425. பசி

 

pasi.png-2

 

சொல்லிப் புரியாது சொல்ல முடியாது
எல்லோரும் பெறுவது. அறவே தீராதது.
ஒரு நோய்! பெரும் பசி!
ஒரு சாண் வயிற்றுப் பசி!
படிப்படியாய் உயிர் வாழத் தூண்டுமுணர்வு.
அடிப்படைத் தேவை பசியெனும் உணர்வு.
உலகனைத்துச் சீவன்களின் பொது மொழி
அலக்கழித்து வாட்டும் இலக்கண வழி
***
உணவே பசிக்கு எரி பொருள்
உணவிற்காய் உலகையே புரட்டும் மருள்
பசி மயக்கம் உயிரையும் பறிக்கும்.
பசித்தால் பெரும் குசி பிறக்கும்.
தாளாப் பசியால் அறிவுடமை, தவம்,
தாளாண்மை, முயற்சி, வண்மை, குலம்:,
தானம், கல்வி, மானம், காமமெனும்
தசமும் பறக்கும். பசி ருசியறியாது.
***
பசி ஏழைகளின் சொத்து. இதை
பகடையாக்குவான் பணக்காரன் தன் சுகத்திற்கு.
பசித்தால் புலி புல்லையும் உண்ணாது.
பகுத்தறிவாளன் மனிதன் எதையும் உண்பான்.
பசியாமையும் ஒரு நோய். நன்கு
பசிக்க இஞ்சி சாப்பிடலாம். ஒரேயளவு
சீரகம் – உப்பு வாயில் மென்றால்
சீரான பசி ஏற்படும் முயலுங்கள்!
***
12390913_960433400704181_4120140646094119582_n

வேறு

பசி

*

பசிக் கொடுமையால் எலும்பும் தோலுமான
பசியுடை கறுப்பினப் பிள்ளை ஒன்று
பசுவின் மலவாசலில் வாய் வைக்கிறது
பசிக் கொடுமையில் சாணியை உண்பதற்கு.

படத்தை முகநூலில் பார்த்த பின்பு
பசியென்றதும் வயிற்றில் தீ எழுகிறது.
பசியெனும் வறுமை இளமையில் கொடிது!
பசியால் குற்றங்கள் பயங்கரவாதம் வளர்கிறது.

ஒரு நாளில் ஒரு வேளையும்
ஒரு கிழமையில் மூன்று நாளும்
மருந்தாக உண்ணும் ஏழைகள் பலர்.
விருந்தாக ஏப்பமிட்டு உண்பவரும் பலர்

பசி வந்திடப் பத்தும் பறக்குமாம்
பதவிப் பசி, அறிவுப் பசியாம்,
பணப் பசி, ஆன்மிகப் பசியென
தேசியப் பசிகளான இவை பல.

பசியின்றேல் மாநிலத்தில் மனிதப் பிழைப்பேது!
பசியால் தோட்டம் வயலென இயக்கமெழுந்தது.
பசியுள்ளவன் ருசி அறியானாம்…..பழமொழி.
ருசியறிய வேலை ஆலையென உயர்ந்தான்

பா ஆக்கம் பா வானதி   வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.   1-6-2016

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

15 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. karanthaijayakumar
  ஜன 24, 2016 @ 12:18:26

  பசி ஏழைகளின் சொத்து

  உண்மை
  அருமை சகோதரியாரே

  மறுமொழி

 2. DD
  ஜன 24, 2016 @ 12:29:44

  வாழ்த்துகள்….

  மறுமொழி

 3. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  ஜன 24, 2016 @ 12:54:11

  அருமையான வரிகள் நன்று வாழ்த்துகள்

  மறுமொழி

 4. Bagawanjee KA
  ஜன 24, 2016 @ 15:30:23

  பசி மயக்கத்தில் ,முதல் வரியில் …புரியாது என்பது பரியாது ஆகி விட்டதோ 🙂

  மறுமொழி

 5. nagendra bharathi
  ஜன 24, 2016 @ 15:59:00

  அருமை

  மறுமொழி

 6. கோவை கவி
  ஜன 30, 2016 @ 17:58:08

  Sivaraman Krishnapillai:- அருமை like emoticon
  Like · Reply · 16 hrs

  Vetha Langathilakam:- மிக்க நன்றியுடன் மகிழ்வும் கூறுகிறேன்
  தங்கள் வரவிற்கும் கருத்திற்கும்.Dear Sivaraman Krishnapillai
  Like · Reply · 16 hrs

  Sivaraman Krishnapillai :- பெருமதிப்பிற்கு உரிய பார் போற்றும் கவிஞை பா வானதி சகோதரிஅவர்களே , இஞ்சியும் சீரகமும் உப்புப் வாயிலிட்டேன் சோம்பல் பறந்து பெரும் அறிவுப் பசி எடுத்து விட்டதே .தங்கள் இலக்கியம் சேர்ந்த ஆயுள் வேதம் செய்த விந்தை இது.
  பசி வந்தால் பத்தும் பறந்துவிடும் என விளக்கமும் தந்துள்ளீர்கள்.மிக நன்று. நல்லாரை நாவில் உரை,பொன்னை கல்லில் உரை என்பார்கள். தாங்கள் உலகம் போற்ற நன்றே வாழ்க என நாவார செஞ்சாரப் வாழ்த்துகிறேன்
  Like · Reply · 13 hrs

  Vetha Langathilakam- Sivaraman Krishnapillai mikka makichy.
  Like · Reply · December 8, 2015 at 1:37pm

  மறுமொழி

 7. கோவை கவி
  ஜன 30, 2016 @ 17:59:38

  Seeralan Vee :- பத்தும்ப றக்குமென்ற
  பழமொழியின் உயிர்ப்பண்பை
  முத்துப்போல் வார்த்தையிலே
  மொழிந்தகவி தான்கேட்டு

  சித்தங்க மழ்ந்துள்ளே
  செயலற்று மௌனித்தேன்
  தித்திக்கும் நாவாசை
  திரளாதார் யாரிங்கே !

