424. யதார்த்தமோ!……வேள்வியோ

35147_1439301339724_918527_n

 

யதார்த்தமோ!……வேள்வியோ

 

 

எத்தனையோ திருமணங்கள் வாய்
பொத்தி, முகம் புதைத்துத்
தத்தமக்குள்ளே அழுவதைக் காண
தாலியெனும் வேலி இல்லாத,
திருமணப் பதிவெனும் மதில்
இல்லாத சோடிகளின் இணைவின்
இன்பம் சிறந்ததுவோ! தவறோ!.

***

குழந்தை உருவாகினால் அந்த
மதிலுக்குள் சுயமாக அவர்கள்
புகுவதும், பெரியவர்கள் இதில்
தலையிடாத பந்தம் நவீனம்!

***

தாய்மை, தந்தைமைச் சுடரில்
வாய்க்கும் பரிசுத்தம் இதுவோ!
படைப்பெனும் மகா பேருண்மை
பரிசுத்தம் ஆக்குகிறதோ இளையோரை!
ஆழ்ந்த நேசத்தின் யதார்த்தமோ!
வாழ்வெனும் வேள்வி இதுவோ!
தாழ்கிறது பெரியோரின் பழைமை விதி.

***

பா ஆக்கம். வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
12-7-2010.

ssssd

9 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. karanthaijayakumar
  ஜன 20, 2016 @ 14:46:17

  உண்மைதான் சகோதரியாரே

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  ஜன 21, 2016 @ 01:18:46

  அருமை…

  மறுமொழி

 3. பிரபுவின்
  ஜன 23, 2016 @ 05:53:56

  அருமை👍🏻💯

  மறுமொழி

 4. கோவை கவி
  ஜன 30, 2016 @ 17:39:54

  Vithyasagar Vidhyasagar //எத்தனையோ திருமணங்கள் வாய்
  பொத்தி, முகம் புதைத்துத்
  தத்தமக்குள்ளே அழுவதைக் காண
  தாலியெனும் வேலி இல்லாத,
  திருமணப் பதிவெனும் மதில்
  இல்லாத//

  சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திக்கட்டும்..

  வித்யாசாகர்
  July 12, 2010 at 11:38pm · Like
  கவிதைச் சங்கமம் நீலமேகம்
  கவிதைச் சங்கமம் நீலமேகம் வாழ்வெனும் வேள்வி இதுவோ!
  தாழ்கிறது பெரியோரின் பழைமை விதி.

  அருமை.
  July 13, 2010 at 6:45am · Like

  மன்னார் அமுதன் :- சிறந்ததோ தவறோ எனக் கேட்டதால் சொல்கிறேன்…
  தாலி தமிழர் அடையாளம்… அது வேலியல்ல… எல்லாம் சரியாக இருக்கும் வரை தடைகளைத் தகர்த்தாலும் யாரும் கவலைப் படுவதில்லை… இரண்டாம் மூன்றாம் பந்திகள் நிலைக்க முதாலாம் பந்தியில் தாலி தேவை…
  July 13, 2010 at 7:57am · Like · 1

  Vetha Langathilakam !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
  July 13, 2010 at 8:26am · Like

  மறுமொழி

 5. கோவை கவி
  ஜன 30, 2016 @ 17:41:08

  Gowry Sivapalan :- வாழ்க்கை வாழ்வதற்கே அது பிறர் கேலிக்கு இடம் தராமல் இருந்தால் என்றும் சிறப்பே. தாலி எல்லாம் அடையாளச் சின்னம் மாத்திரமே
  July 13, 2010 at 9:55am · Like · 1

  Sakthi Sakthithasan :- Very meanigfull kavithai
  Anbudan
  Sakthi
  July 13, 2010 at 10:17am · Like

  Vetha Langathilakam :- இதன் கருத்து, பலருக்கு சீரணிக்க முடியாது, கருத்தும் கூற முடியாது. அப்படி ஒரு நெருடலான தீம் இது. சிநேகிதரின் அனுபவங்களை அருகிருந்து பார்த்து அனுபவித்தோ, சொந்த அனுபவம் இருந்தாலோ தான் உணர முடியும்.

  மறுமொழி

 6. கோவை கவி
  ஜன 30, 2016 @ 17:42:05

  Prabalini Composer :- என் தாலி உன் கழுத்தில் இருக்கும் வரை நீ என் அடிமை என்று சொல்லும் போதே
  பெண்ணுக்கு அங்கு உறவுக்கும் உணர்வுக்கும் உயிருக்கும் மதிப்பில்லை என்று அர்த்தமாகும்!
  அந்த அர்த்த மில்லாத வாழ்கை தேவையா?
  குழந்தைகளுக்காக என்று தொடர்ந்து அந்த வாழ்கையில் ஈடுபடுவது சோம்பேறித்தனம்.
  July 15, 2010 at 8:12pm · Like
  Vetha Langathilakam :- nanry pirabhalini.
  July 17, 2010 at 9:07am · Like

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: