104. வெள்ளம் அதிர்ச்சி

12310675_10207036322483682_8337668232820974893_n

 

வெள்ளம் அதிர்ச்சி

 
எவ்வளவு மழை பெய்தாலும்
அவ்வளவு நீரும் வடிந்தோடும்
வடிகாலமைப்பு முறையை இனியாவது
முடிவெடுத்து அமைக்க பெரும்
அறிவுக் கண்கள் திறக்கட்டும்.
செறிவான ஆய்வு விரியட்டும்!
உயிர்கள் உடைமைகள் அநியாயமாய்
பறிபோகும் ஆபத்து குறையட்டும்!
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
2-12-15
imagesCA3RJKKL

42o. பழமை போற்றுதும்

palm-leaf-menusrcpits.jpg-oo

 

எனது அப்பா சொல்லுவார் நாங்கள் பெரியவர்கள் பிரச்சனைப் படுவோம் சேருவோம். அது வேறு விடயம் . நீங்கள் சிறுவர்கள் ஒருவரோடு ஒருவர் பேசிப் பழகுங்கள். முகம் சுழிக்கக் கூடாது சேர்ந்து விளையாட வேண்டும். என்று. அதாவது தாங்கள் உறவுகளோடு முரண் பட்டாலும் பிள்ளைகள் வேறுபாடு காட்டக் கூடாது என்று. அப்படி வளர்க்கப் பட்ட நான் இங்கு முகம் வெட்டித் திருப்பிய ஒரு இளம் பிள்ளையைக் கண்டேன். அந்த அனுபவம்
தந்த வரிகள் இவை .

பழமை போற்றுதும்

மூத்தோரை மதிக்கும் பண்பு
மூடத்தனம் இல்லா மாண்பு
மூடமதியான பாராமுகம் அகங்காரம்.
மூக்கறுத்தலான முகக்கடுப்பு நரகம்.
வயதிற்கு மரியாதை அளிக்கும்
வழிநடத்தும் பெற்றோர் அறிவுரை
வறுமையற்று வாரிசுகளிற்கு அவசியம்
வயதெல்லை இங்கு தேவையில்லை
***
ஆசிய கலாச்சாரம் கௌரவ
ஆசீர்வாதப் படிகப் பாதை!
கூசிடத் தேவையற்ற குணமிதை
வீசிடும் மனதைப் புதை!
மேற்குலகில் கலந்து சிறந்த
மேன்மைக் குணங்கள் மறந்த
தலைமுறைக்கு உரைக்க
நிறைந்த மலையாம் மனம் வளர்க!
***
பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
18-11-2015
Technique_Tuesday_Stamp_Set_Borderline_Vintage_Lace-4

103. மொழி நடனம்.

10606223_10207227471102278_7664644016532632731_n

 

இனிய 2016 எல்லோருக்கும் மலர்ந்துள்ளது.
கடந்த காலங்களில் எனது ஆக்கங்களிற்குக் கருத்திட்டு
ஊக்கம் தந்து ஆதரவு செய்த அனைத்து உறவுகளிற்கும்
மனமார்ந்த நன்றியையும் மகிழ்வையும் அன்புடன் கூறுகிறேன்.
இந்த ஆதரவு அதிகப் பெறுமதி வாய்ந்தது.
மேலும் உங்கள் ஆதரவு பெருகட்டும்.
எனது 2016 முதல் பதிவை இங்கு இடுகிறேன்

மொழி நடனம்.

 

சொல்லின் உள்ளார்ந்த ரசிப்பு
நெல்லிக் கனியின் ஆழத்தினிப்பு
நல்ல தத்துவார்த்த வடிப்பு
சொல்லுமுயர் எழுத்துச் சித்திரிப்பு.
மொழி நிருத்தம் ஆசியுடைத்து.
மொழி நிருத்தம் வலிவுடைத்து
மொழியும் வாக்கிய வாளிப்பிற்கு
மொழித்தூசியகற்றிக் கொம்பு சீவலாம்.
வேதா. இலங்காதிலகம்
டென்மார்க்.
1-1-2016.
Balloon Border-b

Next Newer Entries