  பத்திரிக்கும் பசியெடுக்கும்
  பறந்துவந்து அலகள்ளும்
  அத்திரிக்கும் பசியெடுக்கும்
  அருந்தவத்தால் நிலையெடுக்கும்

  புத்திரிக்கும் பசியெடுக்கும்
  பொருந்தோழன் நினைவணைக்கும்
  சத்திரிக்கும் பசியெடுக்கும்
  சருகின்றி இலைபறிக்கும்

  இத்தரையில் காண்கின்ற
  இயற்கைக்கும் பசியெடுக்கும்
  மொத்தமாகச் சொல்லியதை
  மொழிந்துனான் வாழ்த்துகிறேன் !

  மிக அருமை
  Unlike · Reply · 2 · 7-12-15

  Vetha Langathilakam:- புலவரே எனக்கு வாழ்த்தா..பசிக்கவிதையா!.?…..
  Like · Reply · 1 · 15 hrs

  Seeralan Vee:- உங்கள் கவிக்கோர் கருத்தில் வாழ்த்து!
  Unlike · Reply · 2 · 15 hrs

  Vetha Langathilakam :- புலவரே மிக்க நன்றி மகிழ்ச்சி
  அசந்துவிட்டேன் தங்கள் கருத்தால்.
  கணவருக்கும் வாசித்க் காட்டி மகிழ்ந்தேன்.
  Like · Reply · Just now2-7-15

  மறுமொழி

 8. கோவை கவி
  ஜன 30, 2016 @ 18:00:56

  Sivaraman Krishnapillai :- பெருமதிப்பிற்கு உரிய பார் போற்றும் கவிஞை பா வானதி சகோதரிஅவர்களே , இஞ்சியும் சீரகமும் உப்புப் வாயிலிட்டேன் சோம்பல் பறந்து பெரும் அறிவுப் பசி எடுத்து விட்டதே .தங்கள் இலக்கியம் சேர்ந்த ஆயுள் வேதம் செய்த விந்தை இது.
  பசி வந்தால் பத்தும் பறந்துவிடும் என விளக்கமும் தந்துள்ளீர்கள்.மிக நன்று. நல்லாரை நாவில் உரை,பொன்னை கல்லில் உரை என்பார்கள். தாங்கள் உலகம் போற்ற நன்றே வாழ்க என நாவார செஞ்சாரப் வாழ்த்துகிறேன் with flower
  Like · Reply · 1 · 14 hrs

  மறுமொழி

 9. கோவை கவி
  ஜன 30, 2016 @ 18:02:33

  RRsel Vam :- வாழ்த்துக்கள்
  Like · Reply · 8-12-15

  Vetha Langathilakam மிக்க நன்றி மகிழ்ச்சி dear RRsel Vam
  Like · Reply · December 8, 2015 at 1:48pm

  Vetha Langathilakam என் இந்த முதல் பதிவு அழிந்து விட்டது
  முடிந்தால் கருத்திடுங்கள்.
  Like · Reply · December 8, 2015 at 2:19pm

  சிறீ சிறீஸ்கந்தராஜா:- தாளாப் பசியால் அறிவுடமை, தவம்,
  தாளாண்மை, முயற்சி, வண்மை, குலம்:,
  தானம், கல்வி, மானம், காமமெனும்
  தசமும் பறக்கும். பசி ருசியறியாது.
  Unlike · Reply · 1 · December 8, 2015 at 6:00pm

  Vetha Langathilakam:- @ சிறீ சிறீஸ்கந்தராஜா மிக்க மிக்க நன்றியும் மகிழ்வும்
  மறு கருத்திடலிற்கு..
  ஏதோ தவறுதலாக அழுத்தப் பட்டு விட்டது…
  Like · Reply · December 8, 2015 at 6:37pm

  மறுமொழி

 10. கோவை கவி
  ஜன 30, 2016 @ 18:05:37

  Jesuthas Thas :- Hai

  Like · Reply · 1 · December 8 – 2015at 6:07pm

  Vetha Langathilakam :- மிக்க நன்றி மகிழ்ச்சி dear Jesuthas Thas
  Like · Reply ·10-12-15

  Fowzul Ameen :- வாழ்த்துக்கள்
  Like · Reply · 1 · 10-12-15

  Vetha Langathilakam :- மிக்க நன்றி மகிழ்ச்சி dear Fowzul Ameen
  Like · Reply · 10-12-15
  Like · Reply · December 10, 2015 at 2:15pm

  செந்தாமரை கொடி:- அழகாய் சுவையாய் நடப்பன சொல்லிவிட்டீர்ரகள் அம்மா..

  நன்றியோடு வாழ்த்துகள் ..
  Like · Reply · 10-12-15

  Vetha Langathilakam:- மிக்க நன்றி மகிழ்ச்சி dear செந்தாமரை கொடி
  Like · Reply · 10-12-15
  Like · Reply · December 10, 2015 at 2:17pm

  Sujatha Anton :- சொல்லிப் பரியாது சொல்ல முடியாது
  எல்லோரும் பெறுவது. அறவே தீராதது.
  ஒரு நோய்! பெரும் பசி!
  ஒரு சாண் வயிற்றுப் பசி!
  நிறைந்த கருத்து. வாழ்க தமிழ்.!!
  Unlike · Reply · 1 · December 12, 2015 at 8:55pm
  Vetha Langathilakam

  மிக்க நன்றி மகிழ்ச்சி dear Sujatha Anton

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: