72. மறக்கவியலா இன்ப வெள்ளம்!

Tamil-Daily-News-Paper_23010981083.jpg-gg

மறக்கவியலா இன்ப வெள்ளம்!

***

வெள்ளம் பலர் வாழ்வில் வேதனை
உள்ளம் வெதும்பத் துன்பச்  சோதனை
வெள்ளம் கொள்ளும் பெரும் கள்ளம்
பள்ளம் நோக்கித் தானே துள்ளும்.
***
தள்ளும் ஊரையே அழித்து முழுகும்
துள்ளும் குழந்தைகள் கப்பலிட மகிழும்
வெள்ளம் என்றதும் எனக்கும் நினைவில்
வள்ளத்தின் பயணம் வரும் நிறைவில்.
***
அன்று இலங்கைத் தேயிலைத் தோட்டத்தின்
நின்றாளும் அதிகாரியாக என் துணைவர்
வென்றது வெள்ளம் காலு கங்கையால்
தெருவினை மேவிப் பாய்ந்ததே கடல்!.
***
தேயிலைக் கொழுந்து மூட்டைகள் தொழிற்சாலைக்குத்
தேவதூதர்களாய் தோணிக்காரர்கள் உதவிக்கு, கொழுந்துக்
கோணிகள் தோணியில்! நாமுமதில் பயணிகளாய்
தோற்றம் காஷ்மீரப் படகுப் பயணமாய்!
***
பா ஆக்கம் பா வானதி
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
5-1-2016.

வேறு

காத்திருக்கும் தோணிகள்…

பாத்திரமும் பசித்த வயிறும் காய
ஆத்திரமுற்ற அரசின் அவசரகால நிலையால்
நேத்திரம் சோர மீனவர் கரையிலேஇ
காத்திருக்கும் தோணிகள் மீன் பிடிக்கவென.

உயிருக்கும் வாழ்வுக்கும் உத்தரவாதமின்றி
உற்றம் சுற்றம் பார்க்காது மக்கள்
ஊரைஇ நாட்டை விட்டு வெளியேற
உதவும் குழுக்களுடன் காத்திருக்கும் தோணிகள்.

களுகங்கை பெரு மழையால் பெருகியது.
கடலாகப் பாதைஇ தோணியில் பயணம்.
காலையும் மாலையும் தேயிலைக் கொழுந்துகளை
காத்திருந்த தோணிகளில் தொழிற்சாலைக்கு ஏற்றினர்.

கழுத்துறை மாவட்ட கொக்கேனைத் தோட்டத்தில்
கணக்கற்று வெள்ளம் பெருகும் வேளையில்
காலையும் மாலையும் தோணிகளில் நாமும்
காஷ்மீரம் போல் சுற்றுலா காத்திருந்த தோணிகளில்.

6-11-2008

http://www.vaarppu.com/padam_varikal.php?id=22

Big Blue Divider

432. இழிவு

1531689-

 

இழிவு

***

அழிவுப் பாதையில் செல்வதெதுவும் இழிவு
குழிவும் ஒரு சமதரைக்கு இழிவு.
பொழிப்புரை பிரசங்கமாய் அமைதல் இழிவு
பிழிவென்பது விரிந்த பேச்சுரைக்கு இழிவு.
மொழியில் எழுத்துப் பிழை இழிவு
பொழிலில்லா ஊரில் பொலிவு இழிவு.
வழிமறித்துக் கொள்ளையடிப்பு மகா இழிவு.
முழிதல் முகத்திலானால் பண்பிற்கு இழிவு
***
.
விழிப்புணர்வுத் தகவல்களைப் பின்பற்றாமை இழிவு
தொழிலில்லாக் குடும்பம் சந்திப்பது இழிவு.
செழிப்புடை நாட்டில் போர் இழிவு.
வழிபடுதலால் வாழ்வில் வராது இழிவு.
பொழிதல் அதிகரித்தது வெள்ளத்தால் இழிவு.
மழிக்காத முகம் அவலட்சண இழிவு.
முறையிடா மக்களால் நாட்டிற்கு இழிவு.
இறையில்லா நாட்டில் இலட்சுமீகரம் இழிவு
***
பா ஆக்கம் பா வானதி
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
leaf-border-23321698

431. கருத்து (கருத்தெழுதல்)

12042942_10206678399935842_3512154532415023591_n

 

கருத்து (கருத்தெழுதல்)

***

விழுமியோரிpன் கருத்துப் பட்டாசு
எழுத்துக்கு ஒரு பண்டிகை.
அழுத்தும் நல்லாணிக் கருத்து
அழுகச் செய்யும் பொய்களை
விழும் கருத்துமழையால் எழுத்தாளன்
செழுமையுறுவான் – வேர் பரவும்.
மெழுகும் நற் கருத்து
உழுது மனம் பண்படுத்தும்.

***

அழுக்காறு நற் கருத்தை
எழுத என்றும் அனுமதிக்காது.
எழுது வழுது பிழைகளை.
வழுநிலை எழுதினால் தோழமை
பழுதாகும் என்ற பயமேன்!
எழுது கோல் தூரிகையால்
ஒழுகும் கருத்து வண்ணம்
பழுதற்றால் நன்மை பயக்கும்.

***

எழும் புகழும் கருத்துகளும்
முழுதாக்கும் வரலாற்று மாளிகையை.
விழுதாகும் கருத்துப் பூக்கள்
தொழும் நிலையையும் உருவாக்கும்.
தழுவும் உயர்வுக் கருத்து
முழுதான உண்மையில் எழட்டும்.
இழுத்து நீள்வது நேர்மையே.
இழுக்கு மழுப்பும் கருத்து!.

***

( வழுது – பொய். வழுநிலை – சொல் தவறாக வரும் தன்மை.
மழுப்பும் – தாமதப் படுத்தல், ஏமாற்றுதல்)

***

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
8-7-2015

samme heading:-   https://kovaikkavi.wordpress.com/2014/12/19/350-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

samme heading..https://kovaikkavi.wordpress.com/2016/02/18/431/

 

 

 

download

59. காதலர்கள் வாழ்க!

aa

காதலர்கள் வாழ்க!

***

காதல் விளக்குகள் சுடர
காதல் மொழிகள் படர
காதல் கூடலில் காதலர்கள்
காதலர் தினமாம் மாசியில்
நெஞ்சு நிறையும் காதல்
நெகிழ்ந்து வழியும் போதில்
மிஞ்சும் காதலர் நாள்
கொஞ்சிட வந்ததோ இன்று.

***

காதல் அரண்மனைச் சோடிகள்
கூதலில் மஞ்சள் வெயிலில்.
நோதலற்ற இணைவு மஞ்சளழகில்.
இதயம் உள்ளெடுப்பது காதற்தென்றல்.
பட்டுச் சிறகடிக்கும் காதல்
தட்டுத் தட்டாய் உயரட்டும்.
ஏட்டட்டும் அந்த நிலாவை.
குட்டட்டும் காதலர்தின வாழ்த்துக்கூடு

***

பா ஆக்கம் பா வானதி
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
14-2-2016

***

pv_590.jpg-l

stock-vector-set-of-ornamental-floral-rule-lines-underlines-31318351-d

430. உறவு

945883_10207254052286791_3144058030268178970_n

 

உறவு

***

உறவு நடிப்பாகினால்
உதறுதல் நன்றாகும்.
உடனிருப்பதில் அருத்தமென்ன!
நெருங்காத மனங்களாலிதயம்
வருந்த வேண்டாமே!
***
துரோகத்தின் காலடிகள்
துவம்சமாக்கும் பாதையை.
உறவின் அரும்பெருமைகளை
பறக்க விடுதலால்
இறக்கிறது உறவுன்னதம்.
***
உறவு ஊனின்
உள்ளுறையும் ஆணிவேராய்
உணர்வெனும் பண்பிற்கு
ஆதாரமாய் உள்ளது.
உடலையும் வாழவைக்கிறது.
***
வேதா. இலங்காதிலகம்
டென்மார்க்
20-12-2015
***
ssssssss-c

71. இயற்கை.

1078734_10207195917153449_1051826847720359982_o

 

இயற்கை.

 

