422. மானுட நெருப்பு

b.gif-pp

 

மானுட நெருப்பு

***

அள்ளி அணைக்க விரும்பாது
பிள்ளைகள் பாசம் புரியாது
பிள்ளைகளை வெறுத்து பெரியோர்
தள்ளியே நிறுத்திப் பாசத்திற்கு
கொள்ளியே வைக்கிறார் நாகரிகமாக.
***
உள்ளத்தில் பாசமிருந்தால் உணர்வது
துள்ள தடைகள் விலக்கி
வெள்ளி வியாழன் பார்க்காது
கள்ளமற்ற மனம் கொண்டு
முள்ளு விலக்கி உறவாடுவார்.
***
நானென்றேவும் சகுனி மனம்
ஊன் உருக்கும் அகங்காரம்
கூன் விழுந்தால் மனிதம்
வான் உயர விரியும்.
தேன் வாழ்வில் வழியும்.
***
தனியன் ஆத்திரம் புழுவாகி
கனியையே பாழாக்கும் விதமாகி
குழுவாக குடும்பமாக விடமூட்டும்
அழுகிய மனங்கள் வாழ்வும்
முழுமையாகும் வழி உண்டா!
***
மனங்கள் நெருங்காது விலக்கி
மனசார காயமாக்கும் நடிப்பு
மறந்து மகிழ்வாய் உறவாடும்
மானிட நெருப்பு அருவருப்பு!
மனசு தெளிவது எப்போது!
***
பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
14-12-2015
Technique_Tuesday_Stamp_Set_Borderline_Vintage_Lace-3

12 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  ஜன 12, 2016 @ 01:49:40

  அருமை…

  மனம் போல் வாழ்வு…

  மறுமொழி

 2. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  ஜன 12, 2016 @ 04:20:39

  கவிதை நன்று சகோ

  மறுமொழி

 3. karanthaijayakumar
  ஜன 12, 2016 @ 14:11:59

  அருமை சகோதரியாரே
  நன்றி

  மறுமொழி

 4. பிரபுவின்
  ஜன 14, 2016 @ 17:20:57

  !!!!! பொங்கலோ பொங்கல் !!!!!💐💐💐💐💐💐💐💐💐
  கரும்பைப்போல் தித்திக்க,சர்க்கரை பொங்கலைப்போல் சுவையா இருக்க, வாழ்க்கையில் எல்லாச்செல்வங்கள் பெற்று வளமுடன் வாழ ஸ்ரீ அருள்மிகு நயினாதீவு நாகபூசணி அம்மன் அருளை வேண்டி வாழ்த்துகிறேன்.

  மறுமொழி

 5. கோவை கவி
  ஜன 30, 2016 @ 17:17:49

  Subajini Sriranjan :- மிக அருமை
  அழுகிய மனங்கள் வாழ்வும் முழுமையாகும் வழி உண்டா ???
  நல்ல கேள்வியோடு வந்த கவி அருமை
  December 14, 2015 at 3:57pm

  Vetha Langathilakam :- உண்மை தானே சுபா.. பண்ணும் கூத்தெல்லாம் பண்ணுவினம்.
  சொந்த வாழ்வு போகும் பாதையையும் மற்றவர்கள் கவனிப்பார்கள் தானே!…
  மிக்க நன்றி – மகிழ்ச்சி கருத்திடலிற்கு. …காத்திரமான ஒரு பதிவு.. கருத்திடத்தான் மக்கள் இல்லை
  லைக் அழுத்த நிறையப் பேர்..
  December 14, 2015 at 4:43pm

  Subajini Sriranjan:- முற்றிலும் உண்மை!!

  மறுமொழி

 6. கோவை கவி
  ஜன 30, 2016 @ 17:19:07

  IN PUTHUMAI..—-You and செந்தாமரை கொடி like this.
  Comments…
  செந்தாமரை கொடி :- ஆகா.. அருமைம்மா.. கொன்னுட்டீங்க..
  · 14-12-2015

  Vetha Langathilakam :- அனுபவம்டா!…அனுபவம்!…..அசை போட்டுப் போட்டு
  இன்று பிரசவம்!..
  நன்றிடா!… மகிழ்ச்சி….
  14-12-15

  செந்தாமரை கொடி :- அனுபவ முதிர்ச்சியும் பிரசவ வலியையும் தரிசிக்கிறேன் அம்மா.. ஒருசேர உங்களின் கவிதையில் சுகமான வலி
  December 14, 2015 at 7:24pm

  மறுமொழி

 7. கோவை கவி
  ஜன 30, 2016 @ 17:20:55

  Ashfa Ashraf Ali :- அருமை
  · December 14, 2015 at 5:21pm

  Vetha Langathilakam :- மிக மகிழ்வு கருத்திலிற்கு.
  அன்புடன் நன்றி. Ashfa Ashraf Ali
  December 14, 2015 at 5:52pm

  கவித்தென்றல் ஏரூர்:- மிகவும் அருமை
  14-12-15

  Vetha Langathilakam :- கவிதென்றல் ஏரூர் மிக மகிழ்வு கருத்திலிற்கு.
  அன்புடன் நன்றி.
  14-12-15

  மறுமொழி

 8. கோவை கவி
  ஜன 30, 2016 @ 17:23:35

  Abdul Hameed :- கவிதையாளர் வானதியின் கவிதை
  தமிழ் துள்ளி விளையாடுகிறது
  ஒவ்வொன்றும் தேன்
  துளியாய் இனிக்கின்றது.
  நன்றி சகோதரி.
  14-12-15

  Vetha Langathilakam :- Dear Andul Hameed ! சகோதரா எனது பெயர் வேதா. கணவரது பெயர் இலங்காதிலகம்.
  பா. என்றால் கவிதை
  வானதி என்றால் கடல்.
  நானாக வைத்த புனை பெயர் பா வானதி.
  தமது கருத்திற்கு மகிழ்வும் மிக்க நன்றியும் அன்புறவே.
  ஆனாலும் வானதி என்று பெயரும் பிடிக்கும்
  Just now 14-12-15

  Vetha Langathilakam replied · 4 Replies

  Sujatha Anton :- மனங்கள் நெருங்காது விலக்கி
  மனசார காயமாக்கும் நடிப்பு
  மறந்து மகிழ்வாய் உறவாடும்
  மானிட நெருப்பு அருவருப்பு!
  மனசு தெளிவது எப்போது!
  உண்மை. மானுடபிறப்பு எரியும் போதும் சாம்பல். எரிக்கும் போதும்
  அது வெப்பமாய் உடலையும் எரிக்கும். அருமை. மானுடன் புரிந்து
  கொள்வான்.
  December 22, 2015 at 3:56pm

  Vetha Langathilakam :- கருத்திற்கு மகிழ்வும் மிக்க நன்றியும் அன்புறவே.Sujatha Anton

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: