431. கருத்து (கருத்தெழுதல்)

12042942_10206678399935842_3512154532415023591_n

 

கருத்து (கருத்தெழுதல்)

***

விழுமியோரிpன் கருத்துப் பட்டாசு
எழுத்துக்கு ஒரு பண்டிகை.
அழுத்தும் நல்லாணிக் கருத்து
அழுகச் செய்யும் பொய்களை
விழும் கருத்துமழையால் எழுத்தாளன்
செழுமையுறுவான் – வேர் பரவும்.
மெழுகும் நற் கருத்து
உழுது மனம் பண்படுத்தும்.

***

அழுக்காறு நற் கருத்தை
எழுத என்றும் அனுமதிக்காது.
எழுது வழுது பிழைகளை.
வழுநிலை எழுதினால் தோழமை
பழுதாகும் என்ற பயமேன்!
எழுது கோல் தூரிகையால்
ஒழுகும் கருத்து வண்ணம்
பழுதற்றால் நன்மை பயக்கும்.

***

எழும் புகழும் கருத்துகளும்
முழுதாக்கும் வரலாற்று மாளிகையை.
விழுதாகும் கருத்துப் பூக்கள்
தொழும் நிலையையும் உருவாக்கும்.
தழுவும் உயர்வுக் கருத்து
முழுதான உண்மையில் எழட்டும்.
இழுத்து நீள்வது நேர்மையே.
இழுக்கு மழுப்பும் கருத்து!.

***

( வழுது – பொய். வழுநிலை – சொல் தவறாக வரும் தன்மை.
மழுப்பும் – தாமதப் படுத்தல், ஏமாற்றுதல்)

***

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
8-7-2015

samme heading:-   https://kovaikkavi.wordpress.com/2014/12/19/350-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

samme heading..https://kovaikkavi.wordpress.com/2016/02/18/431/

 

 

 

download

15 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  பிப் 19, 2016 @ 05:13:33

  அழகிய வரிகள் சகோ

  மறுமொழி

 2. மீரா செல்வக்குமார்
  பிப் 19, 2016 @ 06:24:35

  தழுவும் உயர்வுக் கருத்து
  முழுதான உண்மையில் எழட்டும்.///

  அருமை..அருமை…

  மறுமொழி

 3. மீரா செல்வக்குமார்
  பிப் 19, 2016 @ 06:25:30

  அருமை அருமை…

  மறுமொழி

 4. மீரா செல்வக்குமார்
  பிப் 19, 2016 @ 06:26:03

  அருமை…அருமை…

  மறுமொழி

 5. Bagawanjee KA
  பிப் 19, 2016 @ 07:43:25

  ‘ழு’விலே கோர்த்த பாமாலையை படித்து ரசித்தேன் 🙂

  மறுமொழி

 6. கோவை கவி
  பிப் 29, 2016 @ 12:26:01

  மறுமொழி

 7. தனிமரம்
  பிப் 29, 2016 @ 22:11:02

  அருமையான கவி வழு அதிகம் வருகின்றது எழுதும் போது)))

  மறுமொழி

 8. கோவை கவி
  ஏப் 20, 2016 @ 07:46:30

  Sujatha Anton :- மிகவும் கருத்தாளம் மிக்க தமிழ். அதிலும் அழகு தமிழ். வாழ்க வளர்க!!!
  Unlike · Reply · 1 · September 22, 2015 at 4:43pm

  Vetha Langathilakam:- mikka mkilvu…mikka nanry sis
  Like · Reply · Just now 20-4-16

  மறுமொழி

 9. கோவை கவி
  ஏப் 20, 2016 @ 07:47:44

  Subajini Sriranjan :- அழகு தமிழில் வரிகள்.
  அருமை.
  Unlike · Reply · 1 · September 22, 2015 at 7:29pm

  Vetha Langathilakam:- mikka mkilvu…mikka nanry Sujatha – Subajini….
  Like · Reply · September 22, 2015 at 9:09pm

  Alvit Vasantharany Vincent :- அழகு தமிழில் கருத்தான கவிதை. வாழ்த்துக்கள்!
  Unlike · Reply · 1 · September 26, 2015 at 6:10pm

  Vetha Langathilakam :- mikka mkilvu…mikka nanry sis
  Like · Reply · 1 min 20-4-16

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: