிகளான இவை பல.

பசியின்றேல் மாநிலத்தில் மனிதப் பிழைப்பேது!
பசியால் தோட்டம் வயலென இயக்கமெழுந்தது.
பசியுள்ளவன் ருசி அறியானாம்…..பழமொழி.
ருசியறிய வேலை ஆலையென உயர்ந்தான்

பா ஆக்கம் பா வானதி   வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.   1-6-2016

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

424. யதார்த்தமோ!……வேள்வியோ

35147_1439301339724_918527_n

 

யதார்த்தமோ!……வேள்வியோ

 

 

எத்தனையோ திருமணங்கள் வாய்
பொத்தி, முகம் புதைத்துத்
தத்தமக்குள்ளே அழுவதைக் காண
தாலியெனும் வேலி இல்லாத,
திருமணப் பதிவெனும் மதில்
இல்லாத சோடிகளின் இணைவின்
இன்பம் சிறந்ததுவோ! தவறோ!.

***

குழந்தை உருவாகினால் அந்த
மதிலுக்குள் சுயமாக அவர்கள்
புகுவதும், பெரியவர்கள் இதில்
தலையிடாத பந்தம் நவீனம்!

***

தாய்மை, தந்தைமைச் சுடரில்
வாய்க்கும் பரிசுத்தம் இதுவோ!
படைப்பெனும் மகா பேருண்மை
பரிசுத்தம் ஆக்குகிறதோ இளையோரை!
ஆழ்ந்த நேசத்தின் யதார்த்தமோ!
வாழ்வெனும் வேள்வி இதுவோ!
தாழ்கிறது பெரியோரின் பழைமை விதி.

***

பா ஆக்கம். வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
12-7-2010.

ssssd

27. பக்தி.

12366481_960475860699935_3994818969714866598_n

 

பக்தி மனசாரவும் கொள்கிறார்
பகட்டு பாசாங்காகவும் இருக்கிறார்.
கடவுள், குரு உறவுகளிடம்
கபடின்றிப் பரிமாறும் உணர்வாம்.
உருவிது ஒருவகை அன்புநிலை.
ஒருவித போதை நிலை
***
பக்தி, மனம் – ஐம்பொறிகளை
சக்தியால் அடக்கித் தியானித்தல்.
நான்கு ஆன்மிகப் பயிற்சிகளில்
ஒன்று பக்தி ஆகிறது.
ஞானம், கர்மம், இராஐம்
ஏன மூன்றும் ஆகிறது.
***
பக்தியால் பல வெற்றியாளர்
முத்தி நிலை அடைந்துள்ளார்.
சித்தியின் சக்தி இதுவென்பார்.
மன அமைதி வீரம்
கன நம்பிக்கை நிதானம்
தனமாகப் பக்தியால் பெறலாம்.
***
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
10474864_699684510086896_4159358153570174852_n

Previous Older Entries