***

வானம் பொழிந்து பூமி நனைக்கும்
தானமாம் பசுமை இயற்கை அழகு.
கானம் நிறைந்த கவிதைக் குவியல்
நடனம் நிறைந்த கலை அழகு.
பச்சைப் புல்நுனிப் பனிநீர் அழகு
இச்சையின்றியமரும் பனிப் படலம் அழகு.
அச்சம், அச்சானியம், அசமந்தம் அதிசயம்!
இச்சம், இச்சகக் கணங்களும் இயற்கை.
***
குயில் கூவும் இன்ப இசை
மயிற் பீலியின் மென்மை அசை
வெயில் மின்னும் வெள்ளி அலை
உயில் எழுதிய இயற்கை வலை.
ஆங்காரம், ரீங்காரம், காங்கை, உயரும்
ஓங்காரம், தீங்கனி, பூங்கா நுகரும்
ஏங்கும் இயற்கை இறைமை அருமை.
தேங்கும் இயற்கையை ரசிக்காமை கொடுமை.
***
இயற்கை உணவு, வாழ்வு இசைந்தது.
செயற்கையாய் உணரும் கேடு கசந்தது.
முயற்கொம்பு அல்ல வியக்கும் இயற்கை.
வயற்காட்டிலும் வசமாகும் இன்ப இயற்கை.
காட்டில் நடை பயிலல் இலங்கையில்
மாட்சிமையற்ற பயங்கரம்! இங்கு நாம்
நாட்டமாய் காட்டில் உலாவுதலை அனுபவிப்போம்.
வாட்டமின்றி இயற்கையை மனதார சுவாசிப்போம்.
***
பா ஆக்கம் பா வானதி
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
27-12-2015
***
tulip-garden-clip-art-row-tulips-white-picket-fence-stock-photos---image--4463253-pictures

429. கவிதைப்போட்டி. 06. உவகை –

கவிதைப்போட்டி. 06. உவகை ————————————————

 
தமிழ்க் கவிதைப் பூங்கா —————————————————- கவிதைப்போட்டி. 06. உவகை ————————————————–
முதல் பரிசு: Vetha Langathilakam
கவிதை : —————————————————–– ” உவகை, மகிழ்ச்சி.களிப்பு, காமம், கவிகை, அன்பு, இன்பச்சுவை, பேருவகை, சிலிர்க்கும் இன்பத்தொகை சிவிகையில் ஏற்றுவோம் இன்பச்சுவையை” —————————————————- —————————- “உவகை என்பது உள்ளத்தின் விருப்பம்; உடனேக் கிடைத்தவுடன் உள்ளத்தின் மகிழ்வை…….” –—————————————————-
போட்டியில் பங்குப்பெற்ற அனைத்துக் கவிகளுக்கும் நல்வாழ்த்துக்கள்.
பரிசுக்கு தேர்வு செய்யப் பட்டிருக்கும் நான்கு கவிகளுக்கும் பாராட்டுக்கள்.
-Dr வே. புகழேந்தி. —————————————————–
 
12369145_10207128435386447_1602370463348989127_n

உவகை

***

உவகை, மகிழ்ச்சி, களிப்பு, காமம்,
கவிகை அன்பு இன்பச் சுவை.
பேருவகை சிலிர்க்கும் இன்பத் தொகை.
சிவிகையில் ஏற்றுவோம் இன்பச் சுவையை.
***
உள்ள உணர்வுச் சுவை உவகை.
எள்ளும் பகையழித்தல் வெற்றிப் பேருவகை.
முள்ளாகும் ஊடல் காதலுக்குச் சுவை.
மெ ள்ள ஆனந்தக் கண்ணீரோட்டும் உவகை.
***
கருமேக வானில் நட்சத்திரம் எண்ணல்
கரை மடியுமலைகள் சொற்சித்திரம் எழுதல்.
கனிந்த மழலை மழலை பேசல்
கரை காணா உவகை தமிழோடுறவாடல்.
***
அவமாகும் எதுவும் அளவிற்கு மிஞ்சினால்.
உவகையும் அளவோடு இருத்தல் சிறப்பு.
சுவிகையும் (கள்) மது அருந்துவோனுக்கு உவகை.
உவகையால் ஆனந்திக்குமுள்ளம் வரையும் கவிதை.
***
பா ஆக்கம் பா வானதி
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
18-12-2015.
5majil

428. அமைதி

lorenz_attractor-s

 

அமைதி

 

எப்படி எழுதினாலும் நான்
எழுதும் வரிகள் எடுபடுமா.
எழுதாமல் அமைதியாக இருக்க
என் ஆர்வம் விடுவதில்லை.
***
சத்தமில்லாத அமைதியும் அழகு.
முத்தமில்லாத உறவும் அமைதியே.
புத்தகம் வாசிக்க அமைதியுமுச்சமே.
சித்தப் பிரமையும் மூளையினமைதியோ!
***
குழுவிற்கு ஆக்கம் போட்டாலே
குமாரி கருத்திடுவாள். வேறெங்கும்
பார்க்காத இவளமைதியெனக்குக் கேடு!
ஈர்க்காத போக்கு சிலரமைதி.
***
காந்தமாயீர்க்கும் அமைதி தெய்வீகம்!
சாந்தி சமாதானம் நாடு
ஏந்தும் அமைதி! நாமே
பாந்தமாயதைக் கொடுத்தல் அழகு!
***
பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
6-1-2016.
 
